என் அன்பு குழந்தையே!
உனக்கு ஏன் என் மீது இவ்வளவு கோபம், உன் சாய் அப்பா உன்னைக்
கஷ்டப்படுத்துவேன் என்று நீ நினைக்கிறாயா, உனக்காக எல்லாக் கஷ்டங்களையும் நான் தாங்கிக்கொள்வேன்; உன்னைச் சில நேரங்களில்
நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது, உன் வாழ்க்கையில் நீ மிக மெல்லிய நூலைப் போன்று இருக்கிறாய், சின்னதாக ஒரு கீரல்
பட்டாலும் மனதளவில் உடைந்து போகிறாய், அப்போது உன் மனதில் தேவை இல்லாத எண்ணங்களும் சிந்தனைகளும்
எழுகின்றதால் நிம்மதி இல்லை என்று புலம்புகிறாய், உன் மனதை என்னிடம்
விட்டுவிட்டாய். அதனால் நீ எதற்கும் பயப்படாதே, சில நேரம் உன் சாய் அப்பா
நல்லது தான் செய்வேன் என்று உறுதியில் இருக்கிறாய், சில விஷயங்களில் அந்த
உறுதியை மறந்து போகிறாய், உன் அன்பு என்பது எனக்கு என் பிள்ளை கொடுக்கின்ற பரிசு. அது உன்னிடம் உன்
சாய் அப்பாக்கு நீ தினம் தோறும் நீ கொடுக்கிறாய், கொடுப்பாய், உன்னை விட்டு நான்
விலகுவதும் இல்லை. விலகி போகும் படி செய்வதும் இல்லை, நான் சாய் அப்பா சொன்னதைத்தான்
கேட்பேன் என்று நீ சொல்லுகையில் எனக்கு ஆனந்தம் ஏற்படும் அளவை சொல்ல வார்த்தைகள்
அல்ல, அதே சமயம் உன்னைச்
சுற்றி இருப்பவர்கள் மீதும், உன் நம்பிக்கை
இருப்பதனால் அவர்கள் சொல்லுக்கும் நீ செவி கொடுக்கிறாய், உன் நல்லதை உன் சாய் அப்பா
சிறு நிகழ்வுகளால் கிடைக்கும் பாடம், வலி என்பதில் இருந்து வாழ்க்கையும், உன் சுற்றி
இருப்பவர்களும், எப்படி இருக்கிறார்கள் என்பதை உன் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்
என்று நான் உனக்கு புரிய வைக்கின்றேன். நீ அழாதே. உன் கவலையை விடு. உன் அன்பு
முக்கியமானது எனக்கு அது உன்னதமானது. உண்மையானது. அதில் நீ சந்தேகம் கொள்ளாதே, உனக்கு என்ன நடந்தாலும், நீ
நினைக்கின்றவர்களில், நான் உன் சாய் அப்பாதான் என்பது எனக்கு தெரியும். என் கண்ணே,
உன்னை என் உயிராக நேசிக்கிறேன். உன் அம்மாவாக அப்பாவாக இருந்து என் கருவில் என்
கையில் சுமந்து பாதுகாத்து தாங்குவேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
No comments:
Post a Comment