''இன்று பாருங்கள்; நான் ஹிந்துவா யவனனா (முஸ்லீமா) என்று.
உங்கள் மனம் திருப்தியடையும்வரை பார்த்து
நிர்த்தாரணம் செய்துகொள்ளுங்கள். சந்தேகத்தை விட்டொழியுங்கள்’ என்று பாபா கர்ஜித்தார்.
அன்பு பாபாவின்
இன்றய அருள்வாக்கு!!!
இறுதி வரை படியுங்கள் அன்புறவுகளே..நன்மை உண்டாகும்.
முஸ்லீம் என்று
நினைத்தால் அவருக்குக் காது குத்தப்பட்டிருந்தது. ஹிந்து என்று நினைத்தால் அவருக்கு ஸுன்னத் செய்யப்பட்டிருந்தது.
அவதார புருஷரான ஸாயீ ஹிந்துவுமல்லர்; முஸ்லீமுமல்லர். ஹிந்துவென்று சொன்னால், அவர் சதா மசூதியிலேயே வாழ்ந்தார். முஸ்லீம் என்று சொன்னால், இரவு பகலாக மசூதியில் அக்கினி எரிந்துகொண் டிருக்கிறது.
தேஹாபிமானம்
இல்லாத சித்தருக்கு ஹிந்துவோ, முஸ்லீமோ, கீழ்ஜாதியோ, மேல்ஜாதியோ, எந்த வித்தியாசமும் இல்லை. ஜாதிப்பாகுபாடு என்னும் எண்ணமே அவருக்கு இல்லை.
பக்கீர்களுடன் அமர்ந்து உணவுண்ணும்போது
அவர் மாமிசம் சாப்பிடுவார்; சமயம் நேர்ந்தபோது மீனும் சாப்பிடுவார். சோற்றை நாய் தீண்ட
நேர்ந்துவிட்டாலும் சரி, வெறுப்படைந்து முகம் கோணமாட்டார்.
இந்த மசூதியில் எந்திரத்தில் மாவு அரைக்கப்பட்டது; சங்கும் மணிகளும் முழங்கின; அக்கினியில் ஹவிஸ் (படையல்) இடப்பட்டது. இச்சூழலில் அவரை முஸ்லீம் என்று எவ்வாறு
சொல்லமுடியும்? (மேற்கண்டவை இஸ்லாமிய மதத்தினருக்கு
சம்மதம் இல்லாதவை).
மசூதியில் ஸதா
பஜனை நடந்தது; அன்னதானமும் நடந்தது; ஹிந்துக்கள் அவருக்குப் பாதபூஜை செய்தனர்; அவர் எப்படி முஸ்லீம் ஆக முடியும்?
முஸ்லீமாக
இருப்பின் உயர்குல பிராமணர்கள் எப்படி அவரை வணங்கினர்? அக்கினிஹோத்திரம் செய்யும் வேதம் ஓதிய பிராமணர்கள், மடி, ஆசார நியதிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, எப்படி அவருக்கு நமஸ்காரம் செய்தனர்?
இவ்விதமாக மக்கள்
வியந்துபோனார்கள். இது எவ்வாறு நடக்கமுடியும் என்று நேரில் கண்டுகொள்ள வந்தவர்களும் மேற்சொன்னவாறே
நடந்துகொண்டார்கள். தரிசனம் செய்தவுடனே ஊமையராகிப்போனார்கள்.
ஸதாஸர்வ காலமும்
ஹரியைச் சரணடைந்தவரை ஹிந்துவென்றோ முஸ்லீமென்றோ
எவ்வாறு சொல்ல முடியும்? அவர் பிற்படுத்தப்பட்டவராக இருக்கலாம்; பிற்படுத்தப்பட்டோரிலும் பிற்படுத்தப்பட்டவராகவும் இருக்கலாம்; அல்லது ஜாதியே எதுவும் இல்லாதவராகவும் இருக்கலாம்; ஜாதி இவர் விஷயத்தில் அணுவளவுகூடப்
பிரமாணம் (மதிப்பிடும் அளவை - சான்று) ஆகாது.
.
No comments:
Post a Comment