Saturday, October 26, 2013

தேநீரில் சர்க்கரை


          ஸ்ரீ தாஸ்கனு அவர்கள்   கௌபினேச்வர்  கோவிலில் சாய் கீர்த்தனைகள் பாடிகொண்டிருந்தார்.  அதைக் கேட்டுக் கொண்டிருந்த சோல்கர் என்பவர், "பாபா! நான் ஏழை. என் அலுவலக தேர்வில் வெற்றி பெற்று நல்ல பதவி கிடைத்தால் ஷீரடி வருகிறேன்." என்று மனதில் வேண்டினார். அதே போன்று அந்த்த் தேர்விலும் வெற்றி பெற்று விட்டார்.
          ஆனால் ஷிர்டி செல்ல பணம் இல்லாததால் தினமும் தான் குடிக்கும் தேநீரில் சர்க்கரை போட்டுக்கொள்ளாமல், அந்த பணத்தை சேமித்து அதன் பின் ஷிர்டி சென்றாராம்
          தரிசனம் முடிந்ததும் பாபா,  சோல்கர் தங்கியுள்ள இடத்தை சேர்ந்த ஜோக் என்பவரிடம்   "இவருக்கு தேநீரில் நிறைய சர்க்கரை போட்டு இனிப்பாக அளியுங்கள் என்றாராம்"
         சோல்கர் திகைத்து மறுபடியும் பாபா காலடியில் விழுந்தாராம். பிறகு ஜோகிடம் சோல்கர் நடந்ததை சொன்னாராம்.
        பகவான் நம்மை நாம் எங்கிருந்தாலும் கவனிப்பதோடு நம்முள் புகுந்து நம் எண்ணங்களையும் செயல்களையும் கவனித்து ஆசி அளிக்கிறார் என்பது தெரிகிறதல்லவா?
         அற்புத செல்வர் சாய் நாதரின் திருவடிகளை வணங்குவோம்.

         ஜெய் சாய்ராம்!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...