சைவம் - அசைவம்
சீடன்:
சைவ உணவு , அசைவ உணவு
இதைப் பற்றிய கருத்து என்ன?
சித்தன்:
பாபாவின் வழி எப்போதுமே தனி
வழி. ஆன்மீகத்தில் கூட அவர், உனக்கு
யாரைப் பிடிக்குமோ அவரை வணங்கு என்றார்.
யாரையும் எதற்காகவும் அவர் வற்புறுத்தியதே இல்லை. ஆகவே, அவர் எப்போதும் விமர்சனத்திற்க்கு
அப்பாற்பட்டவராகவே இருந்தார். இராமகிருஷ்ண
பரமஹம்சரும், கஞ்சி மகா ஸ்வாமிகளும் இப்படிப்பட்டவர்கள்தாம்.
எல்லா உயிர்களிலும் நான் இருக்கிறேன் என்றார்
பாபா. எல்லா உயிர்களும் கடவுளின்
சொரூபம். ஆகவே உணவுக்காக்க் கொல்லுதல்
என்பது கொடுமையானதுதான். ஆனால் இன்றைய
உலகில் 75 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.
ஓர் உயிர் இன்னொரு உயிரை உண்டு
வாழ்கிறது. இதுதான் நிதர்சனமானது. உலகில் எதுவெல்லாம் சாத்தியமாக உள்ளதோ அதைச்
செய்துதான் வாழவேண்டும்.
ஆன்மீக சாதனை செய்வதற்க்கும்
பக்தி செலுத்தவும் ஒரு மனிதன் தன் உடம்பையும் உறுப்புகளையும் ஆரோக்கியமாக
வைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு அவன் எதைச்
சாப்பிட வேண்டுமோ அதைச் சாப்பிடலாம்.
ஆனால் உண்பதில் உடலுக்கும் மனதுக்கும் நிதானம் வேண்டும்.
ஆகவே பாபா உண்பதில் எந்த வரைமுறையும் சொல்லாமல் அவரவர்
விருப்பத்திற்க்கே விட்டுவிடுகிறார்.
ஆனால் உண்பதில் நிதானம் வேண்டும் என்கிறார்.
No comments:
Post a Comment