Friday, April 29, 2016

இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி....

ஒருவன் கடவுளைத் தேடிக்கொண்டே நடந்தான். சற்று தூரம் சென்ற பின், யாரென்றே தெரியாத ஒருவர் தன்னைப் பின்தொடர்வதைப் பார்த்தான். அவன் மனதில் லேசாக ஒரு சஞ்சலம் தோன்றியது.

மனதில் லேசாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ‘ நீ யார்? எதற்காக என்னை நீ பின் தொடர்கிறாய்?’ என்று தன்னைத் தொடர்பவனிடம் கேட்டான்.

‘அய்யா, என்னை ஒருவன் தேடிக்கொண்டு இருக்கிறான். அவனிடம் செல்வதற்காக நான் வந்துக்கொண்டிருக்கிறேன்’ என்றான் அவன்.

‘இங்கே, கண்ணுக்கெட்டிய வரையில் யாரும் தென்படவேயில்லை. அப்படியிருக்க, யார் உன்னை தேடிக்கொண்டிருக்க முடியும்? வேறு வழியாகப் போய் பார்!’ என்று கூறிவிட்டு வந்த வழியே திரும்பினான் தேடியவன்.

சற்று தூரம் சென்ற பிறகு திரும்பிப் பார்த்தான். அப்பாடா! யாரும் இல்லை, தப்பித்தேன்! என்று கூறிக்கொண்டே நடந்தான். தொடர்ந்து வந்தது கடவுள் என்பதை அறியாமலேயே!

சரி, அப்போது தொடர்ந்த கடவுள், இப்போது ஏன் தொடரவில்லை என நீங்கள் யோசிக்க வேண்டாம்.

முதலில் அவன் மனதில் கடவுளை தேடும் தவிப்பு இருந்தது. அதனால் கடவுள் தொடர்ந்து தெரிந்தார்.  ஆனால் இப்போது அவர் போனால் போதும் என்ற எண்ணமே மனதில் இருந்தது. அதனால் அவர் மறைந்தார்.

பாபா கைவிட மாட்டார்!

இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சாயி கதையைக் கேட்டும், அற்புதங்களைக் கேட்டும் என்றாவது ஒருநாள் சீரடி செல்லவேண்டும் என்பதை லட்சியமாகவே கொண்டிருந்தேன்.
2009ல் தீராத வயிற்றுவலி, காய்ச்சல் என அவதிப்பட்டேன். 20 நாட்களுக்குப் பிறகு காமாலை முற்றிவிட்டதாகவும், பித்தப் பையில் கல் இருப்பதாகவும் உடனடியாக அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை என்றும் அறியப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பாபாவைப் போலவே காட்சியளித்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரது உருவம் மறைந்து நிஜமான டாக்டர் உருவம் தெரிந்தது. விரைவில் குணமடைந்து, ஒரே மாதத்தில் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசித்து வந்தேன்.
இரண்டாவது முறையாக பாபாவின் அருளை ரயில் பயணத்தின்போது உணர்ந்தேன். சென்னையிலிருந்து என் பெண் வீட்டுக்கு கணவருடன் புறப்பட்டேன். புறப்படும் முன்பு ரயில் நிலையத்தில் ஸ்ரீ சாயி தரிசனம் புத்தகத்தை இரண்டு வாங்கினேன். என் மகளுக்காக ஒன்று.
ரயிலில் அமர்ந்த சிறிது நேரத்தில் எல்லோரிடமும் பயணச் சீட்டைச் சரிபார்த்தபடி வந்த டிக்கெட் பரிசோதகர், ஒரிஜனல் சீட்டு இல்லாதவர்களிடம் அபராதம் வசூலித்துக் கொண்டு வந்தார்.
அப்போதுதான் நாங்களும் ஒரிஜனல் கொண்டு போகாத தவறை உணர்ந்தோம். ஆனால், அபராதத்தொகையைக் கட்டவேண்டியிருக்குமே என்ற பயம் ஏற்பட்டது. என் கணவர் புலம்பினார். சாயிராம், தெரியாமல் ஆதார் அட்டை கொண்டு வராமல் விட்டுவிட்டோம். என் பொருளாதார நிலையில் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டும் சக்தி என்னிடம் இல்லை.. காப்பாற்று என வேண்டினேன்.
சாயி தரிசனம் புத்தகம் வடிவில் பாபா என்னுடன் வரும்போது அபராதம் கட்ட விடமாட்டார் என உறுதியாக நம்பினேன். எங்களை பரிசோதித்த டி.டி., எங்களிடம் ஒரிஜனல் இல்லை என்பதை அறிந்து, இனிமேல் இந்தத் தவறை செய்யாதீர்கள் என எச்சரித்து எங்களை விட்டு அகன்றார்.
அதன் பிறகு எந்தத் தொல்லையும் இல்லாமல் சுகமாகப் பயணித்துச் சென்று வந்தோம்.
என். பானுமதி நடராஜன், சென்னை

