Monday, December 26, 2016

சாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் சாயி சாயி என்று சொல்லியபடியே எதிர்கொள்ளவேண்டும்.

தனக்கென வாழாமல் பிறருக்காகவும் வாழும் உன்னத வாழ்க்கையே சாயி வழி என்பதை சாயி பக்தன் உணர்ந்து தனது உள்ளும் புறமும் தூய்மையாக இருக்கத் தன்னைப்பக்குவப் படுத்திக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு நடக்கிற பக்தன் உண்மையான சாயி பக்தனாவான். அவன் அருளை முழுவதுமாகப் பெறுவான்.

மேலும் எவ்வாறு சாயி பக்தன் இருக்கவேண்டும் என்பதனை ஒவ்வொன்றாக தினமும் பார்த்து சிந்திப்போம்.

Saturday, December 24, 2016

பாபாவின் சத்திய வாக்கு




எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்.

Thursday, December 22, 2016

ஓம் சாய் ராம்




"பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை.   "உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்" 
                                                   ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. 
 பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்று போலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி.
உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.

Wednesday, December 21, 2016

சந்தேகமற்ற சுகம்




, குருநாதா, இகத்திலும், பரத்திலும் எந்தெந்தப் பொருட்களைச் சுகம் என்று என் மனம் சந்தேகமறக் கருதுகின்றதோ அவற்றையெல்லாம் நீரே நிறைவேற்ற வேண்டும். உமது கருணையினால் இவ்வாறு செய்துவிடும், எனது மனதை அடக்கிவிடும். எனது எல்லாக் குற்றங்களையும் மன்னிக்க வேண்டுமென்று வேண்டுகிறேன். பக்தியின்மை, சந்தேகங்கள் போன்ற அலைகளை விரைவில் நீக்குவீராக.
                                  ஸ்தவன மஞ்சரி-யில், ஸ்ரீ தாஸ்கணு மகாராஜ், 1840 வருடம்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...