Thursday, November 23, 2017

விவரிக்கமுடியாத சக்தி

     சொற்களால் விவரிக்கமுடியாத அந்த சக்தியே கண்ணால் காணும்படியான ரூபத்தில் பூமிக்கு வந்தது. ஸச்சிதானந்தமே அவர், என்று அறிந்துகொள்வதுதான் முழுமையான ஞானம். எவருடைய மனம் பிரம்மத்திலேயே லயித்திருக்கிறதோ, எவர் இவ்வுலக வாழ்வி­ருந்து நிவிர்த்தியடைந்தவரோ, எவர் உலகியல் தொல்லைகளி­ருந்து விடுபட்டவரோ, எவர் முழுமுதற்பொருளுடன் தம்முடைய ஆத்மாவை ஒன்றுபடச் செய்துவிட்டாரோ, அவர் தூய ஆனந்தத்தின் உருவமாவார்.
      வேதம் ''ஆனந்தமே பிரம்மம் (முழுமுதற்பொருள்)” என்று விளம்புவதை கதை கேட்பவர்கள் பலமுறை கேட்டிருப்பார்கள். புத்தகஞானிகளும் இதைப் போதிகளில் (புராணங்களில்) படித்திருப்பார்கள். விசுவாசமுள்ள பக்தர்களோ இதை சிர்டீயில் அனுபவிக்கிறார்கள்.
      தர்மம், அதர்மம் என்னும் லக்ஷணங்களுடன் விளங்கும் இவ்வுலகம் விசித்திரமானது. ஆத்மஞானம் அடையாதவர்கள்தாம், இதுவிஷயம் அசட்டை செய்யாது இவ்விதிகளை அனுசரிக்கவேண்டும்.
     ஆத்மஞானிகளுக்கோ இதுவிஷயத்தில் ஆதங்கம் ஏதுமில்லை. அவர்கள் தங்களுடைய ஆத்ம ஸ்வரூபத்திலேயே அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். அவர்கள் நித்தியமாக விடுதலையடைந்தவர்கள்; ஆனந்தமானவர்கள்; ஸதா சின்மய (தூய ஞான) ரூபமானவர்கள்.
     பாபா எல்லாருக்குமே அதிஷ்டானமானவர் (அடித்தளமானவர்). அவருக்கு எப்படி ஓர் உட்காரும் ஆசனம் அளிப்பது? அதுவும் ஒரு வெள்ளிச் சிம்மாசனம்? ஆயினும், பாபா, பக்தர்களுக்கு அவ்வளவு செல்லம் கொடுத்திருந்தார்.
     அவருடைய பழைய ஆசனமான ஒரு கந்தல் கோணிப்பை அங்கு இருந்தது. அதன்மேல் பக்தர்கள் மிக்க அன்புடன் ஒரு சிறு மெத்தையை அவர் அமர்வதற்காக வைத்தனர்.
      உட்கார்ந்த நிலையில் சாய்ந்துகொள்ளும் சுவரை ஒட்டி, ஒரு திண்டும் வைக்கப்பட்டது. பக்தர்களுடைய மனத்தின் ஓட்டங்களை மதிக்கும் வகையில் பாபா அவர்களுடைய விருப்பங்களை ஏற்றுக்கொண்டார்.
      சிர்டீயில் இருப்பதுபோல் தெரிந்தாலும், பாபா எங்கும் சுதந்திரமாகச் சுற்றிவந்தார். இந்த அனுபவத்தைத்தான் ஸாயீ எப்பொழுதும் பக்தர்களுக்கு அளித்தார்.
     பற்றற்றவராகவும் மனத்திண்மை உடையவராகவும் இருந்த பாபா, பக்தர்கள் செய்த சடங்குபூர்வமான பூஜையையும் ஏற்றுக்கொண்டார். எல்லாரிடமிருந்தும் இவ்விதமாக, சிலர் சாமரம் வீசியும் சிலர் விசிறியால் இதமாக விசிறியும் வேறு சிலர் மங்களவாத்தியங்களை முழங்கியும் பாபாவைத் தொழுதார்கள்.
      சிலர் அவருடைய கைகளையும் பாதங்களையும் அலம்பினர்; சிலர் அத்தரும் சந்தனமும் பூசினர்ó; சிலர் விசேஷமான நைவேத்தியம் படைத்து, பதின்மூன்று பொருள்கள் அடங்கிய தாம்பூலத்தைக் கொடுத்தனர்.
      சிலர், அரைத்த சந்தனத்தை அவருடைய நெற்றியில் இரண்டு விரல்களால் சிவ­ங்கத்தின்மேல் இருப்பதுபோல் கோடுகளாக இட்டனர். சிலர், அரைத்த சந்தனத்துடன் கஸ்தூரி கலந்து நெற்றியில் இட்டனர்.

