Tuesday, December 31, 2013

சாயி லீலை

     
    ஒருமுறை நாசிக்கி­ருந்து, புகழ்பெற்ற வக்கீலும் பாபாவுக்கு பக்தருமான பாபு ஸாஹேப் துமால் என்பவர் பாபாவை தரிசனம் செய்வதற்காகவே சிர்டீக்கு வந்தார்.

      சீக்கிரமாக தரிசனம் செய்துகொண்டு, பாபாவின் திருவடிகளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு பாபாவின் ஆசீர்வாதங்களையும் உதீயையும் பெற்றுக்கொண்டு உடனே திரும்பிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வந்தார்.

     திரும்பும் வழியில் நிபாட் என்னுமிடத்தில் இறங்கிக் கோர்ட்டில் வழக்கு ஒன்றை வாதாடவேண்டிய அவசியம் இருந்தது.   அவர் அவ்வாறு திட்டமிட்டுக்கொண்டு வந்திருந்தாலும், அவருக்கு எது உசிதம், எது உசிதமில்லை என்று பாபாவுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, அவர் வீடு திரும்ப அனுமதி கேட்டபோது பாபா மறுத்துவிட்டார்.

       அனுமதி கொடுக்கத் திட்டவட்டமாக மறுத்து, அவரை ஒரு வாரம் சிர்டீயில் தங்கும்படி செய்துவிட்டார். கோர்ட்டில் வழக்கு விசாரணை மூன்று முறைகள் தள்ளிப்போடப்பட்டுத் தாமதமேற்பட்டது.

     துமால் ஒரு வாரத்திற்கு மேலாகவே சிர்டீயில் தங்கவைக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்களில் நீதிபதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

      நீதிபதிக்கு அம்மாதிரியான, பொறுக்கமுடியாத வயிற்றுவ­லி அதுவரை வந்ததே இல்லை. அதன் காரணமாக, வேறு வழியில்லாமல் வழக்கு தள்ளிப்போடப்பட்டது. வக்கீல் துமாலைப் பொறுத்தவரை அவருடைய நேரம் மிகச் சிறந்த முறையில் உபயோகப்படுத்தப்பட்டது.

    துமாலுக்கு ஸாயீயின் ஸஹவாஸம் (கூடவசித்தல்) என்னும் பெரும் பாக்கியம் கிடைத்தது. துமா­ன் கட்சிக்காரருக்கோ கவலையிலி­ருந்து விடுதலை கிடைத்தது. ஸாயீயின்மீது வைத்த விசுவாசத்தினால் எல்லாமே பிரயாசையின்றி நடந்தது.

    பிறகு, பொருத்தமான காலத்தில் துமால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். அவருடைய வேலையும் திருப்திகரமாக முடிக்கப்பட்டது. இதுவே ஸாயீயின் லீலை; ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது.

     இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நான்கு மாதங்கள் நடந்தது. நான்கு நீதிபதிகள் ஒருவர்பின் ஒருவராக இவ்வழக்கை விசாரிக்கும்படி ஆயிற்று. முடிவில் வக்கீல் துமால் தம் கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதில் வெற்றி பெற்றார்.



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...