Sunday, May 1, 2016

கோயிலில் வலம் வருவது எப்படி?

கோயிலில் வலம் வருவதைப் பிரதட்சணம் என்கிறார்கள். கோயிலை நமது வலக்கைப் பக்கமாக இருந்து சுற்றாமல் இடக்கைப் பக்கத்திலிருந்து சுற்றுகிறார்கள். இதுதானே அப்பிரதட்சணம்? ஆனால் இதை பிரதட்சணம் என்கிறார்களே, ஏன் இந்த முரண்பாடு?
உங்களுக்கு வலமாக இருந்து சுற்றுவதற்கு அல்ல, கோயிலில் அமைந்துள்ள விக்ரகத்தின் வலக்கைப் பக்கமாகச் சுற்றுவதற்குத்தான் பிரதட்சிணம் என்று பெயர். சுவாமியை வலம் வந்து கும்பிட்ட பிறகு, நாம் நமது வலக்கைப் பக்கமாகத் திரும்பவேண்டும். இது ஏன் என்றால், நமது இடப்பக்கத்தில் இதயம் இருக்கிறது அல்லவா? இதை இறைவன் உறையும் என்கிறார்கள். ஆகவே, உள்ளிருக்கும் இறைவனுக்கு வலப்பக்கமாக சுற்றுவதற்காக கும்பிட்ட பிறகு நமது வலப்பக்கமாகத் திரும்பிச் செல்ல வேண்டும் என்கிறார்கள்.
எதற்காக நமது வலது கை பக்கம் சுவாமியைச் சுற்றக்கூடாது என்கிறார்கள் என்றால், நாம் கிழக்கு நோக்கி நிற்கும்போது, நமது வலது கை தெற்குப் பக்கமாக நிற்கும். தெற்கை எம திசை என்பார்கள். கோயிலுக்குச் செல்பவர்கள் எம திசையை நோக்கிப் போகவேண்டாம் என்பதற்காகவே, சுவாமிக்கு வலப்பக்கமாகச் செல்கிறோம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...