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

எங்கும் நிறைந்தவரே பாபா!

    அணிமா சித்தியைப் பெற்றவர், கண்ணில் விழும் தூசியளவிலுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம். ஈயினுடைய உருவத்திலோ, எறும்பினுடைய ரூபத்திலோ, புழுவினுள்ளோ பாபா சுலபமாக ஸஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே.   
       அணிமா சித்தியை அடிமையாகக் கொண்டவருக்கு ஓர் ஈயாக மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வானத்தில் பறக்கமுடிந்தவருக்கு மரப்பலகை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
      அணிமா, மஹிமா, லகிமா என்னும் அஷ்டமகாசித்திகளும் நவநிதிகளும், அவருடைய சந்நிதியில் கைகட்டிச் சேவகம் செய்தன. மரப்பலகை அவருக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையே.
     புழு, எறும்பு, நாய், பறவை, மனிதர்கள், பெரியோர், சிறியோர், அரசன், ஆண்டி — அனைத்தையும் அவர் சரிசமமாகப் பார்த்தார்.
        பார்வைக்கு அவர் ஷிர்டீவாசியைப் போலத் தெரிந்தார்; மூன்றரை முழம் உயரமுள்ள உடலைத் தவிர வேறெதையும் பெற்றிருக்கவில்லை. ஆயினும், புண்ணியங்களின் இருப்பிடமான அவர் எல்லாருடைய மனத்திலும் வசிக்கிறார்.
    அந்தரங்கத்தில் அவர் சங்கத்தை நாடாதவராகவும் பற்றற்றவராகவும் இருந்தார்; வெளியுலகில் மக்களை நற்பாதையில் செலுத்தவேண்டும் என்ற பலமான உந்துதல் இருந்தது. மனத்துள்ளே நிராசையாக இருந்தார்; ஆனால், வெளிமுகமாக பக்தர்களின்மேல் பாசம் இருந்தது.
  அந்தரங்கத்தில் செயல்களுக்குப் பலனேதும் எதிர்பார்க்கவில்லை; பகிரங்கத்தில் தெரிந்த, பக்தர்களின் நல்வாழ்வு பற்றிய அவரது அக்கறை பரிசுத்தமானது. அந்தரங்கத்தில் பரமசாந்தியின் இருப்பிடமான அவர், எப்பொழுதாவது கோபத்தையும் காட்டினார்.

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Thursday, September 21, 2017

இதை அனுபவி..மற்றவை சரியாகும்!



