Tuesday, February 5, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

இந்த உலகின் கண் உள்ள அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும்  நான் அரவணைக்கிறேன்

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

Monday, February 4, 2013

படித்ததில் பிடித்தது,

அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்கிறார்களே, இது உண்மையா?

          சற்று கூட உண்மை இல்லை. அம்மாவாசையில் பிறந்தவர்களுக்கு திருட்டு குணம் உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.
அம்மாவாசையில் பிறந்தவர்களுக்கு திதி சூன்யம் கிடையாது. இங்கு ஒரு விஷயம் சொல்லத்தான் வேண்டும். அகத்தியர் தனது ஜோதிட காவியம் எனும் நூலில் திதி பலன்களை கூறும் போது அம்மாவாசைக்கான பலன் மட்டும் அவரால் அளிக்கப்படவில்லை.

அம்மாவாசையில் பிறந்தவர்களுக்கு திருட்டு குணம் உருவாகும் என்பதற்க்கு ஜோதிட பூர்வமாக எந்த ஆதாரங்களும் இல்லை.  ஆனால் இந்த பொய்யான கருத்து எப்படியோ மக்களிடையே பரவி விட்டது.

அழகிய முகம்! இளகின மனம்!

ஜார்கண்ட்  மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் சாரதா தேவியாரின் பிறந்த நாள் விழா நடந்தது.  அன்னை சாரதாவின் படத்தை அலங்கரித்து ஒரு வண்டியில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். அந்த வண்டியில் துபுதனா கிராமத்தினைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பத்து வயது சிறுமிக்கு சாரதா தேவி போல வேடமிட்டு அமர வைத்திருந்தனர். அவளது அழகு முகத்துக்கு, அந்த வேடம் மேலும் அழகு சேர்த்த்து.

ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த விமோக்‌ஷானந்தர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.  ஊர்வலம் முடிந்ததும் ஆர்த்தியை வண்டியை விட்டு இறக்கி, புல் தரையில் அமர வைத்தார்கள்.    விமோக்‌ஷானந்தர் அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.

“துபுதனாவிலிருந்து எத்தனை மணிக்கு கிளம்பினே?”

“காலை ஏழு மணிக்கே கிளம்பிட்டேன் சுவாமி, ராஞ்சி வந்ததும், என் அக்கா எனக்கு அம்மாவைப் போல் (சாரதாதேவி) வேடமிட்டு வண்டியில் அமர வைத்தாள்”.

”ரொம்ப நேரமாயிட்டுதே!  காலையில் ஏதாவது சாப்பிட்டாயா?” என்ற சுவாமிக்கு சிரிப்பை பதிலாகக் கொடுத்தாள் ஆர்த்தி.

அவளுக்காக கொஞ்சம் பிரசாதம் வாங்கி, “இந்தா! இதையாவது சாப்பிடு,” என்றார் சுவாமி. அவள் அதை சாப்பிடாமல் கையில் வைத்திருந்தாள்.

“ஏன்…சாப்பிடவில்லை?,” சுவாமி கேட்டார்.

“காலையில் கிளம்பும்போதே என் அம்மா எதையும் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி அனுப்பினா,”.

ஆர்த்தி பரம ஏழை. அவளது அம்மா கூலி வேலை செய்து ஆர்த்தியையும், இன்னும் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுகிறாள். தந்தையோ முழு சோம்பேறி. வேலைக்கே போவதில்லை. பசியோடு போராடும் அந்தச் சிறுமி சாப்பிட மறுப்பது ஏன்? விமோக்‌ஷானந்தருக்கு ஒன்றும் புரியவில்லை.

“அம்மா ஏன் சாப்பிடக்கூடாது என்று சொன்னாள்?” அவளிடமே கேட்டுவிட்டார்.

“சுவாமி! அன்னை சாரதாதேவி, ஆஸ்ரமத்திலுள்ள தன் சீடர்கள் எல்லாரையும் தன் பிள்ளைகளாகக் கருதினார். அவர்கள் சாப்பிட்ட பிறகே, அன்னையும் சாப்பிடுவார். அன்னையின் வேடமிட்டுள்ள நீயும், நிகழ்ச்சி முடிந்து எல்லாரும் சாப்பிட்ட பிறகே மிச்சமிருந்தால்தான் சாப்பிட வேண்டும் என்று என் அம்மா சொல்லியனுப்பினாள்,” என்றாள்.

“ஆகா! இந்தக் குழந்தையைப் எல்லோரும் மாறிவிட்டால்…இந்த உலகம் எவ்வளவு அன்புள்ளதாக மாறிவிடும்.  ஒட்டுமொத்த சமுதாயமும் மேம்பட்டு விடுமே! இத்தகைய பக்தியினை எங்களுக்கும் அருளுங்கள்,” என்று அன்னையிடம் விமோக்‌ஷானந்தர் வேண்டினார்.

என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும். நானே அனைவருடைய ஆட்சியாளனாக இதயத்தில்  அமர்ந்து இருக்கிறேன்.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

Sunday, February 3, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

எனது லீலைகள், கதைகள் கேட்கப்பட்டால் எல்லா

 நோய்களும் விலகும்

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

Saturday, February 2, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

சாவின் வாயிலிருந்து என் அடியார்களை நான் வெளியே இழுத்து விடுவேன்.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

Friday, February 1, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

எவன் என்னிடம் பூரண சரணாக்தி அடைகிறானோ, எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாக தியானம் புரிகிறானோ அவனை துன்பங்களில் இருந்து விடுவிப்பது எனது சிறப்பு இயல்பாகும்.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...