Thursday, July 4, 2013
உன் குடும்பம் கரை சேரும்....2
நேற்றைய தொடர்ச்சி.....
நான் சாயி பக்தரில்லை, வள்ளலாரை குருவாக வைத்திருக்கிறேன், ரமணரை குருவாக வைத்து இருக்கிறேன், வெங்கையா
சுவாமியை அல்லது விசிறி சுவாமியை குருவாக வைத்திருக்கிறேன், அய்யா வைகுண்டர்தான்
என் குரு என்றாலும், யார் உனது
குருவாக விளங்குகிறாரோ அவரை மானசீகமாகப் பிடித்துக் கொண்டு,உன்னை ஒப்படைத்துவிடு! அப்போது நீ எந்தப் பிரச்சினையும்
இல்லாமல் சுலபமாக வாழ்க்கையை நடத்தலாம்.
கடவுள் சோதிப்பார், குருவோ சோதனையிலிருந்து தப்பிக்க வழிகாட்டுவார். நீ
திறமைசாலியாக இல்லாவிட்டால் உனக்காக அவர் போராடி உன்னை சோதனையிலிருந்து மீட்பார்.
அக்கரை சேர்ப்பதில் அக்கறை கொண்டவர் நம் குரு.
எப்போதும் அவரைப் பிடித்துக்கொண்டிருக்கமுடியுமா?
முடியாதே சுவாமி எனலாம். எப்போதும்
பிடிக்கவேண்டாம். போகும் வழியில் மட்டும் அவரை நினைத்துக்கொள். போகும் வழி
என்றால்...?
கடன் வாங்கப் போகும் முன்...
கடன் தரப்போகும் முன்..
ஒரு செயலை ஆரம்பிக்கும் முன்..
சாப்பிடும் முன்... உறங்கும் முன்...
அவரை நினைத்துக்கொள்.. அவர் உன்னை வழி நடத்துவார்.
சத்சரித்திரம் சத்குருவை நம் படகோட்டி என்று சொல்கிறது.
இதைப் பற்றி தியானிப்போம்.
படகோட்டிக்கும் படகுக்கும் தரையில் வேலை எதுவும்
கிடையாது. நமக்கோ எப்போதும் தண்ணீரில் வேலை கிடையாது. அவசியம் இருந்தால் மட்டுமே ஆற்றைக்
கடப்போம். மற்றபடி அந்தப்பக்கம் கூட தலை வைத்துப் படுக்கமாட்டோம். அதற்குத்தேவையே
கிடையாதே எனவே, தேவை ஏற்படும்போது
மட்டும் நாம் அந்தக் கரையைக் கடக்க வேண்டிய நிலை வருகிறது. இந்த நிலையில் படகோட்டி
இல்லாமல் நாம் அக்கரை செல்லவேண்டுமானால் பின் வரும் விஷயங்கள் நமக்குத் தேவை.
ஒன்று நாம் படகு வைத்திருக்கவேண்டும், அதை இயக்கவும், பாதுகாக்கவும் தெரிந்தவராக இருக்கவேண்டும்.
நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், நீந்தும் போது தண்ணீர் ஆழமில்லாமலும், அதில் முதலைகளோ, முள்களோ பள்ளங்களோ இல்லாமலும் இருக்க வேண்டும். சுழல்
இருக்கக்கூடாது.. நாம் அக்கரைக்கு பத்திரமாகப் போகவேண்டும், நாம் எடுத்துச்செல்லும் பொருட்களும் பத்திரமாக வந்து
சேர வேண்டும்.. ஈரம் படக்கூடாது.. நம்மோடு நம் குடும்பத்தையும் அழைத்துச் செல்லும்
திறன் வேண்டும். ஆபத்து நேர்ந்துவிட்டால் தப்பிக்க வழி தெரிந்திருக்க வேண்டும்.
இப்படி நிறைய விஷயங்கள் இருந்தால்தான் நாம் தைரியமாக
ஆற்றைக் கடக்க முடியும். இல்லாவிட்டால் ஆற்றங்கரையை வெறித்துப் பார்த்துவிட்டு வீடு
திரும்பிவிட வேண்டியதுதான்.
