Thursday, June 4, 2015
வருவாய் வருவாய் சாயிநாதா!
வருவாய்
வருவாய் சாயி நாதா!
மீண்டும்
வருவாய் சாயி நாதா!
தருவாய்
தருவாய் சாயி நாதா!
நலமெலாம்
தருவாய் சாயி நாதா!
நாங்களெல்லாம்
உன்குழந்தை சாயி நாதா!
தாயாய்
எமைஅணைப்பாய் சாயி நாதா!
தாய்ப்பாசம்
உன் கண்ணில் சாயி நாதா!
சேயான
எமைக் காப்பாய் சாயி நாதா!
தாயன்பு
உன்கண்ணில் சாயி நாதா!
தரணியை
அது வாழவைக்கும் சாயி நாதா!
நோய்
நொடிகள் அண்டாமல் சாயி நாதா!
தினம்
எம்மைக் காத்தருள்வாய்
சாயி நாதா!
நோயின்
தாக்கம் உடன் நீங்க சாயி நாதா!
உன்
அருள்தான் உடன்வேண்டும்
சாயி நாதா!
பயிர்
காக்கும் மழையாக சாயி நாதா!
உயிர்
காக்க வந்தருள்வாய்
சாயி நாதா!
மற்றவர்கள்
துயர்கண்டு சாயி நாதா!
மனம்
துடித்து அழுதவரே சாயி நாதா!
மற்றவர்கள்
நலன் வேண்டி சாயி நாதா!
மனம்
உருகித் துதித்தவரே
சாயி நாதா!
மலரனைய
முகத்தவரே சாயி நாதா!
பிஞ்சு
மலரையெல்லாம் காத்தருள்வாய்
சாயி நாதா!
பிஞ்சு
மழலைச் செல்வமெல்லாம் சாயி நாதா!
நெஞ்சினிக்க
வாழவேண்டும் சாயி நாதா!
சின்னஞ்சிறு
குழந்தையெல்லாம் சாயி நாதா!
சீருடனே
வாழவேண்டும் சாயி நாதா!
சிறப்புடனே
அவர் வாழ சாயி நாதா!
மறுக்காமல்
வந்துதிப்பாய் சாயி நாதா!
நல்லதையே
நினைக்கவேண்டும் சாயி நாதா!
நல்லவையே
செய்யவேண்டும் சாயி நாதா!
நல்லவையே
நடக்கவேண்டும் சாயி நாதா!
நலம்
எங்கும் நிலைக்கவேண்டும்
சாயி நாதா!
சுயநலங்கள்
அழியவேண்டும் சாயி நாதா!
சுற்றுச்சூழல்
காக்கவேண்டும் சாயி நாதா!
அறநெறிகள்
தழைக்கவேண்டும் சாயி நாதா!
அதற்காக
வந்துதிப்பாய் சாயிநாதா!
தீச்செயல்கள்
விலகவேண்டும் சாயிநாதா!
தீமையெல்லாம்
அகலவேண்டும் சாயி நாதா!
மதச்சண்டை
மாயவேண்டும் சாயி நாதா!
மனிதநேயம்
மலரவேண்டும் சாயி நாதா!
மாசற்ற
மனம்வேண்டும் சாயி நாதா!
மனிதர்களாய்
வாழவேண்டும் சாயி நாதா!
நீதிநியாயம்
நிலைத்திடவே சாயி நாதா!
நீ
மீண்டும் வந்திங்குதிப்பாய் சாயி
நாதா!
சீரடிக்குப்
புகழ்தந்த சாயிநாதா!
இவ்வுலகைச்
சீர்செய்ய வந்துதிப்பாய்
சாயி நாதா!
பெருஞ்சீரழிவைத்
தடுத்திடவே சாயி நாதா!
சீக்கிரமே
வந்துதிப்பாய் சாயி நாதா!
உலகம்
உய்ய வந்துதிப்பாய்
சாயி நாதா!
உள்ளம்
உருக வேண்டுகிறேன் சாயி நாதா!
மீண்டும்
மீண்டும் வேண்டுகிறேன் சாயி நாதா!
மீண்டும்
வந்திங்கு உதிப்பாய் சாயி நாதா!
மீண்டும்
வருவாய் சாயி நாதா!
கவிதையாக்கம்:
வழக்கறிஞர்
என். எஸ். ராஜன்
வழக்கறிஞர்,
உச்ச நீதிமன்றம்
Wednesday, June 3, 2015
என்னை உணர்ந்து கொள்!
என்னை
எவன் மிகவும் விரும்புகிறானோ, அவன்
எப்போதும் என்னைக் காண்கிறான். என்னை
விட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது. எனது கதைகளைத் தவிர பிறவற்றை அவன்
கூறுவதில்லை. இடையறாது
என்னையே தியானித்து என் நாமத்தையே ஜபம்
செய்கிறான்.
