Wednesday, June 29, 2016

என்ன வித்தியாசம்?

சாமியார்களுக்கும், அடியார்களுக்கும் என்ன வித்தியாசம்?
( கே.வி. சுதாகரன், சென்னை 18)
தன் குடும்பம் நன்றாக இருப்பதற்காக ஒரு ஆட்டையோ, கோழியையோ பலியிடுவார்கள். ஓர் உயிர்த் தியாகத்தை ஏற்றுக்கொண்டு குல தெய்வம் குடும்பத்தை வாழவைக்கும் என்பது நம்பிக்கை.
குடும்பத்தில் யாராவது ஒருவர் இப்படி உயிரை குல தெய்வத்திற்குத் தரவேண்டும். ஆனால் எல்லோருக்கும் வாழ ஆசை இருப்பதால் நமக்குப் பதிலாக ஆடோ, கோழியோ சாகட்டும் என அதை பலி கொடுத்துவிடுகிறார்கள்.
இந்த நிலையில் உள்ளவர்கள்தாம் சாமியார்களும், அடியார்களும். பிறர் கர்மாக்களை நீக்குவதற்காக இவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.
சாமியார்கள் உபாசனா மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள். இவர்கள் சாமி கும்பிடுவதற்காக நேர்ந்து விடப்பட்ட ஆடு போன்றவர்கள். பூஜை அன்று மரணம் நிச்சயம் என்பதுபோல, மந்திர சக்தியால் விளைந்த உபாசனா சக்தி குறைந்தவுடன் அவர்கள் நிச்சயமாக பலியாகிவிடுவார்கள்.
அடியார்கள் என்பவர்கள் ஞான மார்க்கத்தைப்பின்பற்றுகிறவர்கள். அதாவது இவர்கள் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட மாடு போன்றவர்கள்.
இறைவனை எப்போதும் சரணடைந்து கிடப்பதால், மக்கள் இவர்கள் மீது சுமத்தினாலும் இறைவன் அதை தான் ஏற்றுக்கொண்டு, கடவுள் சுதந்திரமாகத் திரியவிடுவான். எந்த ஆபத்தும் இவர்களை அண்டாது. இதுதான் வித்தியாசம்.
பிறரது கர்மாவை வாங்கிக் கொள்ளும் அடியார். இவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் இறைவன் பாதுகாப்பு அளிப்பார்.

Tuesday, June 28, 2016

மழையில் நனைந்து வந்த மழலை ராஜா ராம்!

கீரப்பாக்கம் மலைக்கோயில் பற்றி ஸ்ரீ சாயி தரிசனம் இதழில் படித்தவுடன் பாண்டிச்சேரியில் இருந்து தனது மோட்டார் பைக்கிலேயே பாபாவை தரிசிக்க வந்திருக்கிறார் ராஜாராம் என்ற இளைஞர்.


http://keerapakkamsrisaitemple.blogspot.in/2016/06/blog-post_70.html

பரப்பிரம்மன் ஆவது எப்போது?



ஈஸ்வரனுக்கும் பிரம்மனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதன் எப்போது பரப்பிரம்மன் ஆகிறான்?
( கே.வி. சுதாகரன், சென்னைடூ 18)
சிலர்  ஈஸ்வரன் என்றால் நெற்றிக் கண் வைத்த கடவுள் என்றும், பிரம்மா என்றால், நான்கு தலை உள்ள கடவுள் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள்.
ஈஸ்வரன் அனைத்துமானவன். அனைத்திற்கும் மேலானவன். அண்ட சராசரங்களையும் உருவாக்கி, ஆள்பவன். எல்லா சக்திகளுக்கும் மேலானவன்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது.
பிரம்மன் என்பது, ஈஸ்வரன் போன்ற நிலையை அடைவதாகும். அதாவது மனதை சுத்தப்படுத்தி, தத்துவ நு}ல்கள் கூறுவன வற்றை ஆராய்ந்து பார்த்து, இறைவனை அடையும் வழியை தியானித்து,அனைத்திலும் பற்றின்றி, தன்னைப்பற்றியும், தனது தோற்ற  மூலத்தைப் பற்றியும் சிந்தித்து தன்னைத் தான் அறிந்து கொள்ளும் நிலைதான் பிரம்ம நிலை.
இறைவன் சத்யமாக, ஞானமாக, முடிவற்ற வனாக இருப்பதை உணர்ந்து கொள்ளுகிறான். தன்னையும் அவ்வாறே உணர்கிறான். அனைத்தும் தானே என்று உணர்வதையும், தன்னிலிருந்தே அனைத்தும் உருவாகின்றன என்பதை உணர்வதும் பிரம்ம நிலை. அனைத்தையும் கடந்து நிற்கிற இந்த நிலை தோன்றும்போது கடவுள் ஆகிறான்.
கலகங்களின் நடுவில் சமாதானத்தையும், வெறுப்பு, பொறாமை போன்றவற்றின் நடுவே அன்பையும், அறியாமையின் நடுவே அறிவையும் யார் ஒருவன் ஏற்படுத்துகிறானோ அவன் அதைப்படைத்தவன் ஆகிறான். பிறரால் முடியாத இந்த நிலைக்கு உயர்ந் தவனே பரப்பிரம்மம் ஆகிறான்.

