ஒவ்வொரு மனிதனுக்கும் பல பிறவிகள் உண்டு. சில
பிறவிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
தாயின் வயிற்றிலிருந்து பிறப்பது முதல் பிறவி. இயற்கையானது உணவு வழியாக
குழந்தைக்கு சக்தியைத் தருகிறது.
கல்வி கற்க பள்ளிக்குச்செல்கிறான் அல்லவா? அது இரண்டாவது
பிறவி.
வித்யா தேவியின் கர்ப்பத்தில் இருக்கிறான். இயற்கை மற்றும் தாய் தந்தையர்
வித்யா தேவியின் கர்ப்பத்திற்குச் சக்தி அளிக்கிறார்கள். மூன்றாவது லட்சுமி தேவியின் கர்ப்பத்தில் வாசமாக
இருக்கிறான். இதற்குத் தேவையான சக்தியை வித்யா தேவி அளிக்கிறாள். அவன் பொருள்
சேர்த்து பிறர்க்கும் அளித்து, தானும் பயன்படுத்துகிறான். நான்காவதாக, அவன் உமா தேவியின் கர்ப்பத்தில் வாசம் செய்கிறான். உமா என்றால் ஞானம் என்று
பொருள். ஞானத்தை அடைய அவனுக்கு வித்யா தேவி, லட்சுமி தேவி
ஆகியோர் உதவுகிறார்கள். அதன் பிறகு அவன் ஐந்தாவது பிறவியை அடைகிறான். அதுதான்
பரமாத்ம சொரூபமாவது.
பிரம்மச்சாரி
நிறைய பேர் கல்யாணமாகாதவனை பிரம்மச்சாரி என்கிறார்கள். இந்த ஒரு காரணத்தை மட்டும்
தன்னிடம் வைத்திருப்பவன் பிரம்மச்சாரி கிடையாது. பிரம்மத்தை அறிந்தவன், தன்னுள் இருக்கும் பிரம்மத்தை எப்போதும் வணங்குபவனே பிரம்மச்சாரி. அவன்
எப்படியிருப்பான் என்றால், வெளியே காண்கிற அனைத்தையும் தன்னுள் காண்பான். தன்
சொந்த நலனைப் புறக்கணித்து சமூகத்திற்கு
உதவுகிறவனாக இருப்பான். உறுதியான மனதுடன் மக்கள் சேவைக்காக தன்னை
தயார்படுத்திக்கொள்வான். உழைப்பின் பலன் தெரிகிற வரையில் உழைப்பான் . இருப்பவன் பிரம்மச்சாரி. துன்பம் வந்தாலும் தொடர்ந்து அதை எதிர் கொண்டு
மகிழ்ச்சியுடன் சேவையை முடிப்பான்.
தர்மம், தவம் இரண்டையும் கலந்த வாழ்க்கையை வாழ்வான்.
கடவுள் பக்தர்கள், பக்தர்கள் அல்லாத வர்கள் ஆகிய இரு தரத்தாரையும் கடவுளாக
பாவித்துத்தொண்டு செய்வான். இந்த லட்சணங்கள் உள்ளவனே பிரம்மச்சாரி.
No comments:
Post a Comment