Monday, May 2, 2016

நில்! கவனி! செல்!

சாயி வரதராஜன் சீரடி செல்லும்போது, அவருடன் சென்டிரல் நோக்கிச் சென்றேன். புறநகர் ரயிலில் பலர் இருந்தனர். அவர்கள் மத்தியில் சாயி வரதராஜன் ஒருவர். அவரை யாரும் கண்டுகொள்ளவேயில்லை.
எனக்கு ஆச்சரியம். அவரிடம் கேட்டேன்: ”உங்களைப் பார்க்க ஒரு கூட்டம் காத்துக்கிடக்கிறது. உங்கள் தரிசனம் கிடைத்ததும் பரவசத்தால் பலர் அழுகிறார்கள். அப்படியிருக்க, வீட்டிலும், ஊரிலும், ஏன்? இங்கே இத்தனை பேர் இருக்கிறார்கள், யாரும் உங்களை கண்டு கொள்ளவே இல்லையே!இது ஏன்?” எனக் கேட்டேன்.
கிராமப்புறத்தில், செங்கல்லை நட்டு வைத்து, அதை ஒரு குல தெய்வமாகக் கும்பிடுவார்கள். அதைப் பிடுங்கிச் சென்று எங்காவது ஓரிடத்தில் வைத்தால், யாரும் கும்பிட மாட்டார்கள். சிலர் அந்தக் கல்மீது உட்காருவார்கள்.
சிலர் அதை தலையணையாகப்பயன்படுத்துவார்கள். சிலர் நாயை அடிக்கவோ வேறு எந்த செயலுக்கோ அதைப் பயன்படுத்துவார்கள். தேவையில்லாத வர்கள் அந்தக் கல்லை கண்டு கொள்ளாமல் செல்வார்கள்.
நடப்பட்டபோது, கும்பிடும் தெய்வமாக இருந்த நம்மை இவர்கள் கண்டுகொள்ளாமல் போகிறார்கள் என கல் கவலைப்படுவதில்லை. ஒரு அதிகாரி வேறு ஊருக்குச் சென்றால், அவர் அதிகாரி என்றாலும் அதற்காக யாரும் கவலைப்படமாட்டார்கள், அவருக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். இப்படித்தான், எங்கு என் தேவையிருக்கிறதோ, யாரால் அறிந்து கொள்ளப் படுகிறேனோ அவர்களால் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறேன். பிறரைப் பொறுத்தவரை நான் சராசரி மனிதன்!  என்றார் அவர்.
சாயி பக்தர்கள் வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது என்ற பேச்சு பரவலாக பக்தர்களிடையே இருக்கிறது. இதைப் பற்றி அவரிடம் கேட்டோம்.
இவ்வாறு சொல்வது பெந்தேகொஸ்தே கிறித்தவர்களின் பிரச்சாரம் போலன்றி வேறு அல்ல என்ற அவர், ”மேகா என்ற பக்தர், சீரடியில் பாபாவை பிரதான தெய்வமாக பூஜீத்து வந்தவர். அவர் உயிருடன் இருந்தவரை அவர்தான் மதிய ஆரத்தியைச் செய்துவந்தார். முதலில் கிராம தேவதைகளுக்கு பூiஜகளை செய்துவிட்டு, கடைசியாகத்தான் மசூதிக்கு வருவார். ஒருநாள், கண்டோபா கோயிலில் பூஜை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எவ்வளவு முயன்றும் கோயிலைத் திறக்க முடியாததால், திரும்ப வந்து விட்டார். பிறகு பாபாவுக்கு பூஜை செய்ய முயன்ற போது, பாபா சொன்னார்: ”ஆக, இன்று உமது நித்திய பூஜையில் ஒரு துண்டு விழுந்திருக்கிறது. மற்ற தெய்வங்களுக்குப்பூஜை செய்துவிட்டீர். ஆனால் ஒரு தெய்வம் இன்னும் பூஜை செய்யப் படாமலே இருக்கிறது,போய் அந்த பூஜையை முடித்துவிட்டுத்திரும்பிவா! என்றார்.
”பாபா, கதவு  மூடியிருந்தது. முயற்சித்துப் பார்த்தும் முடியவில்லை. ஆகவே, திரும்பி வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது”  என்றார் மேகா.
”இப்போது போம், கதவை திறக்கமுடியும்”  எனக் கூறினார் பாபா. ஒரு கணமும் தாமதிக்காமல் சென்ற மேகா கதவைத் திறக்க, அது திறந்து கொண்டது. பூஜையை முடித்துவிட்டு வந்து, பாபாவுக்கு பூஜை செய்தார்.

பாபா, பிற தெய்வ வழிபாட்டை அழிப்பதற்காக அல்லஅவற்றினை மேலும் 

சிறப்பாக மேம்படுத்துவதற்காக   அவதரித்து வந்தவர் என்பதை இதன் மூலம் 

அறிந்துகொள்ளலாம்.! இப்படிக்   கூறினார் சாயி வரதராஜன்.

சாயி வீரமணி

என்னிடம் வா! ஜெயிக்க வைக்கிறேன்!

