சாமியார்களுக்கும்,
அடியார்களுக்கும் என்ன வித்தியாசம்?
( கே.வி. சுதாகரன், சென்னை
18)
தன்
குடும்பம் நன்றாக இருப்பதற்காக ஒரு
ஆட்டையோ, கோழியையோ பலியிடுவார்கள். ஓர் உயிர்த் தியாகத்தை ஏற்றுக்கொண்டு குல தெய்வம் குடும்பத்தை வாழவைக்கும்
என்பது நம்பிக்கை.
குடும்பத்தில்
யாராவது ஒருவர் இப்படி உயிரை
குல தெய்வத்திற்குத்
தரவேண்டும். ஆனால் எல்லோருக்கும் வாழ ஆசை இருப்பதால்
நமக்குப் பதிலாக ஆடோ, கோழியோ சாகட்டும்
என அதை பலி கொடுத்துவிடுகிறார்கள்.
இந்த
நிலையில் உள்ளவர்கள்தாம் சாமியார்களும், அடியார்களும். பிறர் கர்மாக்களை நீக்குவதற்காக
இவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.
சாமியார்கள்
உபாசனா மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள். இவர்கள் சாமி கும்பிடுவதற்காக
நேர்ந்து விடப்பட்ட ஆடு போன்றவர்கள். பூஜை
அன்று மரணம் நிச்சயம் என்பதுபோல, மந்திர சக்தியால் விளைந்த உபாசனா
சக்தி குறைந்தவுடன் அவர்கள் நிச்சயமாக பலியாகிவிடுவார்கள்.
அடியார்கள்
என்பவர்கள் ஞான மார்க்கத்தைப்பின்பற்றுகிறவர்கள். அதாவது இவர்கள் கோயிலுக்கு
நேர்ந்து விடப்பட்ட
மாடு போன்றவர்கள்.
இறைவனை
எப்போதும் சரணடைந்து கிடப்பதால், மக்கள் இவர்கள் மீது
சுமத்தினாலும் இறைவன் அதை தான் ஏற்றுக்கொண்டு, கடவுள்
சுதந்திரமாகத் திரியவிடுவான்.
எந்த ஆபத்தும் இவர்களை அண்டாது. இதுதான் வித்தியாசம்.
பிறரது
கர்மாவை வாங்கிக் கொள்ளும் அடியார். இவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல்
இறைவன் பாதுகாப்பு அளிப்பார்.
No comments:
Post a Comment