Monday, July 28, 2014

நிலையான துணை!

baba6

மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளிலிருந்தும் விடுபடுவதற்காக, அவர்களை தம் பக்கம் இழுத்து, உதவி செய்து, பண்படுத்தி, ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச்செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயி நாதரின் முக்கியப் பணியாகும். 'ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா' புத்தகத்தில் பாபா அவர் முன்பிறவியைப்பற்றி பல கதைகள் கூறியிருக்கிறார். அவர் பரமாத்மாவாக இருப்பதால், எல்லா ஜீவாத்மாக்களின் முற்பிறவிகள் பற்றியும் அறிந்திருக்கிறார்.



"ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் எவரேனும் ஒருவர் இறப்பை சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லோரையும் பற்றி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்". ஓர் உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவை பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும்.



ஆனால், சத்குரு ஒருவர் மட்டும்தான் இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார். நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்வோம்.



இவ்வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்கள்யாவும் அவருடைய கட்டுப்பாட்டிற்கும் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே நடக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். இத்தகைய அனுபவங்கள் ஆத்மாவை உய்விக்கத்தான் என்பதால் அவை தேவையானவை என்றும் நாம் உணர வேண்டும். இத்தகைய தீவிர நம்பிக்கையும், பொறுமையும் உடையவர்கள், இவற்றை சீக்கிரமே இழந்து விடும் மற்றவர்களை காட்டிலும், விரைவாக முன்னேற்றம் காண்பார்கள், பாபா உறுதியளிக்கிறார்: "ஒரு கஷ்டமான நிலைமையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம் இருங்கள் ஏனெனில் என்னுடைய குழந்தைகளையும், பக்தர்களையும், எப்படியாவது காப்பாற்றுவதே என்னுடைய கடமையாகும்." இதைவிட சிறந்த உறுதி மொழியை வேறு எவரால் நமக்கு கொடுக்க முடியும்?

Sunday, July 27, 2014

புத்திரபாக்கியம் அருளும் பாபா!

a9055-shirdi-sai-ananda-bliss-mandala

ஹர்தாவைச் சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை. 1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச் சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால் அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்குச் செல்லவில்லை. 1911-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் சீரடிக்கு பாபாவிடம் வந்தார்.



பாபா: என்ன! திமிறு ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின் படி (விதிப்படி) உனக்கு ஏது ஆண் குழந்தை? நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.



தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரபேறு அருளினார்.

Saturday, July 26, 2014

மகா புண்ணியசாலி!

3ac3f-shirdi_sai_baba-shamadhi-1

புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும் பெரும் செல்வராக்கக்கூடிய சக்தி பெற்றவராயிருந்தும், ஜோலியை (பிச்சைக்காக துண்டை மடித்து கையேந்தும் பொருளாக பயன்படுத்துதல்) தோளில் மாட்டிக்கொண்டு வீடு வீடாகச் சென்றார்.



யாருடைய வீட்டு வாசலில் பாபா பிச்சைக்காக நின்று, "ஒ மகளே எனக்கு உன் சோள ரொட்டியிலிருந்து கால் ரொட்டி கொண்டு வா" என்று கரமேந்திப் பிச்சை எடுத்தாரோ, அவர் மகா புண்ணியசாலி. ஒரு கரத்தில் ஜோலியை ஏந்தி, மற்றொரு கரத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துக்கொண்டு சில குறிப்பிட்ட இல்லங்களுக்கு வாயில் வாயிலாகச் சென்றார். பாஜி, சாம்பார், பால்,மோர் போன்ற திரவ ரூபமான பதார்த்தம் எதுவாக இருந்தாலும், அது அவர் வைத்திருந்த தகர டப்பாவில் கொட்டப்பட்டது. ஆனால், சாதத்தையோ,சோள ரொட்டியையோ வாங்கிக் கொள்வதற்கு அவர் தமது ஜோலியை விரிப்பார்.



விதவிதமான பதார்த்தங்களை தனித்தனியாக ருசித்து சாப்பிடவேண்டும் என்கிற ஆவல் எங்கிருந்து எழும்? ஜோலியில் வந்து விழுந்த உணவை அவர் திருப்தியுடன் உண்டார். சுவையுள்ளதாயினும் சரி, சுவையற்றதாயினும் சரி, அதை பற்றிக் கவலைப்படவேயில்லை. நாக்கு சுவை உணர்வை இழந்து விட்டது போலும்!



ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் அவர் பிச்சை எடுப்பார். கிடைத்ததைக் கொண்டு வயிற்றை நிரப்புவார். திருப்தியும் அடைவார். பிச்சையாவது ஒரு நியமனத்துடன் எடுத்தாரா? அதுவும் இல்லை. விருப்பப்பட்டபோதுதான் பிச்சை எடுக்க கிளம்புவார். சில நாட்களில் பிச்சை எடுக்கக் கிராமத்தினுள் பன்னிரண்டு சுற்றுகள் சென்றாலும் செல்வார்.



இம்மாதிரியாகப் பிச்சை எடுத்துச் சேர்க்கப்பட்ட உணவு, மசூதியில் இருந்த ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தில் கொட்டப்படும். இதிலிருந்து காகங்களும், நாய்களும் சுதந்திரமாக உணவு உண்டன.