 புகழ் பெற்ற வக்கீலான கபர்தே கஷ்ட காலத்தில் பாபாவிடம் தஞ்சமடைந்தார். அறிவாளியான அவர் வாயைத்திறந்துகூட பேச மாட்டார். பாபா முன் மவுனம் சாதிப்பார். அவரிடம் பாபா சொன்னார்: கடவுள் உனக்கு கொடுத்ததை வைத்து மனநிறைவுடன் இரு. உனக்கு கிடைக்காதவற்றுக்காக ஏங்காதே.
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டுமே கடவுளின் கொடை என நினைத்து, சாட்சியாக அனுபவி. அதில் சிக்கிக் கொண்டவனாக அல்ல, தூரத்திலிருந்து அதை காண்பவன் போல அனுபவிக்கவேண்டும்.
இதேபோல பாராட்டோ, இகழ்ச்சியோ, நிந்தனை செய்யப்படுவதோ, அவமதிக்கப்படுவதோ எது வாக இருந்தாலும் அது கடவுளால் வருவதாக நினைத்துச் செயல்படுஎன்றார்.
கஷ்டத்தை அனுபவமாக மாற்றிக் கொள்ள வேண்டும்; மகிழ்ச்சியை அளவீடாக வைத்துக்கொள்ளவேண்டும். நிந்தனை செய்யப்படும் போது யோசி, புகழப்படும் போது எச்சரிக்கையாக இரு. இதைச் செய்தால் வெற்றி பெறலாம்.
இளம் வயதில் அப்படியாக வேண்டும், இப்படியாகவேண்டும் என்று துடிக்கிறவர்கள் பிற்காலத்தில் போராட்டமான வாழ்க்கையை வாழ்வதைப்பார்க்கிறோம். அவர்கள் துடிப்பு, ஆசை, லட்சியங்கள் என்ன ஆனது? ஏன் அவர்களால் வெற்றிபெறுவது இயலாமல் போனது-.
லட்சியம், ஆசை, துடிப்பு இருந்தால் மட்டும் போதாது, செயல்பட வேண்டும். விதைக்கிற காலத்தில் சோம்பேறியாகப் படுத்திருப்பவன் அறுவடைக் காலத்தில் அரிவாளைக் கொண்டு போனால் என்ன கிடைக்கும்?
செயல்படுகிற எல்லோரும் வெற்றி பெற்று விடுகிறார்களா? ஏன் அப்படியாகிறது? அதற்கு இறைவனின் கருணை வேண்டும். அவன் நினைத்தால் ஒருவன் பணக்காரனாகிறான். பணக்காரன் ஏழையாகிறான். என்னைப் பற்றி அவன் ஏன் நினைக்கவே இல்லை? என யோசிக்கலாமே-
கடவுள் கொடுக்க நினைக்கிறார், கர்மா தடுத்து  விடுகிறது. கர்ம வினையைக் கரைக்க கடவுள் காட்டும் வழிகளில் முக்கியமானவை இரண்டு: நாம ஜெபம், அன்னதானம். இந்த இரண்டையும் செய், பலன் தானாகக் கிடைக்கும்.
கூன் விழுந்து தடியை ஊன்றிய படி வயதான ஒரு கிழவி நடந்ததைப் பார்த்த இளம் பெண் கேட்டாள்: , பாட்டி! ஏதாவது விழுந்துவிட்டதா? அல்லது எதையாவது தொலைத்துவிட்டாயா?” என்று.
பாட்டி சொன்னாள்: வைரத்தைவிட விலை மதிப்பு மிக்க எனது இளமையைத் தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கிறேன்என்று.
இளமையின் முக்கியத்துவத்தை இளைஞரை விட முதியவர்கள்தான் நன்கறிவார்கள். ஆகவே அவர்கள் இளைஞர்களுக்கு அறிவுரை கூற முற்படுகிறார்கள். அதை ஏற்றுக் கொண்டு நடப்பதுதான் அறிவுடைமை.
குழந்தாய், எதையும் வாங்க முடியாத பிச்சைக்காரன் ஆடம்பரமின்றி வாழ்வதிலும், ஊனமுற்ற ஒருவன் பணிவோடு நடப்பதிலும், கிழவி கற்புள்ள கன்னியாக இருப்பதாலும் என்ன பயன்?
பணமிருந்தும் ஆடம்பரமின்றி வாழவேண்டும். கைகால்கள் திடகாத்திரமாக இருந்தும் பணிவுடன் வாழவேண்டும். இளமையிலும் கற்புத் திறனை காக்கவேண்டும். அதில்தானே உயர்வு உண்டு.
இதுவரை உனது பெற்றோர் உனக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீ உன் வாழ்வை தேடிக்கொள்ள இன்னும் கொஞ்ச காலம்தான் உள்ளது. ஆகவே, அதுவரை அவர்களுக்காகவாழ இந்த நேரத்தைச் செலவிடு. அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும் மார்க்கத்தைத் தேடு. அவர்களுடன் நிறைய நேரத்தைச் செலவிட ஓய்வான இந்த நேரத்தைப் பயன்படுத்து.
வேலை, வாழ்க்கை, வழி போன்ற எல்லாம் இறைவன் கையில் இருக்கிறது. திறமை இருந்தும் பாழாய் போகிறதே என பயப்படாதே! சரியான நேரத்தில் சரியான விதத்தில் இதைசாயி பயன்படுத்தும் வாய்ப்பைத் தருவார். எல்லாம் கடவுள் செயல் என அமைதியாய்இரு.. மன இறுக்கத்தை மனதில் இருந்து விரட்டு. இப்போதுள்ள சூழ்நிலையை அனுபவி. மற்றவை சரியாகும்.

