ஆர்த்தி என்பது சுலபமாக பக்தியை வெளிகாட்ட, அக்னியோடு சம்பந்தப்பட்ட ஒரு வழிபாடு. சீரடி சாய் மந்திரில் தினமும் நான்கு வேளை ஆர்த்தி, நடைபெறுகிறது. அதிகாலையில் 4.30 மணிக்கு காகட ஆர்த்தி, மதிய வேளையில் 12 மணிக்கு மதிய ஆரத்தி, மாலையில் ஆதவன் மறையும் போது
தூப் ஆரத்தி, இரவு 10.30 மணிக்கு சேஜ் ஆரத்தி.
சீரடிசாய்பாபா ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட அவதாரம். கங்கா
யமுனை, வாரணாசி ஆகிய
நதிக்கரைகளில் சூரிய அஸ்த்தமனத்தில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஆரத்தி மூலமாக சத்குருவை வணங்கினால், வாழ்வில் ஒழுக்கமும், பாதுகாப்பும் கிடைக்கும். இந்த ஆர்த்தியில் பல அற்புதங்கள் நிறைந்துள்ளன. ஆர்த்தியை தினம் தினம் இப்படி
பழக்கப்படுத்திக் கொண்டால் மந்தபுத்தி சுறுசுறுப்படையலாம்.
காலையில் எழுந்து சாய்ராமை நினைத்து உலகும் நாமும் நலமாக இருப்பதற்க்கு காகட ஆரத்தி உதவி செய்கிறது. அன்றாட வாழ்க்கையில் நிலவும்
துன்பங்கள் வராமல் இருப்பதற்கு மதியவேளை ஆரத்தி உதவி செய்கிறது. மனம்
போன போக்கில் போகாமல் சாய் சரணம் அடைவதற்கு தூப்ஆரத்தி உதவி செய்கிறது. அன்றாடம் நடக்கும் நல்ல காரியங்களுக்காக நன்றி தெரிவிக்க சேஜ் ஆரத்தி செய்கிறோம். இந்த
நான்கு ஆர்த்திகளை தினம் தினம் செய்வதினால் மனமும் உடலும் நல்வழி செய்யும் அதுவே
சாயின் வழி.
உலகெங்கும்
உள்ள சாய்பாபா தலங்களில்
இந்த ஆரத்திகள் முறையாக நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் தங்கள் வீட்டு
சத்சங்கங்களில் ஆரத்தி செய்கிறார்கள். சீரடியில் தினமும் சுமார் 30 லட்சம் பேர் சீரடிசாயின்
ஆரத்தியில் பங்கு கொள்கிறார்கள்.
உலகில் எங்கெல்லாம் சாய் ஆர்த்தி நடக்கிறதோ, அங்கெல்லாம் நான் இருப்பேன் என்று சாய் கூறியுள்ளார். நீங்களும் ஒரு நாள்
இந்த ஆரத்தியை செய்து பாருங்கள். உங்கள் உள்ளம் புத்துணர்வு
பெற்றதுபோல் மாறிவிடும்.
1940ஆம் ஆண்டு சீரடி
சாய்பாபாவுக்கு முதல் முதல் எழுதப்பட்ட ஆரத்திப்பாடல் ஆரத்தி சாய்பாபா… இந்த பாடல் நன்றாக
இருக்கின்றது இதை யார் பாடினாலும் அவர்கள் என்னை அடைவார்கள் என்று பாபா
ஆசீர்வதித்தார்.
நானாசாகிப்பின் மகளுக்கு கடுமையான பிறசவ வேதனை அப்பொழுது
ஆரத்தி சாய்பாபா பாடலை பாடியவுடன் சுகப்பிரசவம் ஆயிற்று இந்த பாடலுக்கு ஒரு
தெய்வீக சக்தி இருக்கிறது என்று கூறினார் நானாசாகிப்.
No comments:
Post a Comment