Thursday, June 4, 2015

வருவாய் வருவாய் சாயிநாதா!



வருவாய் வருவாய் சாயி நாதா!
மீண்டும் வருவாய் சாயி நாதா!
தருவாய் தருவாய் சாயி நாதா!
நலமெலாம் தருவாய் சாயி நாதா!
நாங்களெல்லாம் உன்குழந்தை சாயி நாதா!
தாயாய் எமைஅணைப்பாய் சாயி நாதா!
தாய்ப்பாசம் உன் கண்ணில் சாயி நாதா!
சேயான எமைக் காப்பாய் சாயி நாதா!
தாயன்பு உன்கண்ணில் சாயி நாதா!
தரணியை அது வாழவைக்கும் சாயி நாதா!
நோய் நொடிகள் அண்டாமல் சாயி நாதா!
தினம் எம்மைக் காத்தருள்வாய் சாயி நாதா!
நோயின் தாக்கம் உடன் நீங்க சாயி நாதா!
உன் அருள்தான் உடன்வேண்டும் சாயி நாதா!
பயிர் காக்கும் மழையாக சாயி நாதா!
உயிர் காக்க வந்தருள்வாய் சாயி நாதா!
மற்றவர்கள் துயர்கண்டு சாயி நாதா!
மனம் துடித்து அழுதவரே சாயி நாதா!
மற்றவர்கள் நலன் வேண்டி சாயி நாதா!
மனம் உருகித் துதித்தவரே சாயி நாதா!
மலரனைய முகத்தவரே சாயி நாதா!
பிஞ்சு மலரையெல்லாம் காத்தருள்வாய் சாயி நாதா!
பிஞ்சு மழலைச் செல்வமெல்லாம் சாயி நாதா!
நெஞ்சினிக்க வாழவேண்டும் சாயி நாதா!
சின்னஞ்சிறு குழந்தையெல்லாம் சாயி நாதா!
சீருடனே வாழவேண்டும் சாயி நாதா!
சிறப்புடனே அவர் வாழ சாயி நாதா!
மறுக்காமல் வந்துதிப்பாய் சாயி நாதா!
நல்லதையே நினைக்கவேண்டும் சாயி நாதா!
நல்லவையே செய்யவேண்டும் சாயி நாதா!
நல்லவையே நடக்கவேண்டும் சாயி நாதா!
நலம் எங்கும் நிலைக்கவேண்டும் சாயி நாதா!
சுயநலங்கள் அழியவேண்டும் சாயி நாதா!
சுற்றுச்சூழல் காக்கவேண்டும் சாயி நாதா!
அறநெறிகள் தழைக்கவேண்டும் சாயி நாதா!
அதற்காக வந்துதிப்பாய் சாயிநாதா!
தீச்செயல்கள் விலகவேண்டும் சாயிநாதா!
தீமையெல்லாம் அகலவேண்டும் சாயி நாதா!
மதச்சண்டை மாயவேண்டும் சாயி நாதா!
மனிதநேயம் மலரவேண்டும் சாயி நாதா!
மாசற்ற மனம்வேண்டும் சாயி நாதா!
மனிதர்களாய் வாழவேண்டும் சாயி நாதா!
நீதிநியாயம் நிலைத்திடவே சாயி நாதா!
நீ மீண்டும் வந்திங்குதிப்பாய் சாயி நாதா!
சீரடிக்குப் புகழ்தந்த சாயிநாதா!
 இவ்வுலகைச் சீர்செய்ய வந்துதிப்பாய் சாயி நாதா!
 பெருஞ்சீரழிவைத் தடுத்திடவே சாயி நாதா!
சீக்கிரமே வந்துதிப்பாய் சாயி நாதா!
உலகம் உய்ய வந்துதிப்பாய் சாயி நாதா!
உள்ளம் உருக வேண்டுகிறேன் சாயி நாதா!
மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன் சாயி நாதா!
மீண்டும் வந்திங்கு உதிப்பாய் சாயி நாதா!
மீண்டும் வருவாய் சாயி நாதா!

கவிதையாக்கம்:
வழக்கறிஞர் என். எஸ். ராஜன்
வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...