பல வருடங்களுக்கு
முன் ஸ்வாமி சின்மயானந்தா அவர்களின் பிரசங்கத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான பகுதியை என் ஞாபகத்திலிருந்து சுருக்கமாக
பதிவு செய்கிறேன்:
யாரோ ஒருவர் திடீரென்று உங்களிடம் வந்து “ஸார், நான் ட்ரெயினைப் பிடிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருக்கு. அதுக்குள்ள உங்களால பகவத் கீதையை சொல்ல முடியுமா ? “ என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தயங்கவே வேண்டாம், “ஐந்து நிமிடம் இருக்கா ? இரண்டே நிமிடம் போதுமே “ என்று சொல்லுங்கள்.
“விடு - பிடி. அல்லது பிடி - விடு. அவ்வளவுதான் பகவத்கீதை என்று சொல்லுங்கள்’ என்று சொல்லி விட்டு சிரி்த்துக்கொண்டே கூட்டத்தைப் பார்த்தார். கூட்டம் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தது. பிறகு அவரே விளக்கினார்:
இந்த உலக பந்தங்களையெல்லாம் உதறித் தள்ளுங்கள். பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள். ஆனால் சாமான்ய மக்களுக்கு இந்த உலக பந்தங்களை எல்லாம் உதறித் தள்ளுவது சுலபத்தில் முடிகின்ற காரியமில்லை. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ?
கவலை வேண்டாம். இன்னொரு வழி இருக்கின்றது. முதலில் பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள். அந்தப் பிடி இறுக, இறுக, இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்.
இதற்கு ஒரு உபமானம் சொல்லுகிறேன். சில விறகு குச்சிகள் ஒரு கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன. அதனை அவிழ்க்க முடியவில்லை ( இது நம் உலக பந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே கட்டி, ஒரு குலுக்கு குலுக்கி இறுக்குங்கள். ( இந்த புதிய கட்டு பகவானின் பாதம் பற்றிய பிடி.) புதிய கயிற்றின் இறுக்கத்தில், பழைய கயிறு இறுக்கம் தளர்ந்து கழன்று விடும்.
உலக பந்தங்களை விட்டு, பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ஞான மார்கம். ஞானிகளுக்கானது. பரந்தாமன் பாதங்களைப் பற்றி, உலக பந்தங்களை விடுவது பக்தி மார்கம். சாமானிய மக்களுக்கானது.

எவ்வளவு எளிமையான
விளக்கம் !!!
ஹரி ஓம் குருதேவ்
ஹரி ஓம் குருதேவ்
Sethuram Krishnamurthy
அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து
No comments:
Post a Comment