இப்படி யாராவது நினைத்துக் கொண்டிருப்பது உண்டா?
கிடையாது.. ஒரு ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ ஓடக்காரனிடம் கொடுத்துவிட்டால்
அவன் பார்த்துக்கொள்ளப் போகிறான் என தைரியமாக எதைப் பற்றியும் சிந்திக்காமல் போகிறோம்.
ஓடக்காரன் எதற்கு?
டிரைவரை நம்பித்தானே வண்டியில் சொகுசாகப்பயணிக்கிறோம்.. நமது பாதுகாப்பு,
உடைமைகள், உயிர், எதிர்காலம்
எல்லாவற்றையும் பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி, ஓட்டுநரை நம்பி உட்காருவதில்தானே ஐயா இருக்கிறது அவன் பிரயாசைப்பட்டு,
கண் விழித்து, வழியில் மேடு பள்ளங்கள், எதிர் வண்டிகள், குறுக்கே வரும் தடைகள் எல்லாவற்றையும் பார்த்து கவனமாக நம்மை
இலக்குக்குக் கொண்டு போய் சேர்க்கிறான்.
இவ்வளவு தூரம் கொண்டு போனீர்களே! வாருங்கள் வீடு வரை
என்று டிரைவரைக் கூப்பிடுகிறோமா, என்ன?
அதுபோல உன் இலக்கை சேரும் வரையாவது
சத்குருவை உன் டிரைவராக வைத்துக்கொள். அவர் உன்னை கொண்டு சென்று சேர்ப்பார்..
பகவான் ராமகிருஷ;ணரிடம் தண்ணீர் மேல் நடக்கக் கற்றுக்கொண்ட மூடயோகி
ஒருவர் வந்து, ’பகவான், பதினைந்துஆண்டுகள்
தவமிருந்து நீர் மேல் நடக்கும் யோகத்தைக் கற்றுக்கொண்டேன்’ என்று சொன்னான்.
’பைத்தியக்காரா! ஒரு
எட்டணா தந்திருந்தால் ஓடக்காரன் உன்னை தண்ணீரை கடக்க வைத்து அக்கரையில் பத்திரமாக
சேர்த்திருப்பானே! இதற்குப்போய் பதினைந்து முழு ஆண்டுகளை வீணடித்து விட்டாயே’, என்றார்.
நாம் எல்லோருமே அந்த மூடயோகியைப் போல, தேவையற்ற ஒன்றுக்காக வாழ்நாளை வீணாக்குகிறோம்.
இது தேவையற்ற ஒன்று என்ற தெளிவு நமக்கு வருவதில்லை.
ஐம்பது ரூபாய் கொடுத்து ஆட்டோவில் போக வேண்டிய விஷயத்திற்காக
ஐந்து லட்சம் கொடுத்து கார் வாங்குகிறவனைப் போன்றதுதான் நமது தெளிவு. பெட்ரோல்,
மெயின்டனென்ஸ், டிரைவிங், டாக்ஸ் செலவுகள் மிச்சம் என நினைக்கவேண்டும்.
அந்தத் தெளிவு இல்லாததால் காருக்கு அடம் பிடிக்கிறோம்..
அது ஒரு சின்ன விபத்தில் சிக்கினாலும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறோம். ஐம்பது ரூபாய்
கொடுத்து போய்விட்டிருந்தால் இந்தக் கவலை நமக்கு வந்திருக்காது..
சரி.. இந்தத் தொல்லைகள் வராமல் வாழ்வை நகர்த்த
சத்குருவைப் பிடித்துக்கொள்ள வேண்டும். எப்படி அவரைப் பிடிப்பது? எப்படி அவரை நம் ஓடக்காரனாக்குவது?
இதன் தொடர்ச்சி நாளை.......
Wednesday, July 3, 2013
உன் குடும்பம் கரை சேரும்...1
உன் குடும்பம் கரை சேரும்...1
’பாடுபடுவது
ஆன்மீக லாபத்திற்காகவோ உலகியல் சுபீட்சத்திற்காகவோ எதற்காக இருப்பினும் சரி, எங்கு சத்குரு படகோட்டியாக இருக்கிறாரோ அங்கு
அவரே படகை அக்கரை சேர்க்கிறார்.’
