Tuesday, July 4, 2017

ஆனந்தமே பிரம்மம்


அன்புக் குழந்தையே!

வாழ்வில் எதையெல்லாம் நீ நிரந்தரம் என நினைத்துக்கொண்டிருந்தாயோ அவையெல்லாம் நிதர்சனம் இல்லாத பொய்கள் என்பதை புரிந்து கொள்ளவே உனக்கு சோதனைகள் தரப்பட்டன.

யாரை நம்பி உன் உடமைகளை ஜாமீன் கொடுத்தாயோ, அவர்கள் உண்மை இல்லாதவர்கள் என்பதை உணர்த்தவே பிரச்சினையில், உன்னை சிக்க வைக்க அனுமதித்தேன்.

அடுத்தவர்களால் உனக்கு ஒருபோதும் நன்மையில்லை என்பதை உணர்த்தவே அவர்களின் சுயரூபத்தை உனக்கு வெளிபடுத்தினேன்.

ஆனால் நீயோ வெகுளியாக இருந்துவிட்டாய். உனது அன்பு குணத்தை, அப்பாவி தனத்தை அவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள்.

பொருளையும் நம்பிக்கையையும் நீ இழந்துவிட்டாய், அவமானமும் பட்டாய், அந்த கெட்ட காலங்களை நினைத்துப் பார்க்கவேண்டாம். அவையெல்லாம் பஞ்சு மெத்தையில் உனக்காக வைக்கப்பட்ட பெரிய முட்களை போலக் குத்திக்கொண்டிருந்தவை. இந்த காலங்கள் மாறிவிட்டன குழந்தையே!

இனி வருவதெல்லாம் உனக்கு வசந்தகாலங்கள், இதோ நான் உனது வலது கையைப்பிடித்து தூக்கி நிறுத்தினேன். இந்த உலகில் என்னைவிட உனக்கு உண்மையான உறவுகள் யாருமில்லை என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, பொய்யான உறவுகளை உன்னிடமிருந்து விலக்கி வைத்தேன்.

என் குழந்தை ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்தேன். "ஆனந்தமே பிரம்மம்" என்பதை நீ உணர்ந்து கொள்வதற்காக செய்தேன். ஆனந்தம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது அல்லவா வருகிறது? மன மகிழ்ச்சி எப்போது வருகிறது? உன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிய பிறகுதானே வருகிறது? அதனால் உனது கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி உன்னை ஆனந்தமாக வைத்துக்கொள்ளவே இவ்வளவு நேரமும் முயன்று கொண்டிருக்கிறேன்....; என் மடியில் கவலைகளை மறந்து ஓய்வெடு குழந்தாய்....!!!!!

சாயியின் குரல்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...