ஆஸ்திகனும் நாஸ்திகனும்

ஆஸ்திகனும் நாஸ்திகனும் இரு நண்பர்கள். ஒருவர் ஆஸ்திகர், மற்றவர் நாஸ்திகர். ஒரு நாள் நாஸ்திகர் சொன்னார்: ”நண்பா நீர் தியாகி. பக்தி, தர்மம், தெய்வம் இவற்றுக்காக உலக வாழ்வின் வசதிகள் சகலத்தையும் மறந்துவிட்டீரே, உமது திடமான  கொள்கை ஈடுபாட்டைப் பாராட்டுகிறேன்”.
ஆஸ்திகர் பதில் சொன்னார்: ” நண்பரே நீர் தானே என்னைவிடப் பெரிய தியாகி. உமது கொள்கைக்காக நீர் பலரும் போற்றிவரும் தெய்வத்தையே தியாகம் செய்து விட்டீரே, இது மேலான காரியம்”.
வேதாந்த லஹரி

மந்திரவாதிகளை நாடிப் போக வேண்டாம்!

அகமத் நகரிலிருந்து பத்து மைல் தொலைவில் இருந்த மீரஜ் காம் என்ற இடத்தில் வசித்து வந்த குசபாவ் இளவயதிலேயே மந்திர வித்தையை கற்றுத் தேர்ந்தவர்.
இவரது குரு இமய மலைக்குப் போகிற போது, எனது மூத்த சகோதரர் சீரடியில் இருக்கிறார், அவரை சந்தித்து அவர் சொல்படி நடந்துகொள் என புத்தி கூறினார்.
குசபாவ் சீரடிக்கு வந்து, 1908ம் ஆண்டு வரை தன்னை நெருங்க பாபா அனுமதிக்க வில்லை. பாபாவை நெருங்க முயன்றபோதெல்லாம்,  முதலில் உன் மாய வித்தைகளை நிறுத்து, அதன் பின் இங்கே வா!”  என்று கூறி விடுவார் பாபா.
பல தீய ஆவிகளை பாபா விரட்டினார். ஒரு முறை பர்வானி என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவன் மந்திர வித்தைக்கு இலக்காகியிருந்தான். அவனுக்கு உணவு முடிகளைப் போல தெரிந்தது, சாணி போல நாற்றம் அடித்தது. அடிக்கடி அவனது உடைகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. பூஜைகள் செய்து பார்த்தான், மந்திர வாதிகளை நாடினான். எதுவுமே பலனளிக்கவில்லை.
பாபாவிடம் ஓடிவந்தான். பாபா ஆசீர்வதித்தார். உடனே மந்திரக்கட்டு விலகியது. பாபாவிடம் மந்திரவாதிகள் செல்லமுடியாது. அவர்களை தன் முன்னிலையில் அனுமதிக்கவே மாட்டார். மந்திரவாதிகளை நாடுவோரையும் அவர் அனுமதிக்க மாட்டார். தீவிரமாக சாயியை உபாசித்து, அவரது நாமத்தை உச்சரிக்கும் செயலை மட்டும் செய்யுங்கள். வேறு எந்த விக்ஷயத்திலும் நாட்டம் செலுத்தாமல் பாபாவின் பாதங்களின் மேலே கண்களை வைத்திருங்கள்.
இப்படி இருந்தால் உங்களுக்கு மாயவித்தைகள், மந்திர தந்திரங்கள், அருள் வாக்குகள் போன்ற எதுவும் தேவைப்படாமல் நினைத்தது நடக்கும்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...