Saturday, July 1, 2017

என் செல்லப் பிள்ளையல்லவா நீ !!!



என் அன்புக் குழந்தையே!
உன் வாழ்க்கையில் சில நினைவுகள்,  மனதில் வடுவாய் அமர்ந்து ஆழ்ந்து அழுத்தி, மேலும் சிந்திக்க விடாமல், வேதனை என்னும் படுக்குழியில் தள்ளி, உன் வாழ்க்கையில் நீ முன்னேற வேண்டும் என்ற எண்ணத்திற்கு அது தடையாய் இருப்பதனால், திக்குத் தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறாய்.
நீ எதிர்காலத்தை யோசித்து எடுத்துள்ள முடிவை, அவர்கள் யோசிப்பது இல்லை, நீ அவர்களை காயப்படுத்தினாய் என்பது மட்டும்  தான் அவர்களுக்கு புரியும், அவர்களுக்கான சூழ்நிலை புரிந்துத்தான் முடிவை நீ எடுத்தாய் என்பது அவர்களுக்கு புரியாது. அதை எதிர்பார்த்தால் கடைசியில் நீ தான் காயப்பட்டு நிற்பாய்.  
நம்மை நேசித்தவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்று தானே வேதனை அடைகிறாய். எதற்கும் கலங்காதே உன் சாய் அப்பா உனக்காகத்தான் இருக்கிறேன் உன்னை நிச்சயம் முன்னேற வைத்து வெற்றி பெற வைப்பேன். என்னை நம்பு. பொறுமையாக இரு. எல்லாவற்றையும் கடக்க நான் உதவுகிறேன். உன் மனதை மட்டும் என்னிடம் நிறுத்தி அமைதியாக இரு. பிறகு உனக்கு நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்கும். அதற்காக நான் உன்னுள் இருக்கும்  பக்தியை கண்டு  வியக்கிறேன். உன் அன்பை உணரும் அந்த நிமிடங்கள் என் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் வருகிறது. 
சாய் அப்பா என்றால் உயிராய்  நினைக்கும் என் குழந்தை, என் மீது பக்தியும் பாசமும் செலுத்துகிறாய். உன்னிடம் உன் சாய் அப்பாவாகிய நான் எதிர்பார்ப்பது இன்னும் கொஞ்சம் பொறுமையாகவும்  நம்பிக்கையுடனும் மேலும் சில காலம் காத்திரு.
உனக்கான பரிசை உன் சாய்அப்பா நிச்சயம் தருவேன். உன் அம்மாவாக அப்பாவாக இருப்பேன். என் கண் இமையில் வைத்து கருவரையில் காப்பது போல் உன்னை வளர்ப்பேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...