Monday, July 3, 2017

சகிப்புத்தன்மை


பொறுமையும், சகிப்புத்தன்மையுமே தைரியம், அதைத் தொலைத்து விடாதீர்கள். எப்பொழுது பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அது உங்களைக் கரைசேர்க்கும்.
சகிப்புத்தன்மைதான், ஒரு மனிதனிடம் இருக்கும் ஆண்மை. இதுவே பாவங்களையும் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் வெல்கிறது. சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது.
பண்டிதராக இருந்தாலும் சரி, நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி, சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும்.
குரு  மகாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
----ஷீரடி சாய்பாபா                        

Sunday, July 2, 2017

உன்னை என் உயிராக நேசிக்கிறேன்


என் அன்பு குழந்தையே!
உனக்கு ஏன் என் மீது இவ்வளவு கோபம், உன் சாய் அப்பா உன்னைக் கஷ்டப்படுத்துவேன் என்று நீ நினைக்கிறாயா, உனக்காக எல்லாக் கஷ்டங்களையும் நான் தாங்கிக்கொள்வேன்; உன்னைச் சில நேரங்களில் நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது, உன் வாழ்க்கையில் நீ மிக மெல்லிய நூலைப் போன்று இருக்கிறாய், சின்னதாக ஒரு கீரல் பட்டாலும் மனதளவில் உடைந்து போகிறாய், அப்போது உன் மனதில் தேவை இல்லாத எண்ணங்களும் சிந்தனைகளும் எழுகின்றதால் நிம்மதி இல்லை என்று புலம்புகிறாய், உன் மனதை என்னிடம் விட்டுவிட்டாய். அதனால் நீ எதற்கும் பயப்படாதே, சில நேரம் உன் சாய் அப்பா நல்லது தான் செய்வேன் என்று உறுதியில் இருக்கிறாய், சில விஷயங்களில் அந்த உறுதியை மறந்து போகிறாய், உன் அன்பு என்பது எனக்கு என் பிள்ளை கொடுக்கின்ற பரிசு. அது உன்னிடம் உன் சாய் அப்பாக்கு நீ தினம் தோறும் நீ கொடுக்கிறாய், கொடுப்பாய், உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. விலகி போகும் படி செய்வதும் இல்லை, நான் சாய் அப்பா சொன்னதைத்தான் கேட்பேன் என்று நீ சொல்லுகையில் எனக்கு ஆனந்தம் ஏற்படும் அளவை சொல்ல வார்த்தைகள் அல்ல, அதே சமயம் உன்னைச் சுற்றி  இருப்பவர்கள் மீதும், உன் நம்பிக்கை இருப்பதனால் அவர்கள் சொல்லுக்கும் நீ செவி கொடுக்கிறாய், உன் நல்லதை உன் சாய் அப்பா சிறு நிகழ்வுகளால் கிடைக்கும் பாடம், வலி என்பதில் இருந்து வாழ்க்கையும், உன் சுற்றி இருப்பவர்களும், எப்படி இருக்கிறார்கள் என்பதை உன் மனதில்  இறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உனக்கு புரிய வைக்கின்றேன். நீ அழாதே. உன் கவலையை விடு. உன் அன்பு முக்கியமானது எனக்கு அது உன்னதமானது. உண்மையானது. அதில் நீ சந்தேகம் கொள்ளாதே, உனக்கு என்ன நடந்தாலும்,  நீ நினைக்கின்றவர்களில், நான் உன் சாய் அப்பாதான் என்பது எனக்கு தெரியும்.  என் கண்ணே,  உன்னை என் உயிராக நேசிக்கிறேன். உன் அம்மாவாக அப்பாவாக இருந்து என் கருவில் என் கையில் சுமந்து பாதுகாத்து தாங்குவேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

என் அன்பு குழந்தையே!



என் அன்பு குழந்தையே!
உன்னைக் கரைச் சேர்க்கத்தான், நான் இங்கு சில நிகழ்வுகளை நடத்திக் கொண்டு இருக்கிறேன் அதைப்புரிந்து உன் வேலையை நீ சரியாகச் செய். அலட்சியமாக இருக்காதே. உன்னிடம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எண்ணமாகத்தான் இதுவரை உன்னிடம் இருக்கிறது. அதை நீ செயலில் செய்யாமல் இருக்கிறாய்.
எல்லாம் உன் வசம் வரும் காலத்தை நீ நெருங்கி விட்டாய். இந்த நேரத்தில் உன் மனதில் வேறு எந்தவிதமான சிறு அலட்சியமான எண்ணங்கட்கும் இடம் கொடுக்காதே. உன்னை நான் வாழ்வில் உயர்த்தி நடத்தத்தான் இங்கு உனக்கான நேரத்தை தரப்போராடுகிறேன்.
என் பிள்ளை பொறுப்பாளியாய், அவர்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். உன் அலட்சிய போக்கைத்தூக்கி வெளியே எறி.
உன் வாழ்க்கையில் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய். உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. விலகிப்போகும்படி நான் செய்வதும் இல்லை. உன் அம்மாவாக அப்பாவாக இருந்து என்றும் உன்னை நான் காப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய் அப்பா!!!

