Sunday, August 7, 2016

ஸ்ரீ சீரடி சாயிபாபா தியான பீடம், கொளத்தூர்





கொளத்தூரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அமுதாம்பிகை உடனாய சோமநாதேஸ்வர் திருக்கோயிலில் 2007-ல் இறைப்பணியைத் தொடங்கினேன். நம்மால் இயன்ற இறை சேவையை மக்கள் சேவையாகச் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலால் சாயி சேவைக்கு வந்தேன்.
2010-ல் பாபாவின் புகழைப்பரப்பவும், அவரது லீலைகளை வெளிப்படுத்தவும், கூட்டு வழிபாடு நடத்தவும் பாபாவுக்கு தியான பீடம் அமைக்க விரும்பினேன். பல இடங்களில் வாடகை இடம் பிடித்து நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
சொந்த இடம் இல்லாத காரணத்தால் பல இடங்களுக்கு இந்த தியான பீடத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ஏழாவது இடத்தில் இந்த ஆலயத்தை அமைத்திருக்கிறேன்.
தியான பீடத்திற்கு சொந்த இடம் இல்லாததை அறிந்த திருமதி உஷா என்ற சாயி பக்தை, தனது வீட்டு மாடியில் சுமார் இரண்டாயிரம் சதுர அடியை பாபாவுக்காக ஒதுக்கிக் கொடுத்தார்.
அவருடைய கைங்கர்யத்தால் அந்த இடத்தில் ஆன்மீக சேவை எவ்விதத் தொய்வும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பிரார்த்தனைக்கு அழைக்கலாம். ஆன்மிகம் தவிர்த்து மனித நேயச் சேவைகளும் இங்கே நடந்துகொண்டிருக்கின்றன. அன்னதானம், மற்ற கைங்கர்யங்கள் அனைத்தும் சாயி பக்த கோடிகள் உதவியுடன் சிறப்பாக நடக்கிறது.
இந்த மையத்திற்கு வருகை தருகிற கோபால கிருஷ்ணன் என்ற சாயி பக்தர், இந்த பீடத்தில் நிறுவுவதற்காக அழகிய சாயி பாபா விக்ரகத்தைத் தருவித்துத் தந்தார். சாயி பக்தர்கள் தங்கள் பங்குக்கு கைங்கர்யம் அளித்தார்கள். இவர்களது ஒத்துழைப்புடன் தியான பீடத்தை உருவாக்கினோம்.
2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் நாள் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பாரதி பாபா மற்றும் பல சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தித் தந்தனர்.
ஸ்ரீ  சீரடி சாயிபாபா தியான பீடம்,  24/1, செல்வி நகர் மெயின் ரோடு, கொளத்தூர், சென்னை- 99 என்ற விலாசத்தில், வி-4 ராஜ மங்கலம் காவல் நிலையம் அருகில், நீலகிரி சூப்பர் மார்க்கெட் பக்கத்தில் அமைந்துள்ளது இந்த தியான பீடம். நிறுவனர்: சாயி பாஸ்கர். மேலதிக தகவலுக்கும் மற்றும் தொடர்புக்கும் 971031933,0 9176519330 என்ற எண்களில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...