பாபா
பக்தர்களின் ஒவ்வொரு செயலும், வாழ்க்கையின்
ஒவ்வொரு நிகழ்ச்சியும், பாபாவாலேயே
கவனிக்கப்பட்டும், உருவாக்கப்பட்டும்
வருகிறது... பாபா தன்னிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களிடம்,
"உம்முடைய எல்லா
பொறுப்புகளும் என்னுடையவை. உம்முடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று
நடத்துகிறேன்" என்று கூறியுள்ளார். பிரார்த்தனை நல்லதே..அது பக்தியை
அதிகரிக்கச் செய்யும்.
ஆனால் நடந்த சம்பவங்களை எடுத்துக் கொண்டால், தன் பக்தனுக்கு எது நன்மையோ,
அதை மட்டுமே பாபா
அளித்துள்ளார். பிரார்த்தனைகளை விடுத்து பாபாவிடம் பூரண சரணாகதி அடையுங்கள்,
மற்றவற்றை பாபா
பார்த்துக்கொள்வார். பூரண சரணாகதி அதாவது பாபாவே சகலமும் சர்வமும் பரப்பிரம்மமும்
அவரே என்று உணர்ந்த
நிலை.
''குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை தெரியும். அப்படி சேவிக்கும் பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம். அவர்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும். சிந்தாமணி நாம் வேண்டியதை தான் கொடுக்கும். ஆனால், குருவின் அருளோ நமக்கு என்னென்ன தேவையோ,எது நன்மைகளோ அவை எல்லாம் நாம் கேட்காமலேயே கொடுக்கும்.- ஸ்ரீ குரு சரித்திரம்.