பூனைகளையும், நாய்களையும்கூட கனவிலும் விரட்டாத மனிதர், எப்படி ஏழை எளியவர்களை விரட்டுவார்? அவரது வாழ்க்கை புனிதமானது.



 ஸ்ரீமத் சாயி இராமாயணம். அத்தியாயம் 8.

Friday, July 25, 2014

பரிட்சை!

e419f-shirdi_saibaba

காகா சாஹேபின் (பிராம்மணர்) முறை வந்தது. அவர் நல்ல "தங்கம்" தான் என்பதில் ஐய்யமில்லை இருந்தாலும் பரீட்சிக்கப்பட வேண்டும். கத்தி ஒன்றை அவரிடம் கொடுத்து ஆட்டைக் கொல்லும்படி பாபா அவரைக் கேட்டார்.



காகாவின் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பாபா "நிறுத்து, எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்! பிராமணனாய் இருந்துகொண்டு ஆட்டைக் கொல்கிறாய்" என்றார்.



காகா சாஹேப் கீழ்படிந்து கத்தியைக் கீழே வைத்துவிட்டு பாபாவிடம் கூறினார், "தங்கள் சொல்லே எங்களுக்கு சட்டமாகும். எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது. எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம்.இரவும்,பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்கு தெரியாது அல்லது அதை நாங்கள் கருதவில்லை.பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. ஆனால் (பாபாவின்) தங்கள் கட்டளைகளுக்கு நம்பிக்கையுடனும், மாறாத உறுதியுடனும், ஒழுங்கான பணிவுடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்"
பின்னர் காகா விடம் இருந்து கத்தி திரும்பப் பெறப்பட்டது. ஆடு தாமாகவே இறந்து விட்டது.




  • ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 23

Thursday, July 24, 2014

சிற்றெறும்பின் காலில்..

sai29

பாபா அடிக்கடி சொல்வார்: "'சிற்றெறும்பின் காலில் கட்டியிருக்கிற மணியின் ஓசையைக் கூட என்னால் கேட்கமுடியும். நீ என்ன செய்தாலும் அதை உடனே நான் பார்த்துவிடுவேன். உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்!" என்பார்.



நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற விஷயத்தைப் பற்றியோ கவலை படமாட்டோம்.



அனைத்தையும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதை தெரிந்து அமைதியாக இருப்போம். அமைதியாக - பொறுமையாக அனைத்தையும் கவனியுங்கள். பாபா உங்களை கவனித்து வருகிறார்.



 

Wednesday, July 23, 2014

வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்!

meekkudi

எங்கு என் நாமமும் பக்தியும் லீலைகள் பற்றிய ஏடுகளும் புராணமும் இதயத்தில் குறையாத சிந்தனையும் இருக்கின்றனவோ, அங்கு எப்படிப் புலனின்ப நாட்டம் தலைகாட்ட முடியும்?



என்னுடைய கதைகளை மட்டும் கேட்டால்கூடப் போதும்,வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்; என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியிலிருந்து விடுவிப்பேன்.



பக்தியுடன் என்னுடைய லீலைகளை செவிமடியுங்கள்;கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிபலியுங்கள்; பிரதிபலித்தபின் தியானம் செய்யுங்கள்; உன்னதமான திருப்தியை பெறுவீர்கள்.



ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

இன்பமும் துன்பமும்

ac821-sridisaibaba

இன்பமும் துன்பமும் மாயையே. இவ்வுலகத்தில் தோன்றும் இன்பம் உண்மையான இன்பமாகாது. அதுவே உண்மையான இன்பம் என்று நம்பிவிடுவதால் உலகப்பற்றுள்ள மனிதன் அதனால் விசையுடன் கவரப்படுகிறான். ஒவ்வொருவருடைய பிராரப்தத்தின் படி, ஒருவனுக்கு அறுசுவை உண்டிகள் கிடைக்கின்றன; ஒருவனுக்கு மக்கின ரொட்டி துண்டுகளும், வேறு ஒருவனுக்கு தவித்துக் கஞ்சியும் கிட்டுகின்றன. பிந்தியவர்கள் அதனால் மனவருத்தமடைகின்றனர்; முந்தியவர்கள் தங்களுக்கு குறையொன்றுமில்லை என எண்ணிக்கொள்கின்றனர். அனால் இவைகளில் எதை உண்பதாலும் கிட்டும் பலன் ஒன்றே, அதாவது பசி தீர்வது. ஒருவன் ஜரிகை துப்பட்டாவை போர்த்திக் கொள்கிறான். இவருடைய நோக்கமும் ஒன்றே, அதாவது உடலை மறைத்துக் கொள்வது. இன்பமும்,துன்பமும் அவரவர் அபிப்பிராயத்தைப் பொருத்தது. இது மாயையின் தோற்றம், அழிவைத் தரக்கூடியது. மனதில் சுகம், துக்கம் என்ற எண்ணங்கள் தோன்றும் போது, அவற்றிற்கு இடம் கொடுக்காதே, எதிர்த்து நில். அது முற்றிலும் மாயையே.



ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...