Wednesday, August 10, 2016

எது சிறந்தது?


சத்சங்கம் சிறந்ததா? தவ யோகம் சிறந்ததா?
(ஆர். கார்த்திக், காஞ்சீபுரம்)
ஒருமுறை வசிஷ்டருக்கும், விசுவாமித்திரருக்கும் இடையே தவம் வலிமையுள்ளதா? சத்சங்கம் வலிமை உள்ளதா என்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.  தீர்த்துக்கொள்ள ஆதிசேக்ஷனை அணுகினார்கள்.
பூமி பாரத்தைத் தாங்கிக் கொண்டு என்னால் எப்படி சிந்திக்கமுடியும்? யாராவது இதைக் கையில் வாங்கிக்கொள்ளுங்கள், சிந்தித்து தீர்ப்பு கூறுகிறேன் என்றார் ஆதிசேக்ஷன்.
பதினாயிரம் ஆண்டு தவ வலிமைகளை தந்து பூமியை கையில் வாங்கி னார் விசுவாமித்திரர். பூமி பாரத்தை அவரால் தாங்கமுடியவில்லை. பூமி ஆடத் தொடங்கியது. அவரது கைகள் நடுங்கின. உடனே வசிஷ்டர், தனது சத்சங்கத்தில் அரை கண நேரத்தின் பலனை அர்ப்பணித்து பூமியை வாங்கி நீண்ட நேரம் கையில் வைத்திருந்தார். நேரம் ஆக ஆக பொறுமை இழந்த விசுவாமித்திரர், இவ்வளவு நேரமாகியும் இன்னும் தீர்ப்பு கூறவில்லையே! எனக் கேட்டார். தீர்ப்பின் முடிவைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்றார் ஆதிசேக்ஷன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...