ரெட்டியார் பட்டியில் பாபாவுக்கு புதிய கோயில்திருநெல்வேலி நகரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரெட்டியார் பட்டியில் பாபாவுக்கு புதிய கோயில் அமைந்து வருகிறது. இந்த ஆலயத்தை சென்னை சாலிகிராமம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் பார்வதி பவன் ஓட்டல் மற்றும் இனிப்பகங்களை நடத்தி வரும் தோத்தாத்ரி அவர்கள் பெரிய பொருட் செலவில் கட்டி வருகிறார்.
ஏற்கனவே சாலி கிராமத்தில் பார்வதி பவன் அருகில் பாபாவுக்கு ஆலயம் அமைத்துள்ளார். இங்கு சீரடியில் நடப்பது போன்ற வழிபாடுகள், அன்னதானம் போன்றவை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதற்காக ப்ரத்யேகமாக சீரடியில் இருந்து குருக்கள் வரவழைக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன.
ரெட்டியார் பட்டியில் அமைந்துள்ள பாபா ஆலயத்தில் சேவை சாதிக்கவும் சீரடியில் இருந்து குருக்கள் தருவிக்கப்பட்டுள்ளார்.  சாயி பக்தர்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுகிற விழாவுக்கு வருகை தந்து தங்கள் கைகளால் பாபா ஆலயக் கட்டிடப் பணியில் ஆளுக்கு ஒரு செங்கல்லை வேண்டி வைக்கவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். சாயி தரிசனம் வாசகர்கள், சாயி பக்தர்கள் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு பாபாவின் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்: 09789984551
Powered by Blogger.