Wednesday, June 1, 2016

நகைச்சுவை நடிகர் நாகேஷ்

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்... வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.  அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடு மாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
நான் வாழை அல்ல...! சவுக்கு மரம்....


சபாபதி அன்புகணேசன்

தாஸ்கணுவின் பிரயாகைக் குளியல்


கங்கையும், யமுனையும் சந்திக்கும் இடங்களிலுள்ள பிரயாகை என்னும் புண்ணிய நதியில் ஸ்நானம் செய்வது மிகவும் பாக்கியமானது என்று இந்துக்கள் நினைக்கிறார்கள். ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் குறிப்பிட்ட காலங்களில் புண்ணிய ஸ்நானத்திற்காக அவ்விடம் செல்கிறார்கள். ஒருமுறை தாஸ்கணு, தான் ஸ்நானம் செய்வதற்காக பிரயாகை போகவேண்டுமென்று நினைத்தார். பாபாவிடம் அங்ஙனமே செய்வதற்கு அனுமதி வேண்டி வந்தார். பாபா அவருக்குச் சொல்லிய பதில், "அவ்வளவு தூரம் போகவேண்டிய அவசியமில்லை. நமது பிரயாகை இங்கேயே இருக்கிறது. என்னை நம்பு" என்றார். அப்போது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்! தாஸ்கணு தனது தலையை பாபாவின் அடிகளில் வைத்ததும் கங்கை, யமுனை ஆறுகளின் புனிதநீர் பாபாவின் இரண்டு காற்கட்டை விரல்களிலிருந்து சீராக வெளிப்பட்டது.

இவ்வாச்சரியத்தைக் கண்ணுற்ற தாஸ்கணு அன்பு ஆழ்ந்த மரியாதை உணர்ச்சியால் பெரிதும் கவரப்பட்டார். அவர் கண்கள் நீரால் நிறைந்தன. அந்தரங்கத்தில் அவர் உணர்ச்சியால் உந்தப்பட்டார். அவருடைய பேச்சு, பாபாவின் புகழையும் அவரின் லீலைகளையும் குறிப்பிடும் கவிதையாகப் பொங்கி வெளிப்பட்டது.

பாபாவின் மேல் பக்தி செய்யுங்கள்

என் ஆன்மக் குழந்தைகளே!
சமீபத்தில் நாகர்கோயில் சென்றிருந்தபோது பல சாயி பக்தர்களையும் அவர்கள் சாயிக்காக கட்டிய கோயில்களையும் தரிசிக்க நேர்ந்தது. இந்த பிரம்மாண்டங்கள் அனைத்தும் பாபா மீது அவர்களுக்கு உள்ள பக்தியின் வெளிப்பாடுகள் என்பதை உணரமுடிந்தது.
நேபாள்ராஜ் கட்டியுள்ள ஆலயத்தைப் பற்றி கூறும் போது அவர் யாரிடமும் நன்கொடை பெறாமலேயே தனது சொந்தப் பணத்தில் இக்கோயிலை அமைத்தார் என்று கூறினார்கள். அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான கோயிலை உருவாக்கத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார் என்றால், பாபா மீது அவ்வளவு ஆழமான பக்தி கொண்டிருக்கிறார் என்பதை உணரமுடிந்தது.
அஜீதாவும் அவருடைய கணவரும் பல போராட்டங்களுக்கு மத்தியில் பாபா ஆலயத்தைக் கட்டியிருப்பதைப் பார்த்தேன். மரணப் போராட்டத்திற்கு மத்தியில் பாபாவுக்கு எழுப்பிய அந்த ஆலயத்தில் அவர்களின் ஆத்மார்த்தம் தெரிந்தது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் அருள் திரு தோத்தாத்திரி அவர்கள் நெல்லையில் பாபாவிற்க்கு கோயில் எழுப்ப இருக்கிறார். இதற்காக அவர்  அங்கு முகாமிட்டு வருகிறார்.
சுயநலமற்ற இத்தகைய ஆத்மாக்கள் உருவாக்கும் ஆலயத்தில் இறைவன் திருப்தியாக அமர்ந்து அருள் பாலிப்பான். இந்த இடங்களுக்குச் சென்றால் நன்மையே நடக்கும்.
சாயி பக்தி என்பது அமிர்தக் கடல். பருகி அனுபவிக்கும் பக்தரை சாகாமல் காக்கக் கூடியது. பாமரர்களுக்காக இறைவனால் வழங்கப்பட்டுள்ள இதன் பெருமையை உணர்ந்து பக்தி செய்ய வேண்டும்.
ஆரம்ப நிலை பக்தர்கள் லவுகீகத்தைக் கேட்டு பாபாவிடம் வரட்டும்; அதை எல்லாம் தாண்டிய நீங்கள் வெறுமனே லவுகீக விடுதலைக்காக பக்தி செய்து உயர்ந்த ஆன்மிகப்பலனை விரையமாக்கிவிடவேண்டா.

சாய்பாபா வியாழக்கிழமை விரத வழிமுறைகள்

சாய்பாபாவிடம் வேண்டுதல் வைத்து 9 வியாழக்கிழமைகள் விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும். அந்த விரதம் இருக்கும் வழிமுறை வருமாறு:-
1. இந்த விரத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.
2. இந்த விரத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் ஏற்கலாம்.
3. இந்த விரதம் அற்புதப் பலன்களைத் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.
4. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையிலும், சாய் நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
5. காலை அல்லது மாலையில் சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாய்பாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாய் விரத கதையைப் படிக்கவும். சாய்பாபாவை மனதில் நினைத்து தியானம் செய்யவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும். 
6. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.
7. ஒன்பது வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாய்பாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யலாம்.
8. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம்.
9. விரதமிருக்கும் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலோ விரதம் இருக்க முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அடுத்த வியாழக்கிழமை விரதம் இருந்து, ஒன்பது வியாழக்கிழமைகளையும் நிறைவு செய்யவும்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...