வீணாக சந்தேகப்படாதே!


காகா மகாஜனி நம்பிக்கையே உருவானவர்,  அவரது முதலாளி டக்கர் நம்பிக்கை இல்லாதவர்.  பாபாவை சோதிக்க நினைத்து சீரடிக்கு காகாவுடன்  பயணப்பட்டார். வரும் வழியில் காகா பாபாவுக்கு திராட்சைகளை வாங்கினார். தனது முதலாளியுடன் சீரடி வந்து பாபா தரிசனத்திற்காகக் காத்திருந்தார்.
தர்கட் என்ற பக்தரை சந்தித்த டக்கர்,  “இங்கு ஏதாவது அற்புதங்கள் நிகழ்கின்றனவா? என்று கேட்டார். சாயி தரிசனத்திற்காக வந்திருப்பதாகவும், அற்புதங்கள் நிகழ்கிறதா என பார்ப்பது தன் வேலையல்ல, ஆனால் பிரார்த்தனைகள் இங்கு கேட்கப்படுகின்றன என்று தர்கட் பதில் கூறினார்.
காகா கொண்டுவந்திருந்த திராட்சையில் ஒரு சிலவற்றை பாபா டக்கருக்குக் கொடுத்தார். அவருக்கு திராட்சை பிடிக்காது. அதிலும் கழுவப்படாத திராட்சைகளை சாப்பிடுவது அருவருப்பாக இருந்தது. ஆனால் பாபாவால் தரப்படுகிறதே என்ற எண்ணத்தில், அதை வாங்கி சம்பிரதாயத்திற்காக வாயில் போட்டுக் கொண்டார். அதில் கொட்டைகள் வேறு இருந்தன. அவற்றை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
பாபா ஞானியாக இருந்தால், தனக்கு திராட்சை பிடிக்காது என்ற விக்ஷயம் தெரியாதிருக்குமா? என்ன ஞானி இவர் என்று நினைத்தார். அவர் எதிர்பாராத வகையில் மேலும் சில திராட்சைகளை பாபா கொடுத்து, சாப்பிடச் சொல்லி கேட்டுக்கொண்டார்.
அவருக்கு ஆச்சரியம்! இப்போது சாப்பிட்ட திராட்சையில் விதைகளே இல்லை. அவருக்கு பாபா செய்த அற்புதங்கள் புரிந்தன. ஆனால் மேலும் அதை சோதிக்கவும், உறுதிப்படுத்தவும் நினைத்து, பக்கத்தில் இருந்த தர்கட்டிடம், ”எந்த வகை திராட்சையை வைத்திருக்கிறீர்? ” என்று கேட்டார்.
”விதையுள்ள திராட்சை” என்று தர்கட் பதிலளித்தார்.
அப்போதும் டக்கருக்கு பாபாவை சோதிக்க விருப்பம். தன் நம்பிக்கையை வளர்க்க பாபா இந்த அற்புதத்தைச் செய்திருந்தால், அல்லது அவர் உண்மையான ஞானியாக இருந்தால், இந்த திராட்சையை முதலில் காகாவுக்குக் கொடுக்கட்டும்
என நினைத்தார். இந்த எண்ணத்தையும் அறிந்த பாபா, காகாவிடம் தொடங்கி திராட்சை பிறருக்கு விநியோகம் செய்யப்படட்டும்  என ஆணையிட்டார்.
இப்போது டக்கருக்கு பாபாவின் மீதிருந்த நம்பிக்கை அதிகமானது. ஆரத்தி முடிந்து பாபாவின் அனுமதிக்காகச் சென்றார். இவரை காகா பாபாவுக்கு அறிமுகப்படுத்தும்போது, தன்னுடைய எஜமானர் என்று அறிமுகப்படுத்தினார்.
இவர் எப்படி உன் எஜமானராக இருக்கமுடியும்? இவருக்கு வேறு ஒரு எஜமானர் இருக்கிறார் என்று கூறி விட்டு, ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
நிலையற்ற புத்தியுள்ள ஒரு மனிதன் இருந்தான். செல்வம், ஆரோக்கியம் எல்லாம் இருந்தன. மன வேதனைகளும் இல்லை. ஆனாலும் தேவையற்ற கவலைகளையும் பாரங்களையும் தன் மீது போட்டுக் கொண்டு, மன அமைதியை இழந்து அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தான். ஒரு முறை கவலையை இறக்கி வைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது.
ஐயோ பாவம் அவன்!  அவனுக்கு உதவி செய்ய இரக்கம் கொண்டேன். இப்போது நீ விரும்பும் ஏதாவது ஒரு இடத்தின் மீது நம்பிக்கையை தயவு செய்து வைப்பாயாக. வீணாகச் சுற்றுவதைக்காட்டிலும் எதன் மீதாவது நம்பிக்கை வைத்து அதைப் பற்றிக்கொள் என்று வழி காட்டினேன் என்று கூறினார்.
இந்த கதை தனக்காக சொல்லப்பட்டது என்றும், பகவானை சோதிக்கக்கூடாது என்றும் டக்கர் புரிந்துகொண்டார்.