Saturday, July 1, 2017

என் செல்லப் பிள்ளையல்லவா நீ !!!



என் அன்புக் குழந்தையே!
உன் வாழ்க்கையில் சில நினைவுகள்,  மனதில் வடுவாய் அமர்ந்து ஆழ்ந்து அழுத்தி, மேலும் சிந்திக்க விடாமல், வேதனை என்னும் படுக்குழியில் தள்ளி, உன் வாழ்க்கையில் நீ முன்னேற வேண்டும் என்ற எண்ணத்திற்கு அது தடையாய் இருப்பதனால், திக்குத் தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறாய்.
நீ எதிர்காலத்தை யோசித்து எடுத்துள்ள முடிவை, அவர்கள் யோசிப்பது இல்லை, நீ அவர்களை காயப்படுத்தினாய் என்பது மட்டும்  தான் அவர்களுக்கு புரியும், அவர்களுக்கான சூழ்நிலை புரிந்துத்தான் முடிவை நீ எடுத்தாய் என்பது அவர்களுக்கு புரியாது. அதை எதிர்பார்த்தால் கடைசியில் நீ தான் காயப்பட்டு நிற்பாய்.  
நம்மை நேசித்தவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்று தானே வேதனை அடைகிறாய். எதற்கும் கலங்காதே உன் சாய் அப்பா உனக்காகத்தான் இருக்கிறேன் உன்னை நிச்சயம் முன்னேற வைத்து வெற்றி பெற வைப்பேன். என்னை நம்பு. பொறுமையாக இரு. எல்லாவற்றையும் கடக்க நான் உதவுகிறேன். உன் மனதை மட்டும் என்னிடம் நிறுத்தி அமைதியாக இரு. பிறகு உனக்கு நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்கும். அதற்காக நான் உன்னுள் இருக்கும்  பக்தியை கண்டு  வியக்கிறேன். உன் அன்பை உணரும் அந்த நிமிடங்கள் என் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் வருகிறது. 
சாய் அப்பா என்றால் உயிராய்  நினைக்கும் என் குழந்தை, என் மீது பக்தியும் பாசமும் செலுத்துகிறாய். உன்னிடம் உன் சாய் அப்பாவாகிய நான் எதிர்பார்ப்பது இன்னும் கொஞ்சம் பொறுமையாகவும்  நம்பிக்கையுடனும் மேலும் சில காலம் காத்திரு.
உனக்கான பரிசை உன் சாய்அப்பா நிச்சயம் தருவேன். உன் அம்மாவாக அப்பாவாக இருப்பேன். என் கண் இமையில் வைத்து கருவரையில் காப்பது போல் உன்னை வளர்ப்பேன்.

உதி உன் விதியையே மாற்றும்.


உதி என்பது வெறும் சாம்பல் அல்ல. அது நான் உங்களுக்கு ஆசிர்வதித்துக் கொடுத்த சக்தி வாய்ந்த பிரசாதம். அதைப் பெறுவதென்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. என்னுடைய பரிபூர்ண  ஆசிர்வாதம் இருந்தாலொழிய உரிய நேரத்தில் அதாவது உங்களுக்கு  தேவைப்படும் நேரத்தில் கிடைக்காது. 'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்று ஒரு பழமொழி உண்டு. அதே போல் 'பாபாவின் உதியுடையோன் உயிருக்கஞ்சான் ' என்று சொல்லலாம். உடல் நலமில்லாமல் இருப்பவர்கள், என் உதியை, என்னை  வணங்கி நெற்றியில்  இட்டுக் கொண்டு , பின் சிறிது தண்ணீரில் கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். எந்த நல்ல காரியங்களுக்காக போனாலும் என் உதியை உன் கையோடு எடுத்துச்சென்றால் வெற்றி நிச்சயம். என் உதி உன் விதியையே மாற்றும்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...