Saturday, October 19, 2013

சாயி லீலா


                    நாசிக் நகரில் காகாஜி வைத்யா என்பவர் இருந்தார். அவர்
சப்த ஸ்ரிங்கி மாதா ஆலயத்தில் பூசாரியாக  இருப்பவர். ஆயினும் பெரும் மனக்குழப்பத்திலும் அமைதியற்றும் இருந்தார். அன்னையை மனமுருகி வேண்டி நின்றார். அவர் கனவில் அன்னை தோன்றி "நீ பாபாவிடம் செல். மன அமைதி கிட்டும்" என்றார்.

                   பாபா யார்,எங்கிருக்கிறார் என்று அறிவதற்குள் அவரது கனவு கலைந்து விட்டது.எனவே அன்னை த்ரயம்பகேஷ்வர் எனப்படும் சிவனை, பாபா என்று சொல்லி இருப்பார் என அவராக எண்ணி த்ரய்ம்பகேஷ்வரம் சென்று  ருத்ரம் சொல்லல், அபிஷேகம் செய்தல் என்று நாட்களை கடத்தினார். அப்படியும் அவரது  மனம் அமைதி அடையவில்லையே என்று மீண்டும் அன்னையை வேண்டினார்..  அன்னை தோன்றி "நான் த்ர்யம்பகேஸ்வரை சொல்லவில்லை. சாய் சமர்த்தரை சொன்னேன்" என்ற போது,  மீண்டும் சாய் யாரென்று புரியாமல் காகாஜி தவித்தார்.

      ஆனால் சாயியை ஒரு பக்தர் காண விரும்பினால்,சாயியே  அவரைத் தன்னிடத்தே வரச்செய்ய வழியும் அவரே செய்தும் கொடுப்பார். அவர்  நினைத்தால்தான் மரத்தின் இலை கூட அசையுமன்றோ?

                     ஷாமா என்பவர் பாபாவின் பெரும் பக்தர்.  அவர் சிறு வயதில் நோயுற்றபோது அவர் தாயார் சப்த ஸ்ரிங்கி அன்னையிடம் வேண்டுதல் வைத்தார். தன் பிள்ளையை  காப்பாற்றினால் சன்னதிக்கு அழைத்து வருவதாக வேண்டினார்.  சிறிது காலத்திற்குப் பிறகு அன்னையின் மார்பகத்தில் தொந்தரவு ஏற்பட்ட போது .வெள்ளியில் மார்பகம் செய்து போடுவதாக வேண்டினார். ஆனால் வேண்டுதல்களை நிறைவேற்றவே இல்லை. இவைகளை அவர் இறக்கும் தருவாயில் தனது மகனுக்கு சொல்லி, இவைகளை நிறைவேற்ற சொன்னார்.
                    ஆனால் ஷ்யாமா இதை முற்றிலும் மறந்து விட்ட நிலையில்,  ஒரு சோதிடர் இதை நினைவுபடுத்தியதும் ஷ்யாமா பாபாவிடம் சென்று. "நீயே என் தெய்வம். அதனால் இந்த வேண்டுதலை உனக்கே செய்கிறேன் "என்றார்.

                      பாபா மறுத்துவிட்டு அவரை சப்த ஸ்ரிங்கி அன்னைக்கு காணிக்கையை செலுத்த சொல்லிவிட்டார். இவ்வாறு ஷ்யாமா காகாஜி இருக்கும் ஊருக்கே வந்து விட்டார்.. காகாஜி அவர் யாரென்று வினவியபோது,  ஷிரிடியில் இருந்து வந்ததாக சொன்னதோடு பாபாவின் லீலைகளையும் சொன்னார்.
                    இதைக்கேட்ட காகாஜி மகிழ்வுற்று ஷ்யாமாவுடன் ஷிர்டி சென்று சாய் நாதனை தரிசித்ததும் அந்த தரிசன இன்பமே அவரை சாந்தமாக்கிற்றுசில நாட்கள் இருந்து தரிசித்த பின்னர் பாபாவின் ஆசியுடனும் , உதியுடனும் அவர் அமைதியாக ஊர் திரும்பினார்.

                    நீயே எல்லாம் என்ற ஷ்யாமாவை அன்னை சப்த்ஸ்ரின்கியை தரிசிக்க அனுப்பியும் த்ரயம்பகேஸ்வறரை  தரிசித்த காகாஜியை  தன்னிடம் வரவழைத்ததும் அந்த பகவானின் லீலையன்றி வேறேது!
           ஓம் சாயி நமோ நம!
           ஸ்ரீ சாயி நமோ நம்!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...