சீடன்: சைவ உணவு உயர்ந்ததா?
சித்தன்: உணவில் உயர்ந்தது, தாழ்ந்தது
என்று இல்லை. பொதுவாக உணவு பிரம்மம் என்கிறார் பாபா. அதனால்தான் அவர் இத்தகைய
தர்க்கத்தில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
கொல்லாமை நல்ல செயல்தான். ஆனால்
அதை மட்டுமே போதித்த சில சமயங்கள் வளரவே இல்லை. செரிப்புத் தன்மை குறைந்த முதியோர், வியாதியஸ்தர்கள், குழந்தைகளுக்கு சைவ உணவு நல்லது.
காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவைகளைத் தரும் செடி கொடி மரங்களுக்கும் உயிர்
உண்டு. இவைகளைப் பறித்து, உரித்து
அரிந்து உண்பதும் ஒருவகை உயிர் வதைதான். ஞானிகள் இதனால்தான் இலைகளை சாப்பிடாமல்
சருகுகளையும், கீழே உதிர்ந்து
விழுந்த பழங்களையும் மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தார்கள். பாபா உணவு விக்ஷயத்தில்
தீவிரமாக எதையும் சொல்லவில்லை.
அவர் சொன்னதெல்லாம் அன்னதானம்
செய் என்பதும், பொறுமையாய் இரு,
நம்பிக்கை வை, விடா முயற்சி செய். நாம ஜெபம் செய், உணவில் நிதானம்காட்டு என்பனவற்றையே. இவற்றால்
ஒரு மனிதன் விவேகம் வைராக்யம் பெறுவான். பின் எல்லாவற்றிலும் அவனே சிறந்த முடிவு
எடுப்பான். நல் வாழ்க்கை வாழ்வான் என்பதுதான் பாபாவின் வழிகாட்டும் முறை. இவை எல்லாம்
மிக மிக எளிய சாதனம். கஷ்டமில்லை,
செலவில்லை. இப்படிப்பட்ட சாதனத்தை நம் பாபாவைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்.
கண்டதையெல்லாம் யோசித்து
மனத்தைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே. அனைத்திலும் உன் மனம் சொல்லும் முடிவை எடு.
மற்றவரின் போதனைப் படி நடக்க முயற்சித்தால், ஒருவேளை உன்னால் முடியாவிட்டால் கடவுளை விட்டே போய் விட
நேரிடும். ஆகவே, உன்னைத் திருப்தி
செய், கடவுளை முழுமையாக நம்பி
வாழ்க்கை வாழ். எல்லாம் நன்மைக்கே என்றிரு.
கு. இராமச்சந்திரன்.
சீடன் – சித்தன் பதில்கள்
No comments:
Post a Comment