Friday, December 7, 2012

பாபாவினை முழு மனதோடு நம்பினால் வெற்றி நிச்சயம்

      
 பாபாவினை முழு மனதோடு நம்பினால் வெற்றி நிச்சயம்
                  
         என் பெயர் சசிகலா. கணவர் பெயர் தண்டபாணி. எங்களுக்குத் திருமணமாகி எட்டு வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. எவ்வளவோ மருத்துவ சிகிச்சைகள் செய்தும் பலனில்லை.
           இதன்பிறகு நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் என் மார்க் ஷீட் வாங்குவதற்காக உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை வந்தேன். அன்று ஜூலை 20, 2011, வியாழக்கிழமை என்பதால் பாபாவை தரிசிக்க ஏராளமானோர் பயணம் செய்த அந்தப் பேருந்தில் தான் நானும் பயணம் செய்தேன். என் இருக்கைக்குப் பக்கத்தில் ஓர் அம்மா வந்து அமர்ந்தார். கொஞ்ச தூரம் சென்றதும் அவரிடம் “எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டேஎ. அவரும் “பாபா கோயிலுக்குப் போகிறேன்” என்றார்.
            பிறகு அந்த அம்மா வேறொருவரிடம் பாபா அற்புதத்தினைப் பற்றி கூறினார்கள். அவர்களது பையனுக்கு எவ்வளவோ முயன்றும் ஒரு கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்றும், பையனோ படித்தால் அந்தக் கல்லூரியில்தான் படிப்பேன் என கேட்பதாகவும் அதற்கு உதவிட வேண்டும் என்றும் பாபாவிடம் வேண்டுதல் வைத்தார்களாம். அனைத்து அட்மிஷனும் முடிந்த நிலையில், அந்த பையனுக்கு அதே கல்லூரியில் சீட் கிடைத்தது என்றும் சொன்னார்கள்.
              இதைக் கேட்டுக்கொண்டிருந்த நான், ‘எனக்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை’ என்றேன். அந்த அம்மா, ‘நீ பாபாவை முழு மனதோடு நம்பினால் வெற்றி நிச்சயம். ஒன்பது வாரத்திற்க்குள் உனக்குக் குழந்தைப்பேறு கண்டிப்பாக வாய்க்கும்’ என்றார்கள்.
               பாபா வடிவில் அந்த அம்மாவே வந்து சொல்வதாக நம்பி, அந்த நிமிடமே பாபாவை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன்.  பாபாவை நினைத்துக் கதறி அழுதேன். மனமுருக வேண்டினேன். இரண்டாவது வாரத்திலேயே கர்ப்பம் தரித்தேன். எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.  சாய் கிருஷ்ணா என்று பெயர் வைத்துள்ளோம்.

                  எங்கள் ஊரில் ஆசிரியரான பாண்டியன் அவர்கள் மூலம் சென்னையிலுள்ள சாயி கலியன் என்ற சாயி பக்தர் அறிமுகம் ஆனார். எனக்காகப் பிரார்த்தனை செய்தார். பெருங்களத்தூரில் பாபா அற்புதங்களைச் செய்கிறார். நேர்ந்து கொண்டு, உனது கோரிக்கை நிறைவேறியதும் இடம் வாங்குவதற்க்கு உனது பங்களிப்பினை செலுத்து என்று கூறினார். கோரிக்கை நிறைவேறியது.  ஆகஸ்டு மாததத்தில் நானும் எனது கணவரும் புதுப்பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்க்கு வந்து, சாயி வரதராஜன் அவர்களை சந்தித்து இந்த அற்புதத்தைத் தெரிவித்து காணிக்கை செலுத்தினேன்.
                    எங்கள் சாயி கிருஷ்ணா பாபாவின் மடியில் அமரும் பாக்கியத்தினைப் பெற்றார். பாபாவினை முழு மனதோடு நம்பினால் வெற்றி நிச்சயம் என்பது என் அனுபவம்

த.சசிகலா, மேப்புலியூர், உளுந்தூர் பேட்டை.

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டெம்பர் 2012 இதழில் வெளியான ஒரு சாயி பக்தையின் அனுபவம். 

1 comment:

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...