Wednesday, January 8, 2014

பீமாஜீ பாடீல் - 1


புணே ஜில்லாவில் ஜுன்னர் தாலுகாவில் நாராயண்காங்வ் கிராமத்தில் வாழ்ந்த பீமாஜீ பாடீ­லின் காதையைக் கேளுங்கள். தேவாமிருதம் பொங்கி வழிந்தது போன்ற இனிமையுள்ளது இக்காதை.

                
பீமாஜீ பாடீல் ஒரு தனவந்தர். விருந்தோம்ப­ல்முக்கியமாக அன்னமிடுவதில் உற்சாகம் கொண்டிருந்தவர். சோகத்தையே அறியாத அவர் எப்பொழுதும் மலர்ந்த முகமாகவே இருந்தார்.    ஆனால்விதியின் வழிமுறைகள்  விளக்கமுடியாதவை லாபத்தையும் நஷ்டத்தையும் மாறிமாறிக் கொடுக்கும்அந்தக் கணக்கு நமக்குப் புரியாது.  கர்ம வினைகளுக்கேற்றவாறு இன்னல்கள் விளைகின்றன நமக்கு வரக்கூடாத வியாதிகளும் வந்து நம்மைத் துன்புறுத்துகின்றன.


       1909 ஆம் ஆண்டு பீமாஜீயைப் பீடை பிடித்ததுநுரையீரல்களை க்ஷயரோகம் தாக்கிஜுரம் வர ஆரம்பித்தது.  பிறகுபொறுக்கமுடியாத இருமல் தொடர்ச்சியாக வந்தது ஜுரம் நாளுக்குநாள் அதிகமாகி பலமாக வளர்ந்தது பீமாஜீ இடிந்து போனார்.  வாயில் சதா நுரை கட்டியது கோழையிலும் எச்சி­லிலும் உறைந்த ரத்தம் வெளியாகியதுவயிறு எந்நேரமும்  குமட்டியது ஓய்வற்ற நிலையில் உடல் அலட்டுவது நிற்கவேயில்லை.

      பீமாஜீ படுத்த படுக்கையாகிவிட்டார். எத்தனையோ நிவாரணங்களை முயன்று பார்த்தும் பயனில்லாதுபோயிற்று. உடல் மெ­லிந்துகாய்ந்து சுருங்கிய இலைபோல் ஆகிவிட்டார் பீமாஜீ.   அவருக்குச் சோறோநீரோஎதுவுமே பிடிக்கவில்லை. கஞ்சியும் பத்தியச் சாப்பாடும்கூட ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலை அவரை அமைதியிழக்கச் செய்துத் திக்குமுக்காட வைத்தது. உடல் பட்ட வேதனை பொறுக்கமுடியாததாக இருந்தது.

     தெய்வங்களைப் பிரீதிசெய்ய மந்திர உச்சாடனம் எல்லாம் நடந்தது. டாக்டர்களும் வைத்தியர்களும் கைவிட்டுவிட்டனர். பீமாஜீயும்  'பிழைக்கமாட்டேன் என்று நினைத்து விசாரமடைந்தார்.  பாடீல் மனமுடைந்து போனார்உயிர் நாள்கணக்கில்தான் தங்கும் போ­லிருந்தது. நாளுக்குநாள் இத்தேய்வு அதிகமாகியது. பல நாள்கள் இவ்வாறு கடந்தன.  குலதேவதைக்கும் ஆராதனைகள் செய்துபார்த்தார்பயனில்லை.

      குலதேவதை நல்லாரோக்கியத்தை மீட்டுத் தரவில்லை. ஜோதிடர்களையும் மந்திரவாதிகளையும் ஆலோசனைகள் கேட்டுக் கேட்டுஅலுத்துப்போனார்.

      சிலர் கூறினர், ''இதென்ன அங்கரோகம்! இவ்வளவு இன்னலைத் தரும் விதிதான் என்னே!  மானிட யத்தனம் அனைத்தும் வீண்போல இருக்கிறதே?

      டாக்டர்கள் முயன்று பார்த்தனர்யுனானி மருத்துவர்கள்  அழைக்கப்பட்டனர். பீமாஜீக்கு வைத்தியம் செய்வதில் மேற்கொண்டு செய்வதென்ன என்று தெரியாது விழித்தனர். யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லைமுயற்சிகளனைத்தும் வீணாயின.