Thursday, April 28, 2016

சீரடிக்கு வாங்க!




சீரடி சாயி பாபா முதன் முதலாக சீரடி வந்தபோது மகல்சாபதிதான் அவரை வரவேற்றார். அவ்வூர் மக்களுக்கு அவர் ஒரு மஹான் என்பதோ பெரும் ஞானி என்பதோ சத்குரு என்பதோ தெரியவில்லை. ஆகவே அவர் தங்க இடம் கேட்டபோது அவரை சிதிலமடைந்த மசூதிக்கு அனுப்பினார்கள்.
ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியன அத்தியாவசியத் தேவைகள். ஆனால் பாபா உணவை பிச்சை எடுத்துச் சாப்பிட்டார். கிழிந்து போன உடை, இடிந்து பாழாய்ப் போன ஒரு மசூதி. இவற்றுக்காக ஏதும் முணுமுணுத்தாரா? அவருக்கு எல்லாம் சமம்தானே! நாளாவட்டத்தில் அந்த மசூதி கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தப்பட்டது. பாபாவும் அதற்கு துவாரகாமாயி எனப் பெயர் சூட்டினார்.
பாபாவைப் பொறுத்தவரை துவாரகமாயி அன்னையின் ஆலயம். அங்கே அமர்ந்தால் ஆபத்துக்கள் தடுக்கப்படும். கவலை ஓடிவிடும். கஷ்டங்கள் முடிந்து பேரானந்தம் வரும். எனவேதான் பாபா அங்கே அமர்ந்து தனது பக்தர்களுக்குத் தரிசனம் தந்தார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அது திறந்த வெளி தர்பார். ஒளிவு மறைவு என்று ஏதுமில்லை, கெடுபிடியில்லை, எல்லோரும் வரலாம், எளிதாக தரிசனம் பெறலாம்.

