ஹரி கநோபா என்பவர் சாய் லீலைகளைப் பற்றி
கேள்விப்பட்டு,
அவற்றை நம்பாமல் சாயியை தாமே நேரில் சென்று சோதிக்க நினைத்தார். அதன் பொருட்டு அவர் சில நண்பர்களுடன் மும்பையிலிருந்து கிளம்பி சீரடி வந்தார். அவர் தலையில் அழகிய ஜரி வேலைப்பாடு செய்த பாகை அணிந்திருந்தார் மற்றும் புத்தம் புதிய பாத அணியும் அணிந்திருந்தார்.

பாபாவை சற்று தொலைவில் கண்டதும் அவரை அருகில்
சென்று வணங்க எண்ணிய அவர், புதிய பாகையையும் பாத அணியையும் கழற்றி ஓரிடத்தில்
வைத்தார். ஆனால் அவர் முழு கவனமும் அவற்றின் மீதே அவருக்கு இருந்தது.
பாபாவை
நமஸ்கரித்து விட்டு திரும்பியவர், அவரது விலை உயர்ந்த பாத அணி தொலைந்திருக்க கண்டு
திடுக்கிட்டு, மனம் ஒடிந்து மதியம் உணவு அருந்த அமர்ந்தார்.
அப்போது மராத்திய சிறுவன் ஒருவன் அவரது பாத
அணிகளை ஒரு குச்சியில் சொருகியபடி வருவதைக் கண்டார்.
வந்த சிறுவன் நேராக அவரிடம் வந்து "உங்கள்
பெயர் ஹரியா? கநோபாவின் மகனா? ” என்று கேட்க. அதற்க்கு
”ஆம்” என்று ஹரி கநோபா பதில்
அளித்ததும், அவரிடம் அந்த பாத அணியை அச்சிறுவன்
தந்தான்.
”எப்படி நீ என் பெயரினை கண்டு பிடித்தாய்?” என்று ஹரி அச்சிறுவனிடம் கேட்டார்.
அதற்கு அவன், பாபா அவர்கள் என்னிடம் இந்த காலணியை தெருவில் எடுத்துக் கொண்டு போய் " இங்கு கநோபாவின் மகன் இருக்கிறாரா? ( ஹரி கா பேட்டா ) அவர் ஜரி தலைப்பாகை அணிந்திருப்பார் ( ஜரி கா பேதா ) என்று கூவி, உனக்கு திருப்தி அளித்தால் உரியவரிடம் சேர் " என்று சொன்னதாக கூறினான்.

ஹரி கநோபா "நான் ஜரிகை தலைப்பாகை அணிந்திருந்ததை
எல்லோரையும் போல் பாபாவும் பார்த்திருப்பார். ஆனால் நான் கநோபாவின் மகன் என்று
எப்படி அறிந்தார்?
எனவே பாபா யாவும் உணர்ந்த , அறிந்த மகான் என்பதில் ஐயமில்லை என்று வியந்தார்.
இறைவனை வணங்கும்போதும்
இறை உருவாகிய குருவை வணங்கும்போதும் நம் கவனம் அவன் மீதுதான் இருத்தல் வேண்டுமே
அன்றி நம் மறுமைக்கு உதவாத பொருட்கள் மீது இருக்கக் கூடாது. அது மட்டுமன்றி அவன் மீது அளவற்ற நம்பிக்கை
வைத்தல் வேண்டும்.சந்தேகம் என்பதே கூடாது.
சத்குரு
ஸ்ரீ சாயியை நம்பி வணங்குவோம்.
No comments:
Post a Comment