Wednesday, June 1, 2016

தாஸ்கணுவின் பிரயாகைக் குளியல்


கங்கையும், யமுனையும் சந்திக்கும் இடங்களிலுள்ள பிரயாகை என்னும் புண்ணிய நதியில் ஸ்நானம் செய்வது மிகவும் பாக்கியமானது என்று இந்துக்கள் நினைக்கிறார்கள். ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் குறிப்பிட்ட காலங்களில் புண்ணிய ஸ்நானத்திற்காக அவ்விடம் செல்கிறார்கள். ஒருமுறை தாஸ்கணு, தான் ஸ்நானம் செய்வதற்காக பிரயாகை போகவேண்டுமென்று நினைத்தார். பாபாவிடம் அங்ஙனமே செய்வதற்கு அனுமதி வேண்டி வந்தார். பாபா அவருக்குச் சொல்லிய பதில், "அவ்வளவு தூரம் போகவேண்டிய அவசியமில்லை. நமது பிரயாகை இங்கேயே இருக்கிறது. என்னை நம்பு" என்றார். அப்போது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்! தாஸ்கணு தனது தலையை பாபாவின் அடிகளில் வைத்ததும் கங்கை, யமுனை ஆறுகளின் புனிதநீர் பாபாவின் இரண்டு காற்கட்டை விரல்களிலிருந்து சீராக வெளிப்பட்டது.

இவ்வாச்சரியத்தைக் கண்ணுற்ற தாஸ்கணு அன்பு ஆழ்ந்த மரியாதை உணர்ச்சியால் பெரிதும் கவரப்பட்டார். அவர் கண்கள் நீரால் நிறைந்தன. அந்தரங்கத்தில் அவர் உணர்ச்சியால் உந்தப்பட்டார். அவருடைய பேச்சு, பாபாவின் புகழையும் அவரின் லீலைகளையும் குறிப்பிடும் கவிதையாகப் பொங்கி வெளிப்பட்டது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...