ஓம் சாயி நமோ நமஹ

ஓம் சாயி நமோ நமஹ,
ஸ்ரீ சாயி நமோ நமஹ,
ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ,
சீரடி சாயி நமோ நமஹ,
சத்குரு சாயி நமோ நமஹ,

துவாரகமாயி சரணம்,
சமர்த்தசாயி சரணம்,
சச்சிதானந்தா சரணம்,
சாயிராமா சரணம்...


ஓம் சாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்...

ஓம் ஷீர்டிவாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்...

ஓம் ஞானரூபாய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்...

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரக மாயி வாசினம்..
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.........

சாயி அன்பர் அனுபவம்!


வடமராட்சி ப௫த்தித்திறை சீரடி சாயி பாபா பக்தர் ஒ௫வரின் அனுபவம்
நான் தி௫மணம் செய்து 9 வ௫டங்களாகியும் மழலை செல்வம் இல்லா குறையில் இ௫ந்தேன் அப்போது தான்,  ஒ௫ சாயி பக்தர்,  9 வியாழன் விரதம் பற்றியும்,  யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள சீரடி சாயி நாதர் ஆலயத்துக்கு சென்று வியாழக்கிழமை வழிபாட்டு விரதம் துவக்கி கடைப்பிடிக்கும் படியும் கூறினார்.
நான் என் மனைவி 9 வியாழன் விரதம் முறையாக பிடித்து ஆலயத்துக்கு சென்று சாயி நாதரை வழிபட்டேன் 8 ஆவது வியாழன் விரதம் கடைப் பிடிக்கும் போது மனைவி க௫வுற்று இ௫ந்தார்.
இப்போது எங்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று சாயி நாதரின் அ௫ளால் கிடைக்கப்பெற்றுள்ளது. சாயி நாத௫க்கு நன்றிகள்....அவரின் க௫ணை தான் என்னே..
ஓம் சாயி ராம்