( சத்சரித்திரம்: அத் 6 வசனம் 1)
நீ போகும் வழியில் எல்லாம் அவரை நினைத்துக் கொண்டு போ!
நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் அவரை துணைக்குக் கூப்பிடு! தெரிந்த விஷயமோ,
தெரியாத விஷயமோ, ஒன்றைச்செய்யும் போது உனது ஆலோசனை வேண்டும் என்று கேள்!
அப்போது அவர் உனக்கு வழி காட்டி, பதில்
சொல்லுவார்.
ஏன் இப்படிச் செய்யவேண்டும்? ஏனென்றால் நீ சாயி பக்தன். அவர் உனக்கு குருவாக
இருக்கிறவர், உனக்கு வழிகாட்டியாக
இருக்கிறவர். வழித்துணைக்கு வருகிறவர்.
சத்சரித்திரம் கூறுகிறது் ’நீ ஆன்மீக விஷயமாகப்
பாடுபட்டாலும் சரி, உலகில்
முன்னேறுவதற்காகப்பாடுபட்டாலும் சரி, சத்குரு எங்கே வழிகாட்டியாக இருக்கிறரோ அங்கு
அவரே நமது படகை வழிநடத்தி அக்கரை சேர்க்கிறார்’ என்று.
இந்த வாழ்க்கை ஓடத்தை நடத்துகிறவரை ஓடக்காரன் அல்லது
படகோட்டி என்பார்கள். குடும்பம் என்னும் ஓடத்தை இயக்குகிற படகோட்டியாக யார்
இருக்கிறார்களோ, அவர்களது திறமை, மனநிலை, செயல்முறை ஆகியவற்றின் படிதான் அந்தக் குடும்பத்தின்
தலையெழுத்து இருக்கும்.
மனைவி குடும்பத்தை ஏற்று நடத்தினால் அவளது
விருப்பப்படிதான் அந்தக் குடும்பம் நடக்கும், பிள்ளைகள் வளருவார்கள். மனைவி நல்ல குணவதியாக இருந்தால்
குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் இருக்கும்- இல்லாமை இருக்காது. குடும்பம்
தள்ளாடாமல் போகும்.
இல்லாள் இல்லாள் ஆயின் இருப்பது என்ன?
அதாவது குடும்பப் பெண்ணுக்கு நல்ல குணங்கள், கூர்த்த மதி, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிற அறிவு ஆகியவை
இல்லாவிட்டால் எதுவும் அந்தக் குடும்பத்தில் இருக்காது என்பது பொருள்.
அந்தக் குடும்பத்தை கணவன் நடத்துகிறார் என்றால்,
அவருக்கு நல்ல குணங்களே இல்லை. உத்தியோகம்
புருஷ லட்சணம் என்பார்களே, அப்படியொரு
உத்தியோகம் இல்லை! குடிகாரராக, சோம்பேறியாக,
ஊதாரியாக இருக்கிறார் என்றால், அந்தக் குடும்பத்தில் நல்லது எதுவுமே
இருக்காது, நடக்காது.
நிம்மதி இருக்காது, லட்சுமி கடாட்சம் இருக்காது, ஆனால் பிரச்சினைக்குப் பஞ்சம் இருக்காது, எப்போதும் கஷ்டம் இருக்கும். நிம்மதி குறைவும், நித்திரைக் குறைவும், தரித்திரமும் அவர் நடத்திச்செல்கிற குடும்பத்தில்
எப்போதும் இருக்கும். கடைசியில் பிரிவும், அழிவும் தப்பாமல் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகக்கூடாது என்பதால்தான்,
ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டு, ஆலோசனை செய்து குடும்பத்தை நடத்துங்கள் என்று
முன்னோர்கள் சொன்னார்கள். மனைவிக்கு குணமும், கணவனுக்குப் பொருள் தேடும் திறனும் இருக்கவேண்டும்
என்றார்கள்.
இந்த இருவரும் நாலும் தெரிந்து நடந்து கொண்டால்
எல்லாவற்றிலும் நன்றாக இருக்கலாம். அவர்கள் செலுத்துகிற வாழ்க்கை ஓடம் சு்கமாக செல்லும்.
