சாயி
வரதராஜன் சீரடி செல்லும்போது, அவருடன் சென்டிரல் நோக்கிச் சென்றேன். புறநகர் ரயிலில் பலர்
இருந்தனர். அவர்கள் மத்தியில் சாயி
வரதராஜன் ஒருவர். அவரை யாரும்
கண்டுகொள்ளவேயில்லை.
எனக்கு
ஆச்சரியம். அவரிடம் கேட்டேன்: ”உங்களைப் பார்க்க ஒரு கூட்டம் காத்துக்கிடக்கிறது. உங்கள்
தரிசனம் கிடைத்ததும் பரவசத்தால் பலர் அழுகிறார்கள். அப்படியிருக்க,
வீட்டிலும், ஊரிலும், ஏன்? இங்கே இத்தனை
பேர் இருக்கிறார்கள், யாரும் உங்களை கண்டு கொள்ளவே இல்லையே!இது
ஏன்?” எனக் கேட்டேன்.
கிராமப்புறத்தில்,
செங்கல்லை நட்டு வைத்து, அதை ஒரு
குல தெய்வமாகக் கும்பிடுவார்கள். அதைப் பிடுங்கிச் சென்று
எங்காவது ஓரிடத்தில்
வைத்தால், யாரும் கும்பிட மாட்டார்கள்.
சிலர் அந்தக் கல்மீது உட்காருவார்கள்.
சிலர்
அதை தலையணையாகப்பயன்படுத்துவார்கள். சிலர் நாயை அடிக்கவோ வேறு எந்த செயலுக்கோ அதைப்
பயன்படுத்துவார்கள். தேவையில்லாத வர்கள் அந்தக் கல்லை கண்டு
கொள்ளாமல் செல்வார்கள்.
நடப்பட்டபோது,
கும்பிடும் தெய்வமாக இருந்த நம்மை இவர்கள் கண்டுகொள்ளாமல்
போகிறார்கள் என கல் கவலைப்படுவதில்லை. ஒரு
அதிகாரி வேறு ஊருக்குச் சென்றால், அவர் அதிகாரி என்றாலும்
அதற்காக யாரும் கவலைப்படமாட்டார்கள், அவருக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். இப்படித்தான்,
எங்கு என் தேவையிருக்கிறதோ, யாரால்
அறிந்து கொள்ளப் படுகிறேனோ அவர்களால் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறேன். பிறரைப் பொறுத்தவரை நான்
சராசரி மனிதன்!” என்றார் அவர்.
சாயி
பக்தர்கள் வேறு தெய்வத்தை வணங்கக்
கூடாது என்ற பேச்சு பரவலாக பக்தர்களிடையே இருக்கிறது.
இதைப் பற்றி அவரிடம் கேட்டோம்.
இவ்வாறு
சொல்வது பெந்தேகொஸ்தே கிறித்தவர்களின் பிரச்சாரம் போலன்றி வேறு அல்ல என்ற
அவர், ”மேகா என்ற பக்தர்,
சீரடியில் பாபாவை பிரதான தெய்வமாக
பூஜீத்து வந்தவர். அவர் உயிருடன் இருந்தவரை
அவர்தான் மதிய ஆரத்தியைச் செய்துவந்தார். முதலில் கிராம தேவதைகளுக்கு
பூiஜகளை செய்துவிட்டு, கடைசியாகத்தான் மசூதிக்கு வருவார். ஒருநாள், கண்டோபா கோயிலில் பூஜை
செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எவ்வளவு
முயன்றும் கோயிலைத் திறக்க முடியாததால், திரும்ப
வந்து விட்டார். பிறகு பாபாவுக்கு பூஜை
செய்ய முயன்ற போது, பாபா சொன்னார்: ”ஆக, இன்று
உமது நித்திய பூஜையில் ஒரு
துண்டு விழுந்திருக்கிறது.
மற்ற தெய்வங்களுக்குப்பூஜை செய்துவிட்டீர்.
ஆனால் ஒரு தெய்வம் இன்னும்
பூஜை செய்யப் படாமலே இருக்கிறது,போய் அந்த பூஜையை
முடித்துவிட்டுத்திரும்பிவா!” என்றார்.
”பாபா,
கதவு மூடியிருந்தது. முயற்சித்துப் பார்த்தும்
முடியவில்லை. ஆகவே, திரும்பி வர வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்பட்டது” என்றார்
மேகா.
”இப்போது
போம், கதவை திறக்கமுடியும்” எனக்
கூறினார் பாபா. ஒரு கணமும் தாமதிக்காமல்
சென்ற மேகா கதவைத் திறக்க,
அது திறந்து கொண்டது. பூஜையை
முடித்துவிட்டு வந்து, பாபாவுக்கு பூஜை செய்தார்.
சிறப்பாக மேம்படுத்துவதற்காக அவதரித்து வந்தவர் என்பதை இதன் மூலம்
அறிந்துகொள்ளலாம்.!” இப்படிக் கூறினார் சாயி வரதராஜன்.
சாயி
வீரமணி
No comments:
Post a Comment