Monday, June 6, 2016

ஸ்ரீ சாய்யின் அற்புதம்

நாங்கள் 24 பேர் கொண்ட குழு ஸ்ரீ சாய் பாபா தரிசனத்திற்க்காக ஷீரடிக்கு கோவையில் இருந்து ரயில் மூலமாக பயணம் மேற் கொண்டோம், ஷீரடி செல்லும் முன்பு தானே சென்று அங்கு நடைபெறும் ஒரு விழாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ஷீரடி செல்ல திட்டமிட்டு இருந்தோம், தானே சென்று அங்கு தங்குவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, தானேவிற்கு காலையில் சென்றடைந்தோம். ஹோட்டலில் குளித்து முடித்த பின் ,தானேவில் நாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு என்பதால் தாதர் சென்று துணிகள் கொள்முதல்(Purchase) செய்வதற்க்காக அனைவரும் பயணிகள் மின்சார இரயில் மூலம் தாதர் சென்றடைந்தோம், அங்கு சென்றவுடன் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவில் பெண்கள் அனைவரும், அவர்களுக்கு துணைக்கு இரண்டு ஆண்களையும் சேர்த்து பஜாருக்கு துணிகள் கொள்முதல் செய்வதற்க்காக டாக்சியில் அனுப்பி விட்டு மற்ற ஆண்கள் குழந்தைகளுடன் அங்கு உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ மஹாலட்சுமி கோவிலுக்கும் சென்று தரிசனம் முடித்து விட்டு நாங்கள் அனைவரும் தானே சென்று நடைபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்தற்க்காக சென்று விட்டோம்.
பஜாருக்கு சென்றவர்கள் பர்சேஸ் (Purchase) முடித்து விட்டு தாதர் இரயில்வே ஸ்டேசனில் பயணிகள் ரயிலில் ஏறுவதர்க்காக 7 மணிக்கு வந்துள்ளார்கள். பரபரப்பான மாலை வேளை என்பதால் கடுமையான கூட்ட நெரிசல், நாங்கள் நினைத்தது தமிழ்நாட்டில் உள்ளது போல் இருக்கும் என்று, தெரிந்து இருந்தால் நிச்சயமாக சென்று இருக்க மாட்டோம், டாக்சி பிடித்து வந்து விடலாம் என்று பார்த்து இருக்கிறார்கள், அந்த டிராபிக்கில் மூன்று மணிநேரம் ஆனாலும் வந்து சேரமுடியாது என்ற நிலையில், வேறு வழி இல்லாது 13 பேர் கொண்ட நமது குழு அனைவரும் ஒன்றாக ஏற முயன்று உள்ளனர்........
அப்பொழுதுதான் நிகழ்ந்தது அந்த விபரீதம். அந்த இடத்தில் இருந்த அனைவரையுமே கதிகலங்க வைத்த நிகழ்ச்சி நான்கு பெண்கள் ஏற முயர்ச்சி செய்து மூன்று நபர் ஏறிவிட ஒருவர் ஏறும் முன்வண்டி(Electric Train) கண் இமைக்கும் நேரத்தில் மிக வேகமாக கிளம்பி விட அந்த நபர் கம்பியில் இருந்து கையை விட்டு விட்டார்.
அப்படியே மல்லாந்தபடியே பின்நோக்கி கீழே விழுகிறார், வண்டியில் ஏறியவர்களும், கீழே நிற்ப்பவர்களும் செய்வதரியாது பாபா என்று கத்த, விழுந்த சாய் பக்தை நடைமேடைக்கும் டிரெயினுக்கும் இடையில் விழும் தருணத்தில் தான் நடந்தது அந்த அதிசயம்!!!!!!
எவரும் என்ன செய்வதென்றே யோசிப்பதற்க்குகூட கால அவகாசம் இல்லாத ,கண் இமைக்கும் நேரத்தில்....ஆம்! .நமது கருணை கடல்!
ஆபத்த பாந்தவன்! உலகை காக்கும் கலியுக கடவுள்! சற்குரு சாய் நாதனின் சத்திய வாக்காகிய.."எனது பக்தன் உலகில் எந்த மூலையில் இருந்து கூப்பிட்டாலும், கூப்பிட்ட மறு வினாடியே அங்கே தோன்றுவேன்"
என்றும்,  "எனது பக்தனை மரண குழியில் இருந்து தூக்கி விடுவேன்"
என்றும், "எனது மொழிகளைக் காப்பதற்கு நான் எனது உயிரையே தியாகம் செய்வேன். எனது மொழிகளுக்கு மாறுபட்டு நான் இருக்கவே மாட்டேன்". என்று கூறியதை போல் சாய் சற்குருநாதன் அங்கே அனைவரது அரைகூவலை கேட்டவுடன் அந்த அதிசயத்தை நிகழ்த்தினார்!.
அந்த பெண் கீழே விழும் ஒரு சில வினாடிக்குள் எங்கு இருந்து வந்தார் என எவருக்கும் தெரியாது, ஒரு பெரியவர் நொடிப் பொழுதில் கையில் அந்த பெண்ணை அப்படியே தாங்கி கீழே உட்காரவைத்துள்ளார்.  அந்த நிகழ்வை அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வினாடியே அந்த பெரியவரை காணோம்!!!.
என்ன சொல்வது ஒரு சின்ன கீரல்கூட இல்லைஅவருக்கும் யாரோ ஒருவர் தாங்கி அவரை பிடித்தது போல் இருந்துள்ளது. அனைவரும் ஆச்சரியத்தில் சாய் பாபா, சாய் பாபா என கதறி அழுது அனைவரும் சாய் பாபா செய்த அற்புதத்தை கண்டு பேரானந்த பரவசம் அடைந்தனர்.
இதைவிட வேறு என்ன வேண்டும். சாய்யின் சத்திய ரூபத்தை காண, அவர்களை ஒரு வழியாக சாய் பத்திரமாக அழைத்து வந்து , எங்களிடம் சேர்த்தார். அங்கு நடந்த அற்புதத்தை கேட்டு நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய்விட்டோம். இன்று நினைத்தாலும் சாய்யின் சத்திய சொரூபத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் கொட்டுகிறது.
சாய்நானின் ஆசீர்வாதத்தால் சீரடி சாய் தரிசனம் மிக அற்புதமாக அமைந்தது.
இது போன்ற சாய்யின் அற்புதங்கள் எண்ணில் அடங்கா, ஒவ்வொரு சாய் பக்தருக்கும் இது போன்று நிகழ்வுகளை சாயிபாபா நடத்திக்கொண்டுதான் இருக்கிறார். தயவு செய்து சாய் அன்பர்கள் தங்களுக்கு நடந்ததை பதிவிடுங்கள் .
இப்படிக்கு சாய் பக்தன். ஓம் சாய் ராம்.
ஸ்ரீ சாய்யின் அற்புதம் தொடரும்....
ஸ்ரீ சாய்யியை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.ஓம் ஜெய் சாய்ராம்
ஒரு சாயி பக்தரின் அனுபவம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...