அதில் பிள்ளைகள், சுற்றம் ஆகியோர்
இனிமையாகப் பயணிக்கலாம். இருவரில் ஒருவர் தவறினாலும் பிரச்சினைகள் வந்து ஓடத்தையே சிதைத்துவிடும்.
இந்தத் தொல்லை நமக்கு எப்போதும் இருக்கக் கூடாது
என்பதால்தான் சாயி பக்தராக இருப்பவர், தான் சார்ந்த எல்லா விஷயத்திற்கும் அவரை தலைவராக நியமித்துப் பொறுப்பை
அவரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்
பின்னால் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்.
நான் சாயி பக்தரில்லை, வள்ளலாரை குருவாக வைத்திருக்கிறேன், ரமணரை குருவாக வைத்து இருக்கிறேன், வெங்கையா
சுவாமியை அல்லது விசிறி சுவாமியை குருவாக வைத்திருக்கிறேன், அய்யா வைகுண்டர்தான்
என் குரு என்றாலும், யார் உனது
குருவாக விளங்குகிறாரோ அவரை மானசீகமாகப் பிடித்துக் கொண்டு,உன்னை ஒப்படைத்துவிடு! அப்போது நீ எந்தப் பிரச்சினையும்
இல்லாமல் சுலபமாக வாழ்க்கையை நடத்தலாம்.
கடவுள் சோதிப்பார், குருவோ சோதனையிலிருந்து தப்பிக்க வழிகாட்டுவார். நீ
திறமைசாலியாக இல்லாவிட்டால் உனக்காக அவர் போராடி உன்னை சோதனையிலிருந்து மீட்பார்.
அக்கரை சேர்ப்பதில் அக்கறை கொண்டவர் நம் குரு.
எப்போதும் அவரைப் பிடித்துக்கொண்டிருக்கமுடியுமா?
முடியாதே சுவாமி எனலாம். எப்போதும்
பிடிக்கவேண்டாம். போகும் வழியில் மட்டும் அவரை நினைத்துக்கொள். போகும் வழி
என்றால்...?
இதன் தொடர்ச்சி நாளை பார்க்கலாம்................
Tuesday, July 2, 2013
பிரார்த்தனை செய்.. வேண்டுதல் பலிக்கும்.
நமக்கு எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. வேலைகள் உள்ளன.
அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டு இவ்வளவு தூரம் பிரார்த்தனைக்கு வருவதோ, பத்திரிகையைப் படிப்பதோ, பாபா பற்றிய செய்திஜளை இணையத்தில் தேடி பிடித்து
படிக்கிறோம் என்றால், எதன்
மூலமாவது நமக்கு விடிவு வந்து விடாதா என்ற எண்ணத்தில்தான்.
பிரார்த்தனைக்கு வருதல் அல்லது சாயி தரிசனம் புத்தகத்தை
படித்தல் மூலமாக, ஒருவேளை பாபா நன்மை
செய்தாலும் செய்வார் என்ற எண்ணத்தில், இங்கு வருவதும், புத்தகம்
படிப்பதுமாக இருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொள்ளுங்கள்.
’ஒருவேளை’ என்ற வார்த்தையை எடுத்து விட்டு, ‘நிச்சயமாக’ இதன் மூலம் பாபா
எனக்கு நன்மையைச் செய்வார் என்ற உறுதி உங்கள் மனதில் ஏற்பட வேண்டும். அப்போதுதான்
பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும். இதன் வாயிலாக பாபா நம்மோடு பேசுவதை
உணரமுடியும்.
நம்பிக்கையின்றி இறைவனிடம் எதையாவது பெற்றுவிடலாம் என
நினைப்பது வீண். பிரார்த்தனை
செய்கிறவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது பிரார்த்தனை
என்பது இறைவனுக்கு நாம் வழக்கமாக செய்கிற பூசை புனஸ்காரம் போன்ற சடங்கு அல்ல.
நாம் அவரோடு ஏற்படுத்திக் கொள்கிற தொடர்பு. பாபாவுக்குச்
செய்கிற அபிஷேகம் எப்படி அவருடைய விக்ரகத்தைத் தூய்மை செய்கிறதோ அப்படித்தான் அவரிடம்
நாம் செய்கிற பிரார்த்தனை நமது மனத்தைத் தூய்மை செய்கிறது.
