என் ஆன்மக் குழந்தைகளே!
சமீபத்தில் நாகர்கோயில் சென்றிருந்தபோது பல சாயி பக்தர்களையும் அவர்கள்
சாயிக்காக கட்டிய கோயில்களையும் தரிசிக்க நேர்ந்தது.
இந்த பிரம்மாண்டங்கள் அனைத்தும் பாபா மீது
அவர்களுக்கு உள்ள பக்தியின் வெளிப்பாடுகள் என்பதை
உணரமுடிந்தது.
நேபாள்ராஜ் கட்டியுள்ள ஆலயத்தைப் பற்றி கூறும் போது அவர் யாரிடமும் நன்கொடை பெறாமலேயே தனது சொந்தப் பணத்தில் இக்கோயிலை அமைத்தார் என்று கூறினார்கள். அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான கோயிலை உருவாக்கத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார் என்றால், பாபா மீது அவ்வளவு ஆழமான பக்தி கொண்டிருக்கிறார் என்பதை உணரமுடிந்தது.
அஜீதாவும் அவருடைய கணவரும் பல போராட்டங்களுக்கு மத்தியில் பாபா ஆலயத்தைக் கட்டியிருப்பதைப் பார்த்தேன். மரணப் போராட்டத்திற்கு மத்தியில் பாபாவுக்கு எழுப்பிய அந்த ஆலயத்தில் அவர்களின் ஆத்மார்த்தம் தெரிந்தது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் அருள் திரு தோத்தாத்திரி அவர்கள் நெல்லையில் பாபாவிற்க்கு கோயில் எழுப்ப இருக்கிறார்.
இதற்காக அவர் அங்கு முகாமிட்டு வருகிறார்.
சுயநலமற்ற இத்தகைய ஆத்மாக்கள்
உருவாக்கும் ஆலயத்தில் இறைவன் திருப்தியாக அமர்ந்து அருள்
பாலிப்பான். இந்த இடங்களுக்குச் சென்றால் நன்மையே நடக்கும்.
சாயி பக்தி என்பது அமிர்தக் கடல். பருகி அனுபவிக்கும் பக்தரை சாகாமல் காக்கக் கூடியது. பாமரர்களுக்காக இறைவனால்
வழங்கப்பட்டுள்ள இதன் பெருமையை உணர்ந்து பக்தி செய்ய வேண்டும்.
ஆரம்ப நிலை பக்தர்கள் லவுகீகத்தைக் கேட்டு பாபாவிடம் வரட்டும்; அதை எல்லாம் தாண்டிய நீங்கள் வெறுமனே லவுகீக விடுதலைக்காக
பக்தி செய்து உயர்ந்த ஆன்மிகப்பலனை விரையமாக்கிவிடவேண்டா.
No comments:
Post a Comment