என் வயது 72. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு
முன்னால் அடிக்கடி காய்ச்சல் வந்தது. கடையில் மாத்திரை வாங்கி போட்டுக்கொள்வேன். இதன்
பக்கவிளைவாக நெற்றியில் கட்டிகள்
தோன்றின. இதற்கு முன் இடது கைக்குக் கீழ் வேனல் கட்டி ஒன்று முப்பது வருடங்களாக தொல்லை தந்து கொண்டிருந்தது.
எவ்வளவு மருந்து போட்டும் அது போகவில்லை என்பதனால்
விட்டுவிட்டேன். அந்தக்கட்டியும் இந்த முறை பெரிதாகி அதிகமாக வலியைக் கொடுத்தது.
எல்லோரும் டாக்டரிடம் போகச் சொன்னார்கள். ஏனோ எனக்கு போகத்தோன்றவில்லை.
மயிலாப்பூர் பாபா கோயிலுக்குச் சென்றேன். சில சமயம் அங்கு சந்தனம்
தருவார்கள். நான் பாபாவிடம் எனக்கு சந்தனம் தாருங்கள் என வேண்டிக்கொண்டு
சென்றேன். பின்னால் இருக்கும் கூடத்தில் அபிஷேகம் முடியவில்லை என்பதால் அந்த
நேரத்தில் சந்தனம் கொடுக்கவில்லை, இதனால் திரும்பி வந்துகொண்டிருந்தேன்.
கோயிலில் இருந்த ஒரு ஸ்டூலில் உருண்டையாக மஞ்சள் இருந்தது,
என்னால் நம்பவே முடியவில்லை. சாயி
எனக்காகத்தான் இதை வைத்திருக்கிறார் என்று நினைத்து முக்கால் பாகத்தை எடுத்து
வந்துவிட்டேன்.
விளக்கெண்ணெயும் மஞ்சளையும் கலந்து கட்டியின் மீது போட்டேன்.
கட்டி உடையவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் போட்ட பின்பு, மூன்றாவது நாள் பாபாவிடம்,
“பாபா எவ்வளவோ பேருக்கு நீங்கள்
இரவில் அறுவை சிகிச்சை செய்து
குணப்படுத்தி இருக்கிறீர்கள்; எனக்கு இதுவரை செய்யமாட்டேன் என்கிறீர்கள். இன்று வெறும் மஞ்சள்
போட்டுக் கொள்கிறேன் என்ன செய்வீர்களோ செய்யுங்கள் என கூறி மஞ்சளைத் தடவிக் கொண்டு படுத்துவிட்டேன்.
மறுநாள் விடியற்காலை எழுந்து பார்த்த போது ஜாக்கெட் முழுக்க
இரத்தமும் சீழும் முழுவதுமாக நனைந்திருந்தது. என்னவென பார்த்தால் உடலில் கட்டிகள் எல்லாம் உடைந்திருந்தன; இவற்றோடு முப்பது ஆண்டுகளாக உடையாத கட்டியும் உடைந்திருந்தது.
அதன் பிறகு மேற்பூச்சு மருந்து தடவி முற்றிலும்
குணமடைந்துவிட்டது. பாபாவின் அருளால் பூரண நலத்துடன் உள்ளேன்.
சியாமளா ராமநாதன்,
ஆர்.ஏ.புரம், சென்னை - 28
No comments:
Post a Comment