ஒருவர் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால், தான் போகிற பாதை சரியானதுதானா என கவனத்துடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கத்தவறினால் வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்துவிடும்.
கவனத்தோடு அணுகாவிட்டால் நட்டத்தோடு உட்கார வேண்டும் என்பது எனது அனுபவம். நான் சாயி பக்தனான பிறகு, எனது வாழ்க்கை முற்றிலுமாக மாறத் தொடங்கியது. அதற்கு முன்பு இருந்த வரதராஜன் வேறு, இப்போதைய வரதராஜன் வேறு என்பதை உணரத் தொடங்கினேன்.
பாபா ஒவ்வொரு விக்ஷயத்தையும் கற்றுக் கொடுத்து வந்தார். அதில் ஒன்று எனது பழைய அணுகுமுறைகளை மாற்றுவது. அடுத்தது, எதையும் ஈர்த்துக்கொள்ள அறிந்து கொள்வது. இந்த ஈர்ப்பை அவர் தனது வாழ்க்கை சரிதத்தை படிப்பதிலிருந்து துவங்கி வைத்தார்.
இதற்கு முன்பெல்லாம் நான் பலரது வாழ்க்கை வரலாறுகளை படித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன். அறிய வேண்டிய அரிய மனிதர்கள் என்ற தலைப்பில் நான் எழுதிய தொடர்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பல தலைப்புகளில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.
அப்போதெல்லாம் நான் அறிந்துகொள்ளாத ஒன்று இப்போது விளங்கியது. அதுதான் ஈர்ப்பு என்பது. ஒரு பொருளை எவ்வளவு உயரத்திலிருந்து தூக்கிப் போட்டாலும் பூமி அதை தனது ஈர்ப்பு சக்தியால் இழுத்துக்கொண்டுவிடுகிறது.
பல ஆண் - பெண்களைப் பார்த்தாலும் ஒருவரை மட்டும் கவர்கிறோம். ஒருவரால் மட்டும்தான் கவரப்படுகிறோம். இந்தக் கவர்தல்தான் காதல், நட்பு எனப்படுகிறது. காதல் என்பது ஒருவித மனதின் ஈர்ப்பு.
எனக்கு எழுதப் பிடிக்கிறது, இன்னொருவருக்கு வரையப் பிடிக்கிறது, அடுத்தவருக்கு விளையாடப்பிடிக்கிறது என்றெல்லாம் கூறுகிறோம் அல்லவா? இந்த பிடித்தல்தான் ஈர்ப்பு. இந்த ஈர்ப்பின் மீது நாம் கவனத்தைச்செலுத்தி அதையே லட்சியமாகக் கொண்டு தொடர்ந்தால் அது நம்மை எங்கோ அழைத்துச் சென்றுவிடுகிறது. இதை பாபா அற்புதமாகக் கற்றுத் தந்தார்.
மிகச்சாதாரணமாக வாழ்வை ஆரம்பித்து வெற்றி தோல்விகளோடு போராடிக் கொண்டிருந்த என்னை, ஜெயித்த மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்குமாறும், ஏற்கனவே படித்தவற்றைப் பற்றி அலசி ஆராயுமாறும் பாபா தூண்டினார்.
இந்தத் தூண்டுதலில் நான் படித்தது அவரது சத்சரித்திரத்தைத்தான். நீங்கள் அதை எப்படிப் படிக்கிறீர்களோ எனக்குத் தெரியாது.
பின்புலமே இல்லாத ஒரு சிறுவனால், தனக்கென எதுவுமில்லாத ஒரு பக்கிரியால் எப்படி உலகத்தைக் கவரமுடியும்! எப்படி கடவுளாக மாற முடியும் என்ற ரகசியத்தை அவரது வாழ்க்கை உணர்த்துவதாகவே உணர்ந்தேன். பிறகு, வாழ்வில் முன்னேறிய பலரது வாழ்க்கை வரலாறுகளைப்படிக்க ஆரம்பித்தேன். துறவிகளாக, சந்நியாசிகளாக, மகான்களாக வாழ்ந்து உயர்ந்து காலத்தை வென்ற பெரியவர்களின் வாழ்வை அலசத் தொடங்கினேன்.
இயேசு பற்றி மட்டுமல்ல, புத்தர், நானக், முகம்மது நபிகள், இராமர், கிருஷ்ணர், ரமணர், ராகவேந்திரர், ராம கிருஷ்ண பரம ஹம்சர், பாபா என யாரை எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்குப்பிறரிடமிருந்து ஏதோ ஒரு தனித் தன்மை இருந்தது.
பிறரைவிட ஏதோ ஒன்றில் அவர்கள் மாறுபட்டு தோன்றினார்கள். அந்த மாறுபட்ட ஒன்றை தங்கள் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருந்தார்கள். இது அவர்களை சாதாரண மனித நிலையைத் தாண்டி உயர்ந்த நிலைக்கு அழைத்துச் சென்றது.
அது என்னவாக இருக்கும் என என்னை யோசிக்க வைத்தது. அவர்கள் தேர்வு செய்த விசயங்களைப்போல, நானும் எனக்கென ஒரு விசயத்தை தேர்வு செய்துகொள்ள முடிவு செய்தேன். அந்த முடிவு என் வாழ்க்கையை மாற்றியது.
ஏதோ ஒன்றை நமக்குப் பிடித்தது என்கிறோம், எதையோ இது எனக்குப் பிடிக்காது என்கிறோம். ஒருவரை நல்லவர் என்றும், வேறு ஒருவரை கெட்டவர் என்றும், நண்பர் என்றும் பகைவர் என்றும், கூறுகிறோம். துன்பம் என்றும் இன்பம் என்றும், விருப்பு என்றும் வெறுப்பு என்றும் நமக்கு நாமே சொல்லிக் கொள்வதெல்லாம் என்னவென யோசித்தேன்.
எதிலெல்லாம் எனக்கு விருப்பம் உள்ளதோ அவையெல்லாம் எனக்குச் சாதகமானவையாக, எதிலெல்லாம் எனக்கு விருப்பம் இல்லையோ அவையெல்லாம் எனக்கு நேர்மாறானதாக ஆகிறது என்பதை அறிந்தேன்.
எந்த ஒன்றின் மீது விருப்பம் ஏற்படுகிறதோ, அதை நோக்கி எனது மனம் இழுக்கப்படுகிறது. இப்படித்தான் இதற்கு முன்னும் நடந்தது. இப்போதும் நடக்கிறது. இனியும் நடக்கும் என்பது எனக்குப் புரிந்தது.
எனது படிப்பு, வேலை, காதல், கல்யாணம், குழந்தைப் பேறு இவையெல்லாம் எனக்குள் ஏற்பட்ட உறுதியான விருப்பத்தால் வந்தவை. அது மட்டுமல்ல, நான் அணிகிற சட்டை, வாங்குகிற பேனா, உண்ணுகிற உணவு என எதுவாக இருந்தாலும் அவையெல்லாம் என்னை கவர்ந்தவை என்பதை உணர்ந்துகொண்டேன்.
இந்த விருப்பம் ஓர் ஈடுபாட்டைக் கொடுத்து என்னை அதன் பக்கம் சாய வைத்தது என்பதை அறிந்தபோது, எனது அணுகு முறையை அதற்கேற்ப மாற்றத் திட்டமிட்டேன். ஒன்று நாம் கவர வேண்டும், அல்லது கவரப்படவேண்டும். இதுவே நமது அணுகு முறையில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ற தீர்மானத்தை எடுத்து, அதை யுகங்களைக்கடந்த மனிதர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.
அவர்களும் இத்தகைய விருப்பம் ஒன்றில் லயமாகி இருந்ததால்தான் ஜெயித்தார்கள் என்பதை அறிந்தேன். ஏதோ ஒன்றின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு அவர்களது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது போல, நான் ஜெயிக்கவேண்டுமானால் எதிலாவது கவனத்தைச் செலுத்தி, அதைக் கவரவேண்டும் என்பதை மெல்ல நடைமுறைப் படுத்தினேன்.
இதில் ஏற்பட்ட ஈர்ப்பு சக்தியை உணர்ந்த பிறகு எனது நடைமுறை, அணுகுமுறை மாறியது.