முழுமையாக
தன்னை என்னிடம் சமர்ப்பித்து என்னையே எப்போதும் எவன் நினைவில் கொண்டிருக்கிறானோ அவனுக்கு நான்
கடன் பட்டதாக உணர்கிறேன். அவனுக்கு விடுதலை அளித்து எனது கடனைத் தீர்ப்பேன்.
என்னை நினைத்து எனக்காக ஏங்குபவனையும், எதையும்
முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன் பாலும், நான் சார்ந்திருக்கிறேன்.
இங்ஙனம்,
என்னிடம் வருபவன் ஆறானது கடலுடன் ஒன்றாவது
போல், என்னுடன் இரண்டறக் கலக்கிறான். பெருமையையும், அகங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம்கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தே
அமர்ந்து கொண்டிருக்கிற என்னிடம், உங்களைப் பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக, நீங்கள் தொலை தூரமோ, அல்லது
எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போக
வேண்டாம். உங்களது நாமத்தையும் ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப்
பெற்றிருக்கும் உணர்வு,
நிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும்.
இதை
உணர்ந்துகொண்டு உங்களிடத்தும் எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக் காண்பீர்களாக. இதை
நீங்கள் பயிற்சி செய்தால், சர்வ
வியாபகத்தை உணர்ந்து
என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள். ஸ்ரீ சாயி பாபா
பாபாவுடன்
ஒன்றி அவரைப் போல் ஆனவர்கள் சிவநேசன்
சுவாமிகள், நரசிம்ம சுவாமிகள், விபூதி பாபா, கரூர்
நரசிம்ம
சுவாமிகள், ஆந்திர மாநிலம் பரத்வாஜ
சுவாமிகள் மற்றும் ராதாகிருஷ்ணன் சுவாமிகள் ஆகியோர். இவர்கள்
சத்குருக்கள் என அழைக்கப்படும் தகுதியைப் பெற்றிருக் கிறார்கள். இவர்களிடம் வேண்டினாலே மிகப் பெரிய அற்புதங்கள் நடக்கும்.
பாபாவை
அனைத்திலும் பார்த்த
முதல் மனிதன் நெவாஸ்கர். தனது வீட்டில் நல்லப்பாம்பு
ஒன்று வந்து சீறியபோது, அனைவரும் பயந்தார்கள். ஆனால் வந்திருப்பது பாபா
என்று கூறி, பாம்புக்குப் பால் வார்த்தார்.
பாலை அருந்திய பாம்பு மறைந்தது.
Monday, June 1, 2015
பொறுமை போதனை சரியா?
கஷ்டத்தோடு
உங்களை தரிசிக்க வந்தால், கஷ்டத்தை சகித்துக்கொண்டு பொறுமையோடு இருங்கள். பாபா சரிசெய்துவிடுவார் என்று போதனை செய்து
அனுப்புகிறீர்கள். எங்களுக்குத் தெரிந்த ஒன்றை எங்களிடமே
எதற்காக சொல்லி அனுப்பி, எங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?
( என்.
முத்துராமன், காஞ்சீபுரம்)
உங்களுக்குத்
தெரிந்த ஒன்றாக இருக்கிற விக்ஷயம்,
உங்களால் உணர முடியாத விக்ஷயமாக
இருக்கிறது. உங்கள்
நேரத்தையல்ல, கஷ்டத்தை வீணடிக்கவே நான் அவ்வாறு சொல்கிறேன்.
பாபா சொன்னார்: உனக்கும்
எனக்கும் நடுவிலுள்ள நீ, நான் என்னும்
மதில் சுவரை உடைத்து முழுக்க
நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும் வரவும் பயமில்லாத
ஒரு மங்களமான பாதை கிடைத்துவிடும் என்று.
எத்தகைய
நிலையிலும் பாபா நமக்குள்ளிருக்கிறார் என்ற உணர்வும்,
தெளிவும் இருந்தால் நமக்கு பதற்றம்
வராது. நம்மைத் தாக்குகிற எதுவும்
அவரைத் தாக்குகிறது என்ற தௌpவிருந்தால்
நமக்கு சோதனை தெரியாது. நாம் பயப்படாமல் இருப்போம்.
அவர் உங்களுக்குள் இருக்கும்போது நீங்கள் அவராகவே இருக்கிறீர்கள். ஆகவே, கடவுளுக்குக் கஷ்டமில்லை.
அது அவரது லீலை என
அறிந்திருப்பதால், தாமாகச்
சரியாகிவிடும் என்கிறேன், அவ்வளவுதான்.
Subscribe to:
Posts (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ' அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் ' என்றான். மன்னரும்...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
1. ஓம் சிவ லிங்கமே போற்றி 2. ஓம் அங்க லிங்கமே போற்றி 3. ஓம் அபய லிங்கமே போற்றி 4. ஓம் அமுத லிங்கமே போற்றி 5. ஓம் அபிஷேக லிங்கமே...