பெயர் குறிப்பிட வி௫ம்பாத வரமராட்சி பகுதியை சேர்ந்த சாயி பக்தர்

Thanks:
Sri Sai Sat Charita
Facebook

ஸ்ரீ தத்தாத்ரேய அஷ்டோத்ர சத நாமவளி


ஓம் ஸ்ரீ தத்தாய நம:
ஓம் தேவதத்தாய நம:
ஓம் ப்ரம்மதத்தாய நம:
ஓம் விஷ்ணுதத்தாய நம:
ஓம் சிவதத்தாய நம:
ஓம் அத்திரிதத்தாய நம:
ஓம் ஆத்ரேயாய நம:
ஓம் அத்திரிவரதாய நம:
ஓம் அனசூயாயை நம:
ஓம் அனசூயாசூனவே நம:  -10
ஓம் அவதூதாய நம:
ஓம் தர்மாய நம:
ஓம் தர்மபராயணாய நம:
ஓம் தர்ம பதயே நம:
ஓம் சித்தாய நம:
ஓம் சித்திதாய நம:
ஓம் சித்திபதயே நம:
ஓம் சித்தி சேவிதாய நம:
ஓம் குருவே நம:
ஓம் குருகம்யாய நம:  - 20
ஓம் குரோர்குருதராய நம:
ஓம் கரிஷ்டாய நம:
ஓம் வரிஷ்டாய நம:
ஓம் மஹிஷ்டாய நம:
ஓம் மஹாத்மனே நம:
ஓம் யோகாய நம:
ஓம் யோககம்யாய நம:
ஓம் யோகதேசகராய நம:
ஓம் யோகபதயே நம:
ஓம் யோகீஸாய நம:  - 30
ஓம் யோகாதீஸாய நம:
ஓம் யோகபராயணாய நம:
ஓம் யோகி தேயாங்க்ரி பங்கஜாய நம:
ஓம் திகம்பராய நம:
ஓம் திவ்யாம்பராய நம:
ஓம் பீதாம்பராய நம:
ஓம் ஸ்வேதாம்பராய நம:
ஓம் சித்ராம்பராய நம:
ஓம் பாலாய நம:
ஓம் பாலவீர்யாய நம:  - 40
ஓம் குமாராய நம:
ஓம் கிஸோராய நம:
ஓம் கந்தர்ப்ப மோஹனாய நம:
ஓம் அர்தாங்காலிங்கிதாங்கனாய நம:
ஓம் சுராகாய நம:
ஓம் விராகாய நம:
ஓம் வீதராகாய நம:
ஓம் அம்ரித வர்ஷிணே நம:
ஓம் உக்ராய நம:
ஓம் அனுக்ராஹாய நம:  - 50
ஓம் ஸ்தவிராய நம:
ஓம் ஸ்தவியஸே நம:
ஓம் சாந்தாய நம:
ஓம் அகோராய நம:
ஓம் மூடாய நம:
ஓம் ஊர்த்வ ரேதஸேநம:
ஓம் ஏக வக்த்ராய நம:
ஓம் அனேக வக்த்ராய நம:
ஓம் த்விநேத்ராய நம:
ஓம் த்ரிநேத்ராய நம:   - 60
ஓம் த்விபுஜாய நம:
ஓம் ஷட்புஜாய நம:
ஓம் அக்‌ஷமாலினே நம:
ஓம் கமண்டலுதாரிணே நம:
ஓம் சூலினே நம:
ஓம் டமருதாரிணே நம:
ஓம் சங்கினே நம:
ஓம் கதினே நம:
ஓம் முனியே நம:
ஓம் மெளளினே நம:    - 70
ஓம் விரூபாய நம:
ஓம் ஸ்வரூபாய நம:
ஓம் ஸஹஸ்ரசிரசே நம:
ஓம் ஸஹஸ்ராக்‌ஷாய நம:
ஓம் ஸகஸ்ரபாஹவே நம:
ஓம் ஸஹஸ்ராயதாய நம:
ஓம் ஸஹஸ்ர பாதாய நம:
ஓம் ஸஹஸ்ர பத்மார்சிதாய நம:
ஓம் பத்ம ஹஸ்தாய நம:
ஓம் பத்ம பாதாய நம:  - 80
ஓம் பத்மநாபாய நம:
ஓம் பத்ம மாலினே நம:
ஓம் பத்ம கர்பாருணாக்‌ஷாய நம:
ஓம் பத்ம கிஞசல்க்கவர்சஸே நம:
ஓம் ஞானினே நம:
ஓம் ஞானகம்யாய நம:
ஓம் ஞான விஞான மூர்தயே நம:
ஓம் த்யானினே நம:
ஓம் த்யானனிஷ்டாய நம:
ஓம் த்யான ஸ்திமித மூர்த்தயே நம:   -90
ஓம் தூளிதூஸரிதாங்காய நம:
ஓம் சந்தனலிப்த மூர்த்யே நம:
ஓம் பஸ்மோத்தூளித தேஹாய நம:
ஓம் திவ்ய கந்தானு லேபினே நம:
ஓம் ப்ரஸன்னாய நம:
ஓம் ப்ரமத்தாய நம:
ஓம் ப்ரக்ருஷ்டார்த்த ப்ரதாய நம:
ஓம் அஷ்டஸ்வர்ய ப்ரதானாய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வரீயஸே நம:   - 100
ஓம் பிரம்மணே நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஸ்வரூபிணே நம:
ஓம் சங்கராய நம:
ஓம் ஆத்மனே நம:
ஓம் அந்தராதமனேநம:
ஓம் பரமாத்மனே நம:  - 108

ஓம் தத்தாத்ரேய நம:

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...