ஒவ்வொரு நாளும் நம்மையறியாமல் அல்லது தேவைக்காக
தவறுகளைச் செய்கிறோம்.. அது நமது பாவக்கணக்கில் சேர்கிறது. இந்தப் பாவத்தைப்
போக்குவதற்க்கு சுலபமான இரண்டு வழிகள் உண்டு.
ஒன்று பிரார்த்தனை
இன்னொன்று நாம ஜெபம்.
நாம ஜெபம் மலை போன்ற பாவங்களையும் அழிக்க வல்லது என்பது
நம் அனைவருக்கும் தெரிந்ததே! எனவே,
மலை போன்ற நமது தவறுகள், பாவங்கள்
அனைத்தும் கழிவதற்கு முதலாவது நாம் ஜெபம் செய்துவிட்டுத்தான் பிரார்த்தனை செய்வதற்குச்
செல்ல வேண்டும்.
அடுத்து, மலையை உடைத்து எறிந்துவிட்டாலும் அதில் தூசு தும்புக்கள்
இருக்கும் அல்லவா? அதைத்
துடைப்பது போன்றதுதான் பிரார்த்தனை. சுருக்கமாக விளங்கும் வகையில் சொல்லவேண்டும் என்றால்,
தினமும் வீட்டைப் பெருக்கி சுத்தப்படுத்துவது
போல, மனதை பெருக்கி
சுத்தப்படுத்துவது தினமும் நாம் செய்கிற பிரார்த்தனையின் அர்த்தம்..
பிரார்த்தனை செய்வதற்கு முன்னால் சில விஷயங்களை நாம்
நிச்சயம் செய்தாக வேண்டும்..அது, நமது
கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொண்டு மானசீகமாக கடவுளிடம் மன்னிப்புக்கேட்டல். தெரியாமல்
செய்துவிட்டேன்.. மன்னித்துவிடு அப்பா... என்றோ, ஏதோ என் நேரம்.. உன்னிடம் தவறாகவும், உனக்கு எதிராகவும், என் மனசாட்சிக்கு விரோதமாகவும் நடந்து கொண்டு விட்டேன்..
இனி அப்படி செய்யமாட்டேன்.. முடிந்தவரை நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.. நீயும்
என்னை அந்த வழிக்கு கொண்டு செல்லாதே.. என்று நமது தவறுகளை ஒப்புக்கொண்டு, அவருடன் ஒப்புறவாக வேண்டும்.. அதன் பிறகு
பிரார்த்தனை செய்தால் அது பலிக்கும்.
பிரார்த்தனை பலிக்குமா? பலிக்காதா என்று சந்தேகப்படக்கூடாது. பாபாவின் அனுமதியில்லாமல்
யாரும் அவரது இடத்தில் கால் வைக்கமுடியாது. அவர் சார்ந்த விஷயங்களை கேள்விப்படவோ,
அவரைப் பற்றி படிக்க வேண்டுமானாலும் கூட
நமக்கு நல்லகாலம் பிறக்காமல் வாய்ப்பு அமையாது..
எனவே, நீங்கள்
சாயி பற்றி படிக்கவோ, அவரது ஆலயத்திற்குச்
செல்லவோ நேர்கிறது என்றாலே உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது, பாபா உங்களை அழைத்தார் என்பதுதான் பொருள்.
பாபா எதற்காக அழைப்பார்? உங்களுக்கு தரவேண்டிய அருளைத் தருவதற்காகத்தான் அவர் அழைப்பார்.
அவரது அழைப்பு என்றைக்கும் வீண் போகாது.. எனவே, நம்பிக்கையோடு நீங்கள் அவரிடம் பிரச்சினைகளை
முறையிட்டுப்பிரார்த்தனை செய்யலாம்.. அது நிச்சயம் நடக்கும்..
உங்கள் பிரார்த்தனை தள்ளிப் போகிறது என்றால், இதை ஒரு பொருட்டாக நினைக்காதே! அல்லது நீ தவறுதலாக
வேண்டுகிறாய் என்று பொருள்..