உன்னிடம் கடன் வாங்கியவர் தாமாக வந்து தருவார்

பாபாவின் பக்தர் ஜோக், அவுரங்காபாத்தில் வாழ்ந்தவர். ஒருவருக்கு 1400 ரூபாய் கடன் கொடுத்திருந்தார். நீண்ட நாட்களாகியும் கடன் திரும்பவரவில்லை. கொடுத்த கடனை திரும்பக் கேட்டுச் செல்ல நினைத்தார். இதை அறிந்த சாயி பாபா, “கடனை வசூலிக்க நீ செல்லவேண்டாம்; கடன் வாங்கியவரே இங்கே தாமாக வருவார்என்றார்.
நேரில் போய்க்கேட்டும் தராதவன், தானாக எப்படி வந்து தருவான்?” என ஜோக் பாபாவிடம் கேட்டார்.
உன் பணம் எங்கே போய்விடும்? போய் வீட்டில் அமைதியாக இரு, தாமாகத் திரும்பவரும்என்றார் பாபா.
ஜோக் வருத்தத்துடன், “நான் மூவாயிரம் ரூபாயை இழக்கவேண்டும் என்கிறீர்களா?” என்று கூறிவிட்டு, பணமில்லாமல் நாளை முதல் நான் எப்படி வழிபாடு, ஆரத்தி, பூஜை போன்றவற்றை செய்வது? பணம் இல்லாமல் எப்படி வாழ்வது? நான் நேரில் சென்றாலே தராதவன், தானாக எப்படி வருவான்? ஒரு வழக்குத் தொடுத்தாலன்றி அவன் வழிக்கு வரமாட்டான்என்றார்.
சரி, இப்போதைக்கு அந்த விஷயத்தை மறந்துவிடுஎன்றார் பாபா. ஜோக் அதைப்பற்றி பேசவில்லை.
சில நாட்கள் சென்றதும், கடன் வாங்கியவர் வந்து ஜோக்கிடம் தான் முதலை மட்டும் தந்து விடுவதாகவும், வட்டியைத் தர இயலாது என்றும் கூறினார். வட்டியையும் சேர்த்துத் தந்தால்தான் வாங்குவேன் என்றார் ஜோக்.
அவசியம் இருந்தால் ஒழிய வட்டி வாங்கவேண்டாம். அதனால் அனைத்துப் பலன்களும் போய் விடும்என்றார் பாபா.
பிரார்த்தனைக்கு வருவோரில் பலர், “கணவருக்கு தெரியாமல் கடன் வாங்கிக் கொடுத்தேன். வாங்கியவர் ஏமாற்றி விட்டார்என்றோ, எனது மனைவிக்குத் தெரியாமல் கொடுத்தேன், ஏமாற்றிவிட்டார்என்றோ, எங்களிடம் வாங்கியவர் ஏமாற்றிவிட்டார்என்றோ கூறுவார்கள்.
அவர்களிடம், “பொறுமையாக இருங்கள், பணத்தை அவர் ஏமாற்றவில்லை, பாபா வாங்கி வைத்திருக்கிறார். உரிய நேரத்தில் தந்துவிடுவார்  என்று கூறி அனுப்புவேன்.
எனக்கே இந்த மாதிரி இழப்புகள் நிறைய ஏற்பட்டுள்ளன. பாபாவின் பணம் சுமார் பதினோறு லட்ச ரூபாய் இப்படி வெளியே இருக்கிறது. என்னை ஏமாற்றவேண்டும் என்றோ, என் மூலம் பிறரை ஏமாற்ற வேண்டும் என்றோ கணக்குப்போட்டு வேலை பார்த்தவர், கையிருப்புகளைத் தொலைத்துவிட்டு கடன்காரனாகச் சுற்றுவதை பாபா காட்டுவார்.
என்னிடம் சொல்வார்: உனக்கு கையிருப்பு, சேமிப்பு, எதிர்காலத் திட்டம் இவையெல்லாம் வேண்டா. கடந்த காலத்தில் ஏற்பட்டவைகளை நினைத்து என் மீது பாரத்தை வை. நானே உன் நிகழ்காலத்தை கவனிக்கிறேன், எதிர்காலத்தைபொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். வருவாய்இல்லாதது போலிருந்தாலும் பத்திரிகையைத்தொடர்ந்து நடத்த உதவுகிறேன். இதைத் தாண்டி உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்பார்.
அதேபோல, “உன்னிடம் பெற்றவர் திரும்பத்தராதவரையில் அவருடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை வைத்துக்கொண்டே இருப்பேன்என்றும் கூறுவார். இதனால்தான் உண்டியல்பணத்தை கூட கோயில் செலவு போக, மீதியை கீரப் பாக்கத்திற்காக செலவிட்டு வருகிறேன்.
என்னை ஒழிப்பதாக நினைத்துக் கொண்டு அவதூறு பரப்பி, அதன் மூலம் ஒருசிலரை எனக்கு எதிராகச் செய்தவர்கள் கூட எந்த ஒரு பலனையும் அனுபவிக்க முடியாதபடி பாபா பார்த்துக்கொள்கிறார். எனக்குச் செய்த அதேபாபா உங்களுக்கும் செய்வார், பொறுமையோடுகாத்திருங்கள்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...