Thursday, May 10, 2018

சீரடி மண்ணில்.....



சீரடி மண்ணில் ஓர் துளியாக
நான் இனி பிறப்பேனோ
பாபா காலடி பட்ட இடங்களிலெல்லாம்
வணங்கியே கிடப்பேனோ
சாயி மகராஜ் ஆலய விளக்கின்
திரியாய் இருப்பேனோ
சாய்ராம் ஒலியை எங்கும் பரப்பும்
காற்றாய் இருப்பேனோ
சாயி மேனியை வடிக்கும் உளியாய்
நான் இனி பிறப்பேனோ

சாயியைச் சேரும் பண்ணீர்த் துளியாய் மறுபிறப்பெடுப்பேனோ
சாயியைத் தீண்ட நாளும் தேயும்
சந்தனமாவேனோ
சாயியின் கழுத்தை அலங்கரித்திடவே
துளசியாய் பிறப்பேனோ
சீரடி மண்ணில் ஓர் துளியாக
நான் இனி பிறப்பேனோ
பாபா காலடி பட்ட இடங்களிலெல்லாம்
வணங்கியே கிடப்பேனோ



சாயியின் கோயில் உதியாய் மாறிட
விறகாய் எரிவேனோ
சாயியின் தீர்த்த கிணற்றில் ஊறும்
சிறுதுளியாவேனோ
சாய் புகழ் மீட்டும் வீணையின் நரம்பாய்
நான் இசைத்திருப்பேனோ
சாய் பஜன் பாடும் பக்தர்கள் கையில்
மிருதங்கமாவேனோ



சாய்வழிபாடு ஆரத்தி நேரம்
கற்பூரமாவேனோ
சாய் எனும் சொல்தான் கேட்கும் இடத்தில்
என் உயிர் சுமப்பேனோ
சீரடி மண்ணில் ஓர் துளியாக
நான் இனி பிறப்பேனோ
பாபா காலடி பட்ட இடங்களிலெல்லாம்
வணங்கியே கிடப்பேனோ !

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...