கோயமுத்தூர் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள தொண்டாமுத்தூரில் மருத்துவராகச்சேவையாற்றி வருபவர் டாக்டர்
முருகையன். சாயி பக்தரான இவர் தன்னுடைய சித்தர் பாபா இயற்கை மருத்துவமனை வளாகத்தில் பாபாவுக்குப்பெரிய அளவில் திருக்கோயில்
எழுப்பியிருக்கிறார்.
ஜெய்ப்பூரிலிருந்து அழகிய பாபா விக்கிரகம் தருவிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் இந்த மே மாதம் 20&ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று
நடைபெறுகிறது.
காலை ஆறு மணிக்கு மேல் ஏழு மணிக்குள்ளாக நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு இறையருளைப் பெற பக்தர்களுக்கு டாக்டர் முருகையன் அழைப்பு விடுத்துள்ளார்.
பாண்டிச்சேரி பாபா மாஸ்டர் அருணாசலம் உட்பட ஏராளமான சாயி அடியார்கள் கலந்துகொள்கிறார்கள்.
நீங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாபாவின் அருளைப் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு டாக்டர் முருகையன் அவர்களை 96889 62222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment