எனது திருநாமத்தை ஆத்மார்த்தமாக ஒரு முறை கூறினால் கிடைக்கும் பலன் அளவுக்கு,
பரிகார பூஜை செய்வதால் பலன் கிடைப்பதில்லை என்பது
பலருக்குத் தெரியாது.
பரிகாரம் என்பது ஏதோ ஒரு தோக்ஷ நிவர்த்திற்காகச் செய்யப்படுகிறது, நாம ஜெபமோ எல்லாத் தடைகளையும் நீக்குகிறது. இதை
உணராதவர்கள் பணத்தையும் நேரத்தையும் பரிகாரத்திற்காகச் செலவிடுகிறார்கள். ஆனால்,
நீயோ அவ்வாறு செய்யாமல்
எந்த இடத்தில் இருக்கிறாயோ அந்த இடத்தில் இருந்தபடியே எனது நாமத்தை ஆத்மார்த்தமாக
உச்சரித்து வா. உனக்குள் மாற்றம் உண்டாகும். உனக்கும் மாற்றம் உண்டாகும்.
பரிகாரத்திற்கும் பக்திக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள். ஓர் அதிகாரியை
நீயாகத் தேடிப்போய் சந்திக்க முடியுமா என்றால், சந்திக்க முடியாது.
சிபாரிசின் பேரில் சந்தித்தாலும் ஓரிரு வார்த்தைகளோடு உன்னுடைய சந்திப்பு
முடிந்துவிடும். பெருமழை பெய்து உன் வீட்டருகே உள்ள கண்மாய் உடைகிறது என்றால்,
அந்த அதிகாரி உடனடியாக
ஓடி வந்து, உடைப்பை சரிசெய்ய
நடவடிக்கை எடுப்பதோடு, உன்னோடும்
பரிவுடன் பேசுவார். உனது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தருவார்.
உனது கண்கள் என்கிற கண்மாய்க் கரை உடைந்து, கண்ணீர் வெள்ளமாய் பெருகும்போது நானும், உனக்கு வேண்டிய
பிற இறை சக்திகளும் ஓடோடி வந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்வோம். உனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.
உனது கண்கள் உடையும் அளவுக்கு கண்ணீர் வரவேண்டும் என்றால், அந்தளவுக்குப் பிரச்சினை தீவிரமாக இருக்கவேண்டும்
அல்லது உனக்கு அதிக பக்தியிருக்க வேண்டும். பிரச்சினை இருந்தாலும், இல்லாமல் போனாலும் பக்தியை வளர்த்துக்கொள்.
எனது லீலைகளை மனதில் நினைத்து, உயர்ந்த நான்,
தாழ்ந்த நிலையில்
உள்ளவர்களுக்காக இறங்கி வந்த தியாகத்தை நினைத்துப் பார். அப்போது உன் உள்ளம் உருகும்.
பக்திப் பெருகும்.
எனக்கு எத்தனையோ திருநாமங்கள் உள்ளன. எத்தனையோ தோற்றங்களில் நான் அவதரித்து
சேவை சாதித்துள்ளேன். உனக்கு எந்தத் திருநாமத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்படுகிறதோ அந்தத் திருநாமத்தையும், அந்த வடிவத்தையும் மனதில் பதிய வைத்துக்கொள்.
அப்போது உன் உள்ளம் உருகும்.
உச்சரிக்கும்போதே உள்ளத்தை உருக்குகிற இறை நாமம் பூர்வ புண்ணியத்தின் விளைவாக
ஒருவருக்கு வாய்க்கிறது. இந்த ஜென்மத்தில் சாயி என்கிற திரு நாமம் உனக்கு
வாய்த்திருக்கிறது. அதனால் இந்தப் பெயரைக்கேட்டதும் உருகுகிறாய். பொருள் தெரியாமல்
நாம பாராயணம் செய்வதால் பலன் கிடைக்காது. ஆனாலும் சில நேரங்களில் நான் பல திருநாமங்களைப்
பாராயணம் செய்யச் சொல்வேன். உதாரணமாக சாமா வுக்கு நான் அளித்த உபாயம் பற்றி
கூறுகிறேன் கேள்.
ஒருமுறை சாமாவுடனும் மற்றவர்களுடனும் நான் எனது தர்பாரில் அமர்ந்திருந்தேன்.
அப்போது ராம பக்தரான ஒரு ராமதாசி, விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை வாசித்துக்
கொண்டிருந்தார். அந்த திருநாமங் களை வாசிப்பதால் வரும் பலனை சாமாவுக்கு
அளித்திட வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது. உடனடியாக, எனக்கு வயிறு வலிப்பதாகவும், சூரணம் வாங்கிவருமாறும்
ராமதாசியிடம் கூறி, அவரை கடைக்கு
அனுப்பிவிட்டு, சாமாவிடம் அந்தப்
புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன்.
வேடிக்கையாக பக்தர்கள் மத்தியில் சண்டையை மூட்டிவிடுவேன் என நினைத்த சாமா, தனக்கும் ராம தாசிக்கும் இடையே சண்டை மூட்ட பாபா நினைக்கிறார் என எண்ணி, புத்தகத்தை வாங்க மறுத்தார். அதற்கான காரணம்
பலவற்றைச் சொன்னார்.
’நான் ஒரு
பட்டிக்காட்டான், எனக்கு அதிலுள்ள
சமஸ்கிருத எழுத்துக்களைப் படிக்கத் தெரியாது, அந்த ராம தாசி ஒரு கோபக்காரன். புத்தகத்தை
எடுத்ததாக என்னுடன் சண்டைக்கு வந்துவிடுவான்!’ என்றார்.
நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். இதயத்தில் திருநாமத்தை வைத்திருந்தாலே போதும்,
பல பிரச்சினைகள்
தீர்ந்துவிடும் என்பதால், நீ புத்தகத்தை
படிக்காமல் மார்போடு அணைத்துக்கொண்டாலே பலன் வந்துவிடும். ஆபத்துக் காலத்தில் அது
மிகச்சிறந்த நிவாரணம் தரும் என்றேன்.
இதிலுள்ள திருநாமங்களில் தினம் ஒன்றை பாராயணம் செய்தாலே போதும், உனது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
இறைவனே கீழிறங்கி வருவார். உனக்கு நன்மை நடக்கும் எனக் கூறினேன்.
உனது வழியில் என்னை நினைத்துக் கொள். நேரம் கிடைக்கும் போது நாம ஜெபம் செய். உண்மையாகவே எல்லா பாவத்திலிருந்தும் விடு
தலையாகவும், நன்மைகளை அடையவும்,
மனத்தை தூய்மை செய்துகொள்ளவும், சடங்குகள் போன்ற பிற சாதனை முறைகளின்றி என்
அருளைப் பெறவும் நாம ஜெபமே எளிய வழி. இதை சாமாவுக்குச்சொன்னதைப்போல உனக்கும்
கூறுகிறேன்.
இனி வரும் காலம் முழுதும் உனக்கு நன்மை
தரும் வகையில் அமைய, ஆத்மார்த்தமான உணர்வோடும், உறுதியோடும், அன்போடும் என் திருநாமத்தை உச்சரிக்கத் துவங்கு.
மாற்றம் நிச்சயம் வரும், நான் உனக்காக இறங்கி வருவேன். இது சத்தியமான வார்த்தையாகும்.
No comments:
Post a Comment