நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Monday, May 23, 2016

ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார்ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் அடிக்கடி சொல்வது "நான் ஒரு பிச்சைக்காரன். நான் என்ன உனக்குக் கொடுக்க முடியும்? என்னிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று பிச்சை கேட்காதே. கடவுளை மறக்காதே, எந்தப் பெயர் வேண்டுமானாலும் சொல். ஆனால் நாமஸ்மரணம் செய். என் அப்பா ராமா உனக்கு அருள் புரிவார், அருணசலேஸ்வர் அருள் புரிவார்."

இவரின் குரு ஸ்ரீ பாப்பா ராம்தாஸ் சுவாமிகள் இவருக்கு ஓதிய மந்திரம் "ஓம் ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெய ராம்". இதை 24 மணி நேரமும் ஜபிக்கச் சொன்னார்.

யோகிக்கும் குமாரி நிவேதிதாவுக்கும் இடையில் நடந்த சுவாரஸ்ய உரையாடல்:
குருஜி : "நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
நிவேதிதா : "துக்கம், சுகம், இன்பம், துன்பம்  என்பவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் தாங்கள்"
குருஜி : "கல் கூடத்தான் இவைகளால் பாதிக்கப்படாதவை."
நிவேதிதா : "கல் சுத்தியால் தட்டினால் உடைந்துவிடும்"
குருஜி : "என் காலும் அப்படித்தான்"
நிவேதிதா " "நீங்கள் உடல் இல்லை. உங்கள் உடலுக்கு ஒருவிதமான பாதிப்பும் இல்லை. டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னது போல் நீங்கள் யார் என்னென்ன உருவத்தை நினைக்கிறார்களோ அந்த அந்த உருவத்திலும் வருவீர்கள்".

வாகீசகலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள் யோஹியைப் பற்றி பாடிய பாடல் :

தலையிலோர் பாகை உள்ளான்,
தாடி உளான், கையிலோர்
அலைவுறுமோர் விசிறிஉளான்
அங்கையிலோர் ஓடெடுப்பான்
நிலையுள்ள இன்பத்தை
நித்தம் அனுபவிக்கும்
கலையாளன் ராம்சுரத்
குமாரனை நீர்காண்மினரோ

யோகி ராம்சூரத்குமார்
யோகி ராம்சூரத்குமார்
யோகி ராம்சூரத்குமார்
ஜெய் குருராயா

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்