Friday, April 29, 2016

இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி....

ஒருவன் கடவுளைத் தேடிக்கொண்டே நடந்தான். சற்று தூரம் சென்ற பின், யாரென்றே தெரியாத ஒருவர் தன்னைப் பின்தொடர்வதைப் பார்த்தான். அவன் மனதில் லேசாக ஒரு சஞ்சலம் தோன்றியது.

மனதில் லேசாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ‘ நீ யார்? எதற்காக என்னை நீ பின் தொடர்கிறாய்?’ என்று தன்னைத் தொடர்பவனிடம் கேட்டான்.

‘அய்யா, என்னை ஒருவன் தேடிக்கொண்டு இருக்கிறான். அவனிடம் செல்வதற்காக நான் வந்துக்கொண்டிருக்கிறேன்’ என்றான் அவன்.

‘இங்கே, கண்ணுக்கெட்டிய வரையில் யாரும் தென்படவேயில்லை. அப்படியிருக்க, யார் உன்னை தேடிக்கொண்டிருக்க முடியும்? வேறு வழியாகப் போய் பார்!’ என்று கூறிவிட்டு வந்த வழியே திரும்பினான் தேடியவன்.

சற்று தூரம் சென்ற பிறகு திரும்பிப் பார்த்தான். அப்பாடா! யாரும் இல்லை, தப்பித்தேன்! என்று கூறிக்கொண்டே நடந்தான். தொடர்ந்து வந்தது கடவுள் என்பதை அறியாமலேயே!

சரி, அப்போது தொடர்ந்த கடவுள், இப்போது ஏன் தொடரவில்லை என நீங்கள் யோசிக்க வேண்டாம்.

முதலில் அவன் மனதில் கடவுளை தேடும் தவிப்பு இருந்தது. அதனால் கடவுள் தொடர்ந்து தெரிந்தார்.  ஆனால் இப்போது அவர் போனால் போதும் என்ற எண்ணமே மனதில் இருந்தது. அதனால் அவர் மறைந்தார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...