Sunday, January 8, 2017

அன்புக் குழந்தையே!

அன்புக் குழந்தையே!
புதிதாக வீட்டுக்கு வரும்போது வெள்ளையடித்து அதிலுள்ள குப்பைகளை பெருக்கி கழுவி கோலம் போட்டு சுத்தமாக்கிய பிறகுத்தானே உள்ளே வந்து வாழ்க்கையை நடத்துகிறாய். அப்படித்தான் குழந்தையே! உனது பிரச்சனைகளுக்கு தீர்வு வரும்போதும், தீர்வு காண நான்  செயல்படும் போதும் உன்னை சுத்தமாக்குகிறேன். இப்போது நீ கர்ம வினை என்ற குப்பைகளாலும், மாயை என்கிற அழுக்குகளாலும் முற்றிலும் மாசுபட்டிருக்கிறாய். உலக பந்தம் என்ற கட்டில் சிக்கிக் கொண்டு கஷ்டம், நஷ்டம், பிரச்சினை என்று பேதலித்து வருகிறாய். அவற்றையெல்லாம் நான் மெதுவாகச்செய்யும்போது உனக்கு சோதனை அதிகமாவது போலத்தெரிகிறது. சோதனைக்காலம் வரும்போது நீ பயப்படாதே! கலங்காதே! நான் உன் தந்தை! உன் கூடவே இருக்கிறேன். தந்தை தன் பிள்ளைகளைக்கண்டித்து நடத்துவதைப்போல இறைவனான நானும் நான் நேசிக்கிறவர்களைக்கடிந்து நடத்துகிறேன். இதைப் புரிந்து கொண்டு நீ நடக்கும்போது நான் உன்னை பொறுப்பு எடுத்துக்கொள்வேன். எதற்கும் நீ பயப்படாதிருப்பாய். நான் உன்னை விட்டு விலகவும் மாட்டேன் கைவிடவும் மாட்டேன். உன் பாதைகளை நிச்சயம் செம்மைப்படுத்துவேன்.................. சாயியின் குரல்

Saturday, January 7, 2017

நீ என்ன செய்தாலும் நான் உன் மீது கோபம் கொள்ளவே மாட்டேன்.

நீ என் செல்லக்குழந்தை. உனக்கு இன்னும் பக்குவத்தைப் போதிக்கவே நான் தோல்வியை அனுமதித்தேன், உனது சிந்தனை இன்றைய காலக்கட்டத்தை பார்க்கிறது, எனது நோக்கமோ உனது எதிர்காலம் தொடர்பானது. நீ அந்தக்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக உன்னால் சகித்துக்கொள்ளக் கூடிய வகையில் இத்தகைய சின்னச் சின்ன பிரச்சனைகளை தந்து உன்னை பக்குவப் படுத்துகிறேன்.

Friday, January 6, 2017

நான் சத்திய தேவன்.

என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான்.

நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.

Thursday, January 5, 2017

சமாதி மந்திரின் சக்தி

மும்பையினை சேர்ந்த வியாபரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம்.  அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது.  எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை.  மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார். கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் அவதிப்பட்டார்.
சில வினைகள், சில பிரச்சனைகளை மனிதன் அனுபவித்துத்தான் தீர வேண்டும். பயந்து ஓடி விட முடியாது. எந்த பிரச்சனை வரும் போதும் எதிர்கொண்டால்தான் தீர்வுக்கு வழி தெரியும்.  ஓடினால் பிரச்சனை விரட்டும். எதிர்த்தால் நின்று பார்க்கும்.  நாம் மீண்டும் மீண்டும் எதிர்த்தால் பின்னோக்கி ஓடப்பார்க்கும்.
தன் கால் ஊனத்திற்க்கு என்னதான் விடிவு என்று சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார்.  அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்த்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.
1911-ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார்.  பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார்.  கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது.  முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார்.
பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார்.
பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றிவந்தார். இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை மந்திர சக்தி வாய்ந்தது.  சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஆகவே சாயியை எப்போதும் நினைவில் கொண்டு எல்லா நலமும் வளமும் பெறுவோம்.  மற்றவர்களையும் பெறச் செய்வோம்.
- கு.இராமச்சந்திரன்


Wednesday, January 4, 2017

நம் சாய் வாழ்கிறார்

நமது உயிர் மூச்சாக இருக்கும் நமது சாயி அப்பாவிற்கு பிடித்த விஷயங்களில் முதன்மையானதும் முக்கியமானதும் விளக்கேற்றுதல் ஆகும். தண்ணீரால் விளக்கேற்றி வித்தைகள் நிகழ்த்தியவர் நமது சாயி அப்பா. தீபங்களில் அவர் வாழ்கிறார். தீபங்கள் நமது அக இருளை நீக்கி நமக்குள் வெளிச்சத்தைக் கொணர்பவை. அதனால் தவறாது இல்லங்களில் தீபமேற்றுவோம். சாயியின் அருளைப் பெறுவோம்.
நாளை வியாழன்.சாயி அப்பாவிற்கான நாள். ஒவ்வொரு நாளுமே அவரது நாள் தான். இருந்தாலும் அவருக்குறிய சிறப்பு தினம். பக்தர்களாகிய உங்களை கை கூப்பி ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன்.  அனைத்து சகோதர சகோதரிகளும்  சாயியின் அருகில் விளக்குகள் ஏற்றுங்கள்.ஓம் சாய்ராம்.

காரண காரியங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.

ஒருவரை நான் உங்கள் முன் வைத்திருப்பதும், அவர்களை செயல்பட வைப்பதும் ஏதோ ஒரு காரணத்திற்காக என்பதை அறிந்துகொள்ளுங்கள். காரண காரியங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.

"என் மீது நம்பிக்கை வை. அனைத்தையும் அறிந்தவன் நான், அனைத்தையும் செய்பவன் நான், செயலும் நானே! விளைவுகளும் நானே!" என் அனுமதி இல்லாமல் ஒரு இலை கூட அசையாது என்கிற போது, எதற்காக நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படவேண்டும்? நீங்களே, உங்களை விரோதியாகிக் கொள்வதற்காகவா உங்களை படைத்து, காத்து, உங்களைத் தேடி நான் வந்தேன்?

நீங்கள் தான் செயல்படுகிறீர்கள் நான் செயல்படாதவன் என்று நினைக்கவே நினைக்காதீர்கள். மனதார யாரையும் சபிக்காதீர்கள்! யாரைப் பற்றியும் குறையாய் சொல்லாதீர்கள்! அப்போது நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள்.

அன்றைக்கும் அழுவீர்கள்... பாபா உன்னை காண முடியவில்லையே என்றல்ல... பாபா, நான் கேட்டதையெல்லாம் உடனுக்குடனேயே தந்துவிடுகிறாயே... என்ற மகிழ்ச்சியில்.. -
—-ஸ்ரீ சாயி-யின் குரல்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...