Sunday, May 1, 2016

கோயிலில் வலம் வருவது எப்படி?

கோயிலில் வலம் வருவதைப் பிரதட்சணம் என்கிறார்கள். கோயிலை நமது வலக்கைப் பக்கமாக இருந்து சுற்றாமல் இடக்கைப் பக்கத்திலிருந்து சுற்றுகிறார்கள். இதுதானே அப்பிரதட்சணம்? ஆனால் இதை பிரதட்சணம் என்கிறார்களே, ஏன் இந்த முரண்பாடு?
உங்களுக்கு வலமாக இருந்து சுற்றுவதற்கு அல்ல, கோயிலில் அமைந்துள்ள விக்ரகத்தின் வலக்கைப் பக்கமாகச் சுற்றுவதற்குத்தான் பிரதட்சிணம் என்று பெயர். சுவாமியை வலம் வந்து கும்பிட்ட பிறகு, நாம் நமது வலக்கைப் பக்கமாகத் திரும்பவேண்டும். இது ஏன் என்றால், நமது இடப்பக்கத்தில் இதயம் இருக்கிறது அல்லவா? இதை இறைவன் உறையும் என்கிறார்கள். ஆகவே, உள்ளிருக்கும் இறைவனுக்கு வலப்பக்கமாக சுற்றுவதற்காக கும்பிட்ட பிறகு நமது வலப்பக்கமாகத் திரும்பிச் செல்ல வேண்டும் என்கிறார்கள்.
எதற்காக நமது வலது கை பக்கம் சுவாமியைச் சுற்றக்கூடாது என்கிறார்கள் என்றால், நாம் கிழக்கு நோக்கி நிற்கும்போது, நமது வலது கை தெற்குப் பக்கமாக நிற்கும். தெற்கை எம திசை என்பார்கள். கோயிலுக்குச் செல்பவர்கள் எம திசையை நோக்கிப் போகவேண்டாம் என்பதற்காகவே, சுவாமிக்கு வலப்பக்கமாகச் செல்கிறோம்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...