மும்பையினை சேர்ந்த வியாபரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம். அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது. எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை. மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார். கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் அவதிப்பட்டார்.
சில வினைகள், சில பிரச்சனைகளை மனிதன் அனுபவித்துத்தான் தீர வேண்டும். பயந்து ஓடி விட முடியாது. எந்த பிரச்சனை வரும் போதும் எதிர்கொண்டால்தான் தீர்வுக்கு வழி தெரியும். ஓடினால் பிரச்சனை விரட்டும். எதிர்த்தால் நின்று பார்க்கும். நாம் மீண்டும் மீண்டும் எதிர்த்தால் பின்னோக்கி ஓடப்பார்க்கும்.
தன் கால் ஊனத்திற்க்கு என்னதான் விடிவு என்று சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்த்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.
1911-ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார். பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார். கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது. முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார்.
பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார்.
பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றிவந்தார். இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை மந்திர சக்தி வாய்ந்தது. சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஆகவே சாயியை எப்போதும் நினைவில் கொண்டு எல்லா நலமும் வளமும் பெறுவோம். மற்றவர்களையும் பெறச் செய்வோம்.
- கு.இராமச்சந்திரன்

No comments:
Post a Comment