'குத்து விளக்கு' தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது
என்பர். இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட
நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும்
கூறப்படுகிறது. விளக்கில்ஊற்றும் நெய் - நாதம், திரி - பிந்து, சுடர்
- அலை மகள், சுடர் – கலைமகள், தீ
– மலை
மகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர். இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி
அலங்காரம் செய்ய வேண்டும்.
பஞ்சுத் திரிதான்
விளக்கேற்ற மிகவும் உகந்தது. மெல்லிய திரிகளாகத் திரித்து வைத்துக்
கொள்ள வேண்டும். திரிக்கும்போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும்.
குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும். முதலில்
எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய
பிறகுதான் திரியிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகுதான் திரியிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.
குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினைச் செய்ய
குறிப்பிட்ட நாள்கள் உண்டு. ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாள்களில் மட்டும்தான் குத்து விளக்கினைத் தேய்த்தல்
வேண்டும்.
திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு
வரை குபேர தன தாட்சாயணியும், குககுரு தன தாட்சாயணியும் குத்து
விளக்கில் பூரணமாகக் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த நாள்களில் விளக்கினைத் தேய்த்துக் கழுவுவதால் இந்தச்
சக்திகள்
விலகிப் போகும் என நம்புகின்றனர்.
வெள்ளியன்று கழுவுவதால் அதில் குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி
விலகிப் போய் விடுவாள் என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.
இது பற்றி மேலும் விபரம் அறிய இங்கு செல்லவும்.
இது பற்றி மேலும் விபரம் அறிய இங்கு செல்லவும்.
No comments:
Post a Comment