Friday, November 24, 2017

மகா யோகி பாபா



மகா யோகியும், அவதார புருஷருமான பாபாவையும் இயற்கையின் விதிகள் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. எனினும், அவர் சாதாரண மக்களைப் போலவே உண்பது, உறங்குவது போன்ற உலகியல் நடைமுறைகளின்படியே வாழ்ந்து வந்தார்.
அதே நேரம் வேண்டியபோதெல்லாம் இயற்கையின் கட்டுப்பாட்டைக் கடந்து அசாதாரணச் செயல்கள் செய்வதும், பாபாவின் வழக்கமாக இருந்தது. மேலும், நினைத்த மாத்திரத்தில், சமாதி நிலை எய்தும் பயிற்சியும் அவருக்குக் கை வந்திருந்தது. அவர் தம் குழந்தைப் பருவத்திலிருந்தே யோகம் பயின்றிருந்தார்.
பாபாவின் யோக சாதனை பிர மிப்பை ஏற்படுத்தியது என்றால், அவரது அன்றாட எளிய வாழ்க்கை நடைமுறை வியப்பை உண்டாக்கியது. அது அவரது ஆன்மிக மேன்மையையும் அவதாரச் சிறப்பையும் விளக்குவதாக அமைந்திருந்தது.
பாபாவின் புகழ் நான்கு திசைகளில் பரவியவுடன் ஷீர்டிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாள்தோறும் பெருகத் தொடங்கியது. சாதாரணக் குக்கிராமமாக அமைதியுடன் திகழ்ந்த ஷீர்டி, மக்களின் வருகையாலும் அவர்களது ஆரவாரத்தாலும் அடியோடு மாறிப்போய் ஒரு புண்ணியத் தலத்துக்குரிய களையுடன் விளங்க லாயிற்று.
பஜனைகளும் வாழ்த்தொலிகளும் பக்திப் பாடல்களும் ஷீர்டியின் கோயில் மணி ஓசைகளை மங்கச் செய்தன. பாபாவின் மேல் அன்பு மிகுந்தவர்கள் சாரிசாரியாக வருவ தும் போவதுமாக இருந்தனர்.
அருளும் ஆன்மிகமும் அதிகரித்ததைப் போலவே ஆரவாரங்களும் ஆடம்பரங்களும் பெருகத் தொடங்கின. ஆனால், அவையெல்லாம் வெளிப்புற மாற்றங்களின் தவிர்க்க இயலாத அடை யாளங்களாக மட்டுமே விளங்கின. அவதார புருஷர் பாபாவை அந்த மாற்றங்கள் சிறிதும் பாதிக்கவில்லை.
அன்பின் மிகுதியால் அடியார் களின் உற்சாக உணர்வுகளின் வெளிப்பாடுகளை அனுமதித்த பாபா, அவை தன் தனிப்பட்ட வாழ்க்கை முறையை பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். அவரது எளிமையும், இனிமையும், பற்றின்மையும், விருப்பு-வெறுப்பு கடந்த உயர் நிலையும் என்றும் ஒரே தன்மையில் இருந்தன.
அடியவர்களின் அன்பளிப்புகள் குவிய ஆரம்பித் தன. ஆனால், அவற்றை பாபா ஒரு பொருட்டாகவே கருதவில்லை.  அவரது தினசரி வாழ்க்கை முறை எந்தவித மாற்றமுமின்றி ஒரே சீராக நடந்து வந்தது.
அறியாமை இருள் அகற்ற வந்த ஞான சூரியனான பாபா, தினமும் அதிகாலையில் துயில் எழுந்து விடுவார். முதலில் தியானம், பிரார்த்தனை ஆகியவற்றுடன் அன்றைய தினத்தைத் தொடங்குவார். அந்த நேரத்தில் தூனிக்கு அருகில் தென்திசையை நோக்கிய வாறு கம்பம் ஒன்றில் சாய்ந்து கொண்டு மற்றவர் யாரும் புரிந்து கொள்ள இயலாத, வெளிப்பார்வைக்குத் தெரியாத ஏதோ ஒரு செயலில் ஈடுபட்டிருப்பார்.
அப்போது அடியவர்கள் அருகில் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாபா மந்திர உச்சாடனங்கள் செய்வதைப் போன்ற சிறு சிறு ஒலிகள் அருகில் செல்லும் வேலையாட்களுக்குக் கேட்பதுண்டு. ஆனால், பாபா என்ன சொல்லிக் கொண்டிருந்தார் என்பதை அவர்களாலும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதன் பிறகு பாபா தன் கையால் புனிதமிக்க அக்னி குண்டமான தூனியில் விறகுகளை சரியாகப் போட்டு அடுக்கி வைப்பார். தூனி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியவுடன் திருப்தி கொள் ளும் பாபா, அதன் முன் சென்று அமர்ந்து கொள்வார். அப்போது காலை தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு, பெறுவதற்கரிய ஓர் அனுபவம் கிடைக்கும். பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்ததற்கு ஏற்ற பரிசாக அது அமையும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...