Friday, November 24, 2017

ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டும்!!!





      சிவனையோ, ராமனையோ பூஜிப்பதை விட்டுவிட்டு ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டுமென பக்தர்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுமானால், அதற்கு வ்வித அவசியமுமில்லை என்பதே பதில். 
         ராமனிடமிருந்தோ, அல்லது தனது வேறு எந்த இஷ்ட தெய்வத்திடமிருந்தோ சாயி வேறுபட்டவர் என்றோ, பக்தர்கள் நலன்களை கவனிக்க, தான் வணங்கும் அந்த தெய்வங்களே போதும் என்றோ ஒருவர் கருதி, அதில் அவருக்கு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்படுமானால், சாயி அத்தகைய ஒருவரை தனது கருத்தை மாற்றிக் கொள்ளும்படி ஒருபோதும் கூறியதில்லை, கூறுவதுமில்லை. 
                 பாபா சம்பிரதாயங்களை மிகவும் மதிப்பவர்; ஒவ்வொருவரும் தனது சமயம், குலம், குலதெய்வம், குரு, இஷ்டதெய்வம், விக்ரகம், மந்திரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை விடாமல் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதே பாபாவின் அறிவுரை. 
                      தனது இஷ்டதெய்வம், குரு, மந்திரங்கள் முதலியவற்றுடன் உள்ள வழக்கமான தொடர்பு, தனக்கு  வேண்டிய அளவு எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை எனக்கருதி ஒருவர் பாபாவை அணுகி, அவரை வேண்டினால், எதிர்பார்த்த பலன்களை அளிக்கும் என நம்பிக்கை வைப்பாரேயாகில், பாபா அவரை தம்மிடம் வரும்படி கூறவோ அல்லது வருவதற்கு அனுமதிக்கவோ செய்வார்.    
              பாபா அவரது விசுவாசங்களில்  குறுக்கிடுவதில்லை; பழைய விசுவாசங்களுடன் பாபாவிடம் விசுவாசம் என்பதும் சேருகிறது. அத்தகைய சேருகின்ற விசுவாசம் ஆச்சரியகரமான பலன்களை அளித்து மேலும் உறுதியாகிறது. லௌகீக பலன்களை நாடி ஒருவர் வருகிறார், அவரது ஆசைகள் நிறைவேறுகின்றன, அத்துடன் அவரது சிந்தனையும்  மாறுகிறது. பாபாவைப் பற்றி மேலும் மேலும், மிக்க உயர்வாக எண்ணுகிறார். கடைசியில் கடவுள் சூடிக்கொண்ட எண்ணற்ற பெயர்கள், உருவங்கள் ஆகியவற்றில் பாபா என்பதும் ஒன்று என உணர்ந்து முழுமையாக பாபாவிடம் அர்ப்பணித்துக் கொள்கிறார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...