       பாடீல் தளர்ச்சியுற்று நம்பிக்கை இழந்தவராகத் தமக்குள்ளேயே  பேசிக்கொண்டார். ''ஓ பகவானே! நான் என்ன குற்றம் செய்தேன்ஏன் எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவிவிட்டனஇம்மாதிரி இன்னல்படுவதற்கு நான் எத்தகைய கொடிய பாவம் செய்திருக்க வேண்டும்?

     இறைவனின் சிறப்பியல்பு எவ்வளவு விநோதமானது.  சந்தோஷமாக இருப்பவரால் ஒருகணங்கூட அவர் நினைக்கப்படுவதில்லை. அவருடைய லீலை ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது.

     அவர் வேண்டும்போதுவரிசையாக இன்னல்களைத் தந்து மனிதனைத் தம்மை ஞாபகப்படுத்திக்கொள்ளும்படி செய்துதுயரத்தில், ''ஓ நாராயணா!   என்னைக் காப்பாற்றும் என்று கதறும்படி செய்கிறார்.

       துயரத்தில் பீமாஜீ பாடீல் கதறியதைக் கேட்டவுடனே இறைவன் கருணை புரிந்தார்.  பீமாஜீக்கு திடீரென்று நானாவுக்குக் (நானாஸாஹேப்  சாந்தோர்க்கருக்குக்) கடிதம் எழுதவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.

       ''மற்றவர்களால் சாதிக்க முடியாததைக் கட்டாயம் நானாவால் சாதிக்கமுடியும். பாடீல் வைத்த நம்பிக்கை அவ்வளவு உயர்வானதாக இருந்தது.

      இதுவேபாடீலுக்கு ஒரு சுபசகுனமாகவும் அவருடைய வியாதி நிவாரணத்தின் ஆரம்பமாகவும் ஆகியது. அவர் நானாவுக்கு ஒரு விவரமான கடிதம் எழுதினார்.

     நானாஸாஹேபைப்பற்றி அந்த நேரத்தில் வந்த நினைவு ஸாயீநாதரின் உந்துதலேயன்றி வேறெதுவுமில்லை. அதுவே அவரது வியாதி நிவாரணத்தின் உற்பத்தி ஆயிற்று. ஞானிகளின் செயல்முறைகள் அற்புதமானவை.

      காலச்சக்கரத்தின் சுழற்சியிலுங்கூட இறைவனின் திட்டம் இருக்கும்போலத் தெரிகிறது. ஆகவேஎவரும் வேறுவிதமான கற்பனைகள் செய்துகொண்டு வீண்பெருமை பேச வேண்டா.

      நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் இறைவனே சூத்ரதாரி. அவனே காப்பவன்அவனே அழிப்பவன்அவன் ஒருவனே செயலாளி.
பாடீல் சாந்தோர்க்கருக்கு எழுதினார், ''எனக்கு மருந்து தின்று தின்று அலுத்துப் போய்விட்டதுவாழ்க்கையே வெறுத்துவிட்டது. இவ்வுலகமே எனக்கு சோகமயமாகிவிட்டது. இந்த வியாதியைக் குணப்படுத்துவது ஸாத்தியமில்லை என்று டாக்டர்கள்  கைவிரித்துவிட்டனர். வைத்தியர்களுக்கும் ஹகீம்களுக்குங்கூட மேற்கொண்டு  யோசனை ஏதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது. ஆகவேநான் ஒரே ஓர் உதவியை விநயத்துடன் கடைசியாகக் கேட்கிறேன். என்னுடைய மனத்தில் இருக்கும் ஒரே பலமான ஆசை உங்களை நிச்சயமாகச் சந்திக்க வேண்டுமென்பதுதான்.

       கடிதத்தைப் படித்த சாந்தோர்க்கரின் மனம் சோகத்திலாழ்ந்தது. பீமாஜீ  பாடீல் ஓர் உயர்ந்த மனிதர் என்று அவருக்குத் தெரிந்திருந்ததால் நானா மனமுருகிப்போனார்.


இதன் தொடர்ச்சி நாளை.....

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...