கண்டிப்பான ஒரு ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
அப்போது மாணவர்களிடம், ’தூங்கும் முன்பு நீங்கள் மனதார வேண்டிக்கொண்டால் இறைவன் நிச்சயம் உங்கள் வேண்டுதலை
நிறைவேற்றுவார். நீங்கள் தினமும் அப்படியே வேண்டிக் கொள்ளுங்கள்’ என்றார்.
ஒரு மாணவன் சொன்னான், ‘ஐயா, நான் தினமும் அப்படித்தான் வேண்டிக் கொள்கிறேன்.. ஆனால்
கடவுள் என் பிரார்த்தனையை கேட்பதேயில்லை’
’என்ன
வேண்டிக்கொண்டாய்?’
’பிரார்த்தனையை
வெளியே சொன்னால் பலிக்காது என்கிறார்களே’
’பரவாயில்லை சொல்’
’சொன்னால் நீங்கள்
வருத்தப்படுவீர்கள்’
’வருத்தப்படமாட்டேன்...
சொல்’
’நீங்கள் இந்தப்
பள்ளியை விட்டு மாற்றலாகிப்போகவேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன்.. இதுவரை
நடக்கவில்லையே’ என்றான் மாணவன்.
’ஓ! அது உன்
பிரார்த்தனையில்லை.. என் பிரார்த்தனை’ என்றார் ஆசிரியர்.
இந்த இருவரது பிரார்த்தனையையும் பாபா கேட்கவில்லை
என்றால் அதற்கு காரணம் உள்ளது. கண்டிப்பான ஆசிரியராக இருக்கிறார் என்றால், அவர் எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறார் என்று
அல்லவா பொருள்- அத்தகைய ஆசிரியர் அறிவாளி மாணவர்களுக்கு மட்டும் நெருக்கமானவராக இல்லாமல்
பின் தங்கிய மாணவர்களையும் முன்னேற்றும் விதத்தில் குறிப்பாக தன்னை வெறுக்கும்
மாணவன் விரும்பும் விதத்தில் அவனை மாற்றுவதற்காக அவர் அங்கேயே இருந்தாக வேண்டும்
என்பதால் அந்தப் பிரார்த்தனையை பாபா கேட்கவில்லை...
ஆனால் நாம் அப்படி வேண்டிக் கொள்ளப் போவதில்லை.. நமது
பிரச்சினைகள் தீரவேண்டும்.. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் வேண்டிக்கொள்ளப்
போகிறோம்.. அதை நிச்சயம் பாபா கேட்பார்..
சரி, பாவத்தைப்
போக்க நாம ஜெபம், பிரார்த்தனை
என்று சொன்னீர்கள்.. புண்ணியத்தைச்சேர்க்க எதையும் சொல்லவில்லையே என்று கேட்கிறீர்களா? பசித்த உயிரினங்களுக்கு, அதாவது விலங்குகளுக்கு வயிறார உணவு கொடுங்கள்..
பசித்தவர் முகம் பார்த்து ஒரு தம்ளர் தண்ணீரையோ, மோரையோ கொடுங்கள்... சுருக்கமாக அன்னதானம் செய்யுங்கள்..
எப்படிப்பட்ட பாவமாக இருந்தாலும் கரைந்து புண்ணியம் உங்கள் கணக்கில் ஏறும்.பாவம்
கரைந்தாலும் புண்ணியம் சேர்ந்தாலும் நன்மை உங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று
பொருள்..
இதோ அவர் உங்கள் இதயவாசல் அருகே நிற்கிறார். அவரை நாம
ஜெபத்தோடும், பிரார்த்தனையோடும்
அழைத்துவந்து நம் கோரிக்கைகளை கேட்கவைப்போம்.. வேண்டியதை விரைந்து பெறுவோம்..
கருணையே உருவான நம் சாயி மாதா, நாம்
வேண்டியதை வேண்டியபடி நிச்சயமாகத் தருவார். நம்மை அவர் ஆசீர்வதிப்பார்.
சாயி வரதராஜன் சத்சங்கத்தில் கேட்டது.
சாயி வீரமணி
Subscribe to:
Posts (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ' அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் ' என்றான். மன்னரும்...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...



