Monday, June 1, 2015

பொறுமை போதனை சரியா?

கஷ்டத்தோடு உங்களை தரிசிக்க வந்தால், கஷ்டத்தை சகித்துக்கொண்டு பொறுமையோடு இருங்கள். பாபா சரிசெய்துவிடுவார் என்று போதனை செய்து அனுப்புகிறீர்கள். எங்களுக்குத் தெரிந்த ஒன்றை எங்களிடமே எதற்காக சொல்லி அனுப்பி, எங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?
( என். முத்துராமன், காஞ்சீபுரம்)
உங்களுக்குத் தெரிந்த ஒன்றாக இருக்கிற விக்ஷயம், உங்களால் உணர முடியாத விக்ஷயமாக இருக்கிறது. உங்கள் நேரத்தையல்ல, கஷ்டத்தை வீணடிக்கவே நான் அவ்வாறு சொல்கிறேன்
பாபா சொன்னார்:  உனக்கும் எனக்கும் நடுவிலுள்ள நீ, நான் என்னும் மதில் சுவரை உடைத்து முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும் வரவும் பயமில்லாத ஒரு மங்களமான பாதை கிடைத்துவிடும் என்று.
எத்தகைய நிலையிலும் பாபா நமக்குள்ளிருக்கிறார் என்ற உணர்வும், தெளிவும் இருந்தால் நமக்கு பதற்றம் வராது. நம்மைத் தாக்குகிற எதுவும் அவரைத் தாக்குகிறது என்ற தௌpவிருந்தால் நமக்கு சோதனை தெரியாது. நாம் பயப்படாமல் இருப்போம். அவர் உங்களுக்குள் இருக்கும்போது நீங்கள் அவராகவே இருக்கிறீர்கள். ஆகவே, கடவுளுக்குக் கஷ்டமில்லை. அது அவரது லீலை என அறிந்திருப்பதால், தாமாகச் சரியாகிவிடும் என்கிறேன், அவ்வளவுதான்.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...