இறைவனுக்கு வழங்கப்படும் எட்டு வித அல்லது பதினாறு வகை பூசை
முறைகளில் ஆரத்திக்கு இடமில்லை. பூசைகள்
முடிந்தவுடன் காட்டப்படும் குடைகாட்டுதல், சாமரம் வீசுதல், கண்ணாடிகாட்டுதல், பாடல்கள், நடனம், வாத்ய இசை, வேதகோஷம், திருமுறை ஓதுதல் ஆகியவற்றிலும் கூட ஆரத்தி இடம் பெற்று இருக்கவில்லை. எனவே இது
இடைப்பட்டக் காலத்தில் ஏற்பட்ட
ஒன்று எனக் கூறலாம்.
1909ம் ஆண்டு தான் முதன்முதலாக,
சீரடியில் பாபாவின் முன்பு மக்கள்
ஒன்றாகக் கூடி நின்று, அவரை நேரில் நின்று வழிபடும் முறை ஏற்பட்டபோது, முதலில் நண்பகல் ஆரத்தி
மட்டும் காட்டப்பட்டது. 1909ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி சாவடி ஊர்வலம்
ஆரம்பித்தவுடன், ஒரு நாள் விட்டு ஒரு நாள்
சேஷ் ஆரத்தி எனப்படும் இரவு ஆரத்தி காட்டும் வழக்கம் ஆரம்பித்தது.
துவாரகாமாயிக்குச் செல்லும் முன் சாவடியிலேயே காலை ஆரத்தியும் (காகட ஆரத்தி)
ஆரம்பிக்கப்பட்டது. வெகு காலத்திற்கு பிறகே தூப்ஆரத்தி எனப்படும் சூரியன் மேற்கு
திசையில் மறையும் நேரம் மாலையில் ஆரத்தி காட்டுவது ஆரம்பித்தது.
பாபா தனக்கு ஆரத்தி காட்டப்படுவதை முதலில் விரும்பவில்லை, அனுமதிக்கவுமில்லை. பக்தர்களின்
இடைவிடாத வற்புறுத்தலின் காரணமாக தனக்கு ஆரத்தி காட்ட சம்மதித்தார். முதன் முதலாக
நூல்கர் (இவர் பண்டரிபுரத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்) என்பவரை ஆரத்தி
காட்ட அனுமதித்தார். அவர் மறைவிற்குப் பிறகு. மேகா என்னும் சிவ பக்தன் பாபாவிற்கு
ஆரத்தி காட்ட ஆரம்பித்தார். பாபாவை சிவனாக கருதி வழிபட்டவரான இவர், ஆரத்தி காட்டும் பொழுது பாபாவை நோக்கி
ஒற்றைக்காலில் நின்று கொண்டு தலையை இங்கும் அங்கும் அசைக்காமல் ஆரத்தி
காட்டுவாராம். மேகாவின் மறைவிற்கு பிறகு பாபு சாகேப் ஜோக் என்பவர் பாபாவிற்கு
ஆரத்தி காட்ட அனுமதிக்கப்பட்டார்.
பாபா சமாதியடையும் வரை இவரே அந்தப் பணியைச் செய்தார்.